அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சுழற்சி முறையில் மகப்பேற்று நிபுணரை நியமிக்க நடவடிக்கை-சுகாதார அமைச்சர்.(PHOTOS)

வடமாகாணத்தில் இருக்கின்ற வைத்தியசாலைகளில் இரண்டு மகப்பேற்று நிபுணர்கள் கடமையாற்றுகின்ற வைத்தியசாலைகளுடன் கலந்துரையாடி அவர்களில் ஒருவருடைய பதில் கடமையினை  சுழற்சி முறையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தொடர்ச்சியாக மகப்பேற்று வைத்திய நிபுணர் இல்லாத நிலை தொடர்பாகவும், மக்களின் பிரச்சினை குறித்தும் அமைச்சரின் மன்னாரில் உள்ள உப அலுவலகத்தில் இன்று(19) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,,

வடமாகாணத்தில் உள்ள பல வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறை பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது.

எமது மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள பொது வைத்தியசாலைகளில் குறிப்பாக வவுனியாவை பொருத்தவரையில் பொது வைத்திய சாலை, யாழ்ப்பாணத்தில் இரண்டு பொது வைத்தியசாலைகள் காணப்படுகின்றது.

-எங்களைப்பொறுத்தவரையிலே இவ்வைத்தியசாலைகளிலே சரியான எண்ணிக்கையுடைய வைத்திய நிபுணர்கள் நியமிக்கப்படவில்லை என்பது உண்மை.

-வைத்திய நிபுணர்களின் நியமனம் தொடர்பாக மத்திய அரசாங்கமும், மருத்துவர்களின் சங்கமுமே அவற்றை தீர்மானிக்கின்றனர்.

-நாங்கள் ஒவ்வெறு முறையும்,ஒவ்வெறு வருடமும் எங்களுடைய வைத்தியசாலையில் இருக்கின்ற வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறை தொடர்பில் மத்திய அரசாங்கத்திற்கு தெரியப்படுத்திக்கொண்டிருக்கின்றோம்.

-ஆனால் அங்கே இருந்து வைத்திய நிபுணர்கள் நியமிக்கப்படுவதும்,வைத்தியசாலையில் காணப்படுகின்ற வைத்திய நிபுனர்களின் வெற்றிடங்களை வெளிக்காட்டுவதும் சரியான முறையில் மேற்கொள்ளப்படுவது இல்லை.

-ஆகக்குறைந்தது ஒரு துறையை பொறுத்தவரையில் இரண்டு வைத்திய நிபுணர்கள் இருக்க வேண்டிய கட்டாயப்பாடு இருக்கின்றது.

-அப்படி இல்லாது விட்டால் ஒருவருடைய கடமை விடுமுறை அல்லது சொந்த விடுமுறையை எடுக்கின்ற போது அங்கே கடமை ஆற்ற மேலும் ஒரு வைத்திய நிபுணர் இருக்க வேண்டும்.

-ஆனால் வடமாகாணத்தில் சில வைத்தியசாலைகளில் ஒரு சிகிச்சை பிரிவில் ஒரு வைத்திய நிபுணர் மாத்திரமே கடமையாற்றுகின்றார்.சில சிகிச்சை பிரிவில் ஒரு வைத்திய நிபுணர் கூட இல்லாத நிலை உள்ளது.

-தற்போது கடந்த பல தினங்களாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மகப்பேற்று சிகிச்சை வைத்திய நிபுணர் இல்லாத நிலை பாரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

-ஏற்கனவே அங்கே கடமையாற்றிய மகப்பேற்று வைத்திய நிபுணர் வெளிநாட்டு பயிற்சியை முடிக்க காத்திருந்த பதில் வைத்திய நிபுனராக இருந்தார்.

-அவருக்கான வெளிநாட்டு பயிற்சிக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே அவர் வெளிநாடு சென்று பயிற்சி நெறியை முடிக்க வேண்டிய தேவை உள்ளது.

கல்வி விடையமாக அவர் வெளிநாடு செல்ல வேண்டிய தோவை உள்ளமையினால் நாங்கள் தவிர்க்க முடியாத காரணத்தினால் விடுவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

-மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மகப்பேற்று வைத்திய நிபுணரின் தேவை கருதி பல தடவைகள் நாங்கள் மத்திய சுகாதார அமைச்சிற்கு அறிவித்துள்ளோம்.

சுகாதார அமைச்சர்,சுகாதார பணிப்பாளர் நாயகம் ஆகியோருடம் கலந்துரையாடியுள்ளேன்.

வெளிநாட்டு பயிற்சியை முடித்துக்கொண்டு நாட்டிற்குள் முதலாவதாக வருகின்ற மகப்பேற்று நிபுனரை கட்டாயமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நிறந்தரமாக நியமிப்பதற்கு நடவடிக்கைகளை எடுப்பதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மகப்பேற்று நிபுணர் ஒருவர் கூட இல்லாத நிலையில் தொடர்ந்து வைத்திருப்பது கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பாரிய பிரச்சினையாக காணப்படுவதோடு, அபாயகரமான சூழ்நிலையை தோற்றுவிக்கின்றது.

ஆகவே மாகாணத்திற்குள்ளே இரண்டு மகப்பேற்று நிபுணர்கள் கடமையாற்றுகின்ற  வைத்தியசாலைகளுடன் பேசி ஒருவருடைய பதில் கடமையை சுழற்சி முறையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவில் மேற்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

இவ்விடையம் தொடர்பில் கிளிநொச்சி வைத்தியசாலையுடனும் தொடர்பு கொண்டுள்ளோம்.

அங்கே இரண்டு வைத்திய நிபுணர்கள் மகப்பேற்று தொடர்பாக உள்ளமையினால் ஒருவரை நாங்கள் மன்னாரிற்கு சுழற்சி முறையில் அழைத்திருக்கின்றோம்.

-யாழ்ப்பாணத்தில் கூட தெல்லிப்பளை வைத்தியசாலையில் இருக்கின்ற மகப்பேற்று நிபுணர்களையும் சுழற்சி முறையில் மன்னார் மாவட்ட கர்ப்பிணித்தாய்மார்களின் அரோக்கியத்திற்காக உதவி செய்ய அழைத்திருக்கின்றோம்.

இவ்விடையம் தொடர்பில் மாகாண  பணிப்பாளர்,பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு அறிவூறுத்தல் வழங்கியுள்ளேன்.

-தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள மகப்பேற்று நிபுணரின் பிரச்சினை தொடர்பில் சுமுகமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வழிவகைகளை ஏற்படுத்திக்கொள்ள அறிவூறுத்தியுள்ளேன்.என மேலும் தெரிவித்தார்.
-மன்னார் நிருபர்-

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சுழற்சி முறையில் மகப்பேற்று நிபுணரை நியமிக்க நடவடிக்கை-சுகாதார அமைச்சர்.(PHOTOS) Reviewed by Author on January 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.