அண்மைய செய்திகள்

recent
-

கலைஞனின் அகம் கணனியில் முகம் விம்பம் பகுதியில்....I.C.A.ஜோண்பொஸ்கோ



கலைஞனின் அகம் கணனியில் முகம் விம்பம் பகுதியில் அகிலஇலங்கை சமாதானநீதவானும் நாடக நடிகரும் நெறியாளருமாகிய சந்திரகாசன் என்று அழைக்கப்படும் இசிதோர் கிறிஸ்ரி அன்ரன் ஜோண்பொஸ்கோ அவர்களின் அகத்திலிருந்து.

தங்களைப்பற்றி---
சுவாந்து குரூஸ் இசிதோர் தம்பதிகளின் மூத்தமகனாக இசிதோர் கிறிஸ்ரி அன்ரன் ஜோண்பொஸ்கோ சந்திரகாசன் உயிலங்குளம் எனது சொந்த இடமாகவும் எனது ஆரம்பக்கல்வியை 1-8வரை உயிலங்குளம் றோ.க.த.க பாடசாலையிலும் உயர் கல்வியினை மன்.எருக்கலம்பிட்டி மத்திய மகா வித்தியாலயத்தில் வர்த்தகப்பிரிவில் கற்று சித்தியடைந்தேன் தற்போது பெற்றா மன்னாரில் வசித்து வருகின்றேன்.

தங்களின் தேர்ச்சி பெற்ற கலைத்துறைபற்றி---
  • நாடக நடிகர் 
  • நாடக நெறியாளர் தயாரிப்பாளர் 
  • அறிவிப்பாளர் 
  • நிகழ்ச்சி தொகுப்பாளர்  
  • நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.

தங்களால் கதையெழுதி நடித்த நாடகமும் முதல் ஏற்று நடித்த கதாப்பாத்திரமும் பற்றி---
உயிலங்குளம் பாடசாலையில் படிக்கும் போது கண்ணகி நாடகத்தில் கண்ணகியாக பாத்திரமேற்று நடித்துள்ளேன் அதுபோல பாடசாலைக்காலத்தில் நானும் நண்பனும் கதைத்து கொண்டு இருக்கும் போது மாணவமன்றத்திற்காக நான் எழுதிய சாம்ராட் அசோக என்னும் கலிங்கம் வென்ற காவலன் நாடகம் காலச்சுழற்சியால் மன்னாரில் திருமறைக்கலாமன்றம் 1999ம் ஆண்டு உருவானபின்பு மீண்டும் அக்கதையை தற்காலத்திற்கு ஏற்றவாறு எழுதி 2008ம் ஆண்டு பிரதேச கலை இலக்கிய விழாவில் அரங்கேற்றினேன்.

நீங்கள் உருவாக்கிய கழகம் பற்றி----
நான் 1985ம் ஆண்டு திருமணமாகி வாழ்க்கைபெற்றான் கண்டல் குடியேறியபோது அங்கு உள்ள இளைஞர்கள் யுவதிகள் ஒன்றிணைத்து புனித நீக்கிலார் கழகம் ஒன்றை உருவாக்கி கலையினை வளர்த்தேன்.
புனித நீக்கிலார் நாடகத்தினை நெறியாள்கையுடன் ஒழுங்கமைத்து நான் அரசனாகவும் நடித்து மேடையேற்றினேன்.

திருமறைக்கலாமன்றத்தின் பணிகள் பற்றி---
திருமறைக்கலாமன்றம் மன்னார்
  • செயலாளர் 1999-2000
  • இணைப்பாளர் 2001-2012
திருமறைக்கலாமன்றம் தலைமையகம்
  • மேலதிக பிரதிஇயக்குநர்-2005
  • பிரதி இயக்குநர்-2007
திருமறைக்கலாமன்றத்தின்  பல கலை நிகழ்வுகள் கண்காட்சிகள் பயிற்சிப்பட்டறைகள் சிறுவர் கலைக்கூடம் மூத்த கலைஞர் அவை உருவாக்கம் மூத்த கலைஞர் கௌரவிப்பு  இளைஞர் அவை உருவாக்கம்  உறவுப்பால நிகழ்வுகள் வெளிமாவட்டங்களில் நமது கலைஞர்களை அழைத்து சென்று கலைநிகழ்வுகள் நடாத்தியமை போன்ற வேலைத்திட்டங்களை முன்னின்று நடாத்தியமை கலைவளர்ச்சிக்கு உதவியமையாகும்.
இவைதொடர்பான விடையங்கள் (மன்னா பத்திரிகை 2008பெப்ரவரி 2011 நவம்பர் தாளம்-25-01-2008-2008 ஓகஸ்ட்)

திருமறைக்கலாமன்றம் இடையில் செயற்படாமை இருந்தமைபற்றி---
எனது வேலைப்பளுவும் உடல்நிலையினையும் கருத்தில் கொண்டு எனையவர்களுக்கு இடம்கொடுக்கவேண்டும் என்ற நல்லஎண்ணத்தின் அடிப்படையிலும் நான் இணைப்பாளர் பதவியில் இருந்து விலகியிருந்தேன் அப்போது திருமறைக்கலாமன்றத்தின் செயலாளராக இருந்த திரு.மோகன் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார்.
 இவர் மிகவும் துடிப்பான கலையார்வம்மிக்கவர் அத்தோடு திருமறைக்கலாமன்றத்தின் அதிகஈடுபாடு கொண்டவர் என்னவோ தெரியவில்லை அவர்பொறுப்பெடுத்து செய்துகொண்டு இருக்கும் போது தான் நிதிப்பற்றாக்குறையும் உதவிய NGO நிறுவனங்களின் பங்களிப்பும் கலைஞர்களின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் குறைந்து செல்லத்தொடங்கியது தற்போது இளைஞர்கள் யுவதிகள் ஆர்வமின்மையும் காரணமாக அமைந்தது எனலாம். அத்துடன் மீண்டும் திருமறைகலாமன்றத்தின் இயக்குநர்  அருட்தந்தை   பேராசிரியர்  மரிய சேவியர் அருட்தந்தை அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 21-02-2018 பின் பொறுப்பெடுக்கவுள்ளேன் திருமறைக்கலாமன்றத்தினை….

மீண்டும் பொறுப்பெடுத்து எவ்வாறு செயற்படவுள்ளீர்கள்---
திரும்பவும் முதலில் இருந்து செயற்படவேண்டும் மூன்று பிரிவாக
சிறுவர்கள் இளைஞர்கள் மூத்த கலைஞர்கள் என்று பிரித்து கலந்துரையாடல்-ஒன்றுகூடல்-ஏற்படுத்தி பலபுதிய முயற்சிகளையும் பயிற்சிப்பட்டறைகளையும் செய்யவுள்ளேன் கூடிக்கலைவதின் மூலம் தான் என்ன செய்யலாம் என்ற சிந்தனைகள் பெறலாம் விரைவில் புத்துயிர்பெறும் மன்னார் திருமறைக்கலாமன்றம் அதற்கு ஒவ்வொருவரினதும் பங்களிப்பு அவசியம்.

இளைஞர்கள் சேவைகள் மன்றத்தின் சேவையாற்றுகின்றீர்கள் இளைஞர்கள் சேவைகள் மன்றம் இளைஞர்களுக்கு செய்யும் சேவை பற்றி----
மன்னாரில் உள்ள 153 கிராமசேவகர் பிரிவில் 153 இளைஞர்களகங்கள் உள்ளது அவற்றின் ஊடாக கலை விளையாட்டு பயிற்சிப்பட்டறைகள் கலையுறவுப்பாலங்கள் வெளிநாட்டுப்பயணங்கள் போன்றவற்றின் மூலம் இளைஞர் யுவதிகளின் ஆளுமை தலைமைப்பண்புகளை வளர்க்கின்றது மன்னார் மட்டுமல்ல ஏனைய மாவட்டங்களிலும் இச்செயற்பாடு தொடர்கின்றது. மன்னாரில் தற்போது இளைஞர்கள் அபாரமாக செயற்படுகின்றனர் அதற்கு உதாரணமாக இம்முறை இலங்கை இளைஞர்சேவைகள் மன்றத்தின் உபதலைவராக மன்னாரில் இருந்து க.யசோதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

உங்களின் நீண்ட கால கனவு என்றால்---
நீண்ட கால ஏக்கம் என்றுதான் சொல்ல வேண்டும் எனது எழுத்தில் ஒரு நூல் ஒன்றினை வெளியிடவேண்டும் என்று ஏக்கத்துடன் தான் உள்ளேன் எமது கோவில்களில் திருவிழாக்களில் பாடப்ப்டும் கவிப்பாடல்களையும் செபங்களையும் தொகுக்கலாம் என்று நினைத்தேன் அந்த தொகுப்பை அருட்தந்தை தமிழ்நேசன் அடிகளார் மேற்கொண்டுள்ளார் எனஅறிந்தேன் அத்தோடு நீங்கள் சொன்னதுபோல் எனது நெறியாள்கை செய்த நாடகங்களையே தொகுக்கலாம் என எண்ணுகின்றேன் கடவுளின் ஆசிருடன் மிகவிரைவில் சாத்தியமாகலாம்.

தற்போது செய்யும் கலைச்செயற்பாடு பற்றி---
மன்னார் மாவட்டத்தின் நாட்டுக்கூத்துக்கள் மிகவும் சிறப்பானதாக இருக்கின்றது கலைத்தவசி குழந்தை மாஸ்ரர் அவர்களின் நாடகங்கள் தான் தாளங்கள் இராகங்கள் கட்டுக்களுடன் உள்ளது ஏனைய நாடகங்கள் தாளக்கட்டுக்கள் ஒழுங்காக முழுமையாக இல்லை யாழ்ப்பாணத்தினைப்பொறுத்தமட்டில் உள்ள அண்ணாவிமார்கள் ஒன்றிணைந்து ஒவ்வொரு தாளம் ராகம் கட்டுக்களை ஆர்மோணிய இசையுடன் ஒவ்வொன்றாகப்பிரித்து புரியும் படிவிளக்கமாக பாடி இறுவட்டிலும் நூலாகவும் தந்துள்ளார்கள் அவர்களைப்போல மன்னார் மாவட்டத்தில் உள்ள நாடகங்களையும் தாளங்கள் இராகங்கள் ஒவ்வொன்றினையும் ஒரு நூலாக இறுவட்டடாக வெளிக்கொணரும் முயற்சியில் அருட்தந்தை அன்புராசா அடிகளாருடன் மூத்தகலைஞர்கள் நானும் இணைந்துள்ளேன்.

நாடகங்கள் நாட்டுக்கூத்துகள் அன்றும் இன்றும் எவ்வாறு உள்ளது சவால்கள் பற்றி---
நாடகங்கள் நாட்டுக்கூத்துக்கள் அன்றையகாலகட்டங்களில் சிறந்த பொழுதுபோக்காகவும் குறிப்பாக உறவுப்பாலத்தினை வளர்ப்பதாகவும் அதாவது ஒருவருக்கு ஒருவர் மனம்விட்டுப்பேசவும் பழகவும் அயலவரும் ஒன்று கூடும் சிறந்த நிகழ்வாக அமைந்தது தற்போது அப்படியில்லை காரணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை நேரமின்மை பொழுதுபோக்குவதற்கு நவீனக்கண்டுபிடிப்புக்கள் அதிகம் உள்ளது
முந்திய இரசணையும் விருப்பமும் குறைந்து விட்டது சினிமாமோகம் அதற்கு காரணமாய் உள்ளது.

ஆத்தோடு இன்னும் பழமையிலே இருக்கின்றோம் அதனால் தற்போது நாடகங்கள் எடுபடுவதில்லை பழமையுடன் புதுமையினையும் சேர்த்து தற்கால சு10ழலுக்கு ஏற்றால் போல் அமைக்கவேண்டும் இதுபெரும் சவாலாக உள்ளது
ஆத்துடன் பெண்பாத்திரங்களுக்கு பெண்கள் நடிப்பதில்லை அவ்வாறு நடித்தால் கதாபாத்திரங்கள் நன்றாக அமையும் அத்துடன் நாடகங்களும் விரும்பிப்பார்க்கும் அளவுக்கு அமையும். சவாலான விடையம் தான்

தங்களின் சேவைகள் பற்றி----
  • 1993ம் ஆண்டு யுத்த காலப்பகுதிகளில் மன்னார் கிளையின் செஞ்சிலுவைச்சங்கத்தின் உபதலைவராக இருந்து மடுப்பகுதியில் மக்களின் நிவாரணப்பணி போக்குவரத்துப்பணி என்பனவற்றினை திறம்பட செய்தேன் ஜோண்தாஸ் அவர்களுக்கு பிறகு மன்னார் செஞ்சிலுவை சங்ககிளையின் தலைவராகவும் இருந்து சேவையாற்றினேன்.
  • தேசியஇளைஞர்கள் சேவைகள் மன்றத்தின் கலைவிழாக்கள் மற்றைய இதரவிழாக்கள் நிகழ்ச்சிகளுக்கு அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் 1998லிருந்து இன்று வரை செயலாற்றி வருதல்.
  • புனித செபஸ்தியார் பேராலயத்தின் கலைகலாச்சார குழுவின் தலைவராக பணிபுரிந்து கலைநிகழ்வுகளை முன்னின்று நடாத்தி வருதல்
  • கலைத்துறையின் 40 ஆண்டுகளாக இருக்கின்றேன்
  • YMCA-நிர்வாக உறுப்பினராக பணி
  • அகிலஇலங்கை சமாதானநீதவான் 
  • தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தில்
  • 1981 ஆண்டு கணக்லிகிதர்-மட்டக்களப்பு
  • 1986-1993 வேலை –வவுனியா
  • 1993-1996 மீண்டும் மட்டக்களப்பு
  • 1998லிருந்து மன்னாரில்
  • 1999-2011ம் ஆண்டு வரை நிஸ்லோ பொதுமுகாமையாளராக
    2018-02-21 கணக்குப்பதிவாளராகவம் கடமையாற்றுதல்(ஓய்வு பெறவுள்ளேன்)

தங்களாள் வழங்கப்பட்ட பயிற்சிகள்---
  • தலைமைத்துவப்பயிற்சிகள்
  • முகாமைத்துவப்பயிற்சிகள்
  • நிதி முகாமைத்துவப்பயிற்சிகள்

கலைப்படைப்பின் செயற்பாடுகள் பற்றி---
  • 1975-"சுடலை மன்னன்" நாட்டுககூத்து எருக்கலம்பிட்டி ம.ம.வித்தியாலயத்தில் அரிச்சந்திரனாக நடித்ததுடன் நெறியாளராக செயல்பட்டமை.
  • 1975-"திருப்பாடுகளின் காட்சி"-உயிலங்குளம்-போர் வீரனாக நடித்தமை
  • 1977-"மகுடமா மங்கையா" நவீனநாட்டுக்கூத்து-உயிலங்குளம்-ஆரியப்பூ மாலாவாக நடித்தது.
  • 1983-"புனித அந்தோனியார் வாசாப்பு"-2இரவு காட்சி-துவரங்கேணி ஆலயம்-நிகழ்ச்சி தொகுப்பாளர் அறிவிப்பாளர்
  • 1984-"பொன்விளையும் பூமி"-சமூகநாடகம் -ஒளிவிழா-உயிலங்குளம்-நெறியாளர்
  • 1987-"வசந்த காலங்கள்"-சமூக சீர்திருத்த நாடகம் வாழ்க்கைப்பெற்றான் கண்டல் கலைநிகழ்வு-நெறியாளர்
  • 1977-"மகுடமா....மங்கையா..." நவீனநாட்டுக்கூத்து-வாழ்க்கைப்பெற்றான் கண்டல்;-நெறியாளர்
  • 1988-"யூலியஸ் சீசர்"-சரித்திரநாடகம்-பூவரசன் குளம் கலைநிகழ்வு-நெறியாளர்
  • 1989-"ஓர் ஒளி பிறந்தது"-ஒளிவிழா-உயிளங்குளம் நெறியாளர்
  • 1989-"பெத்தலகேம்தந்த பேரரசு" ஒளிவிழா நானாட்டான்-நெறியாளர்
  • 1989-"களங்கம் சுமந்த கடவுள்"-திருப்பாடுகளின் காட்சி நானாட்டான்-ஏரோது அரசனாக நடித்துள்ளேன்.
  • 1992-"களங்கம் சுமந்த கடவுள்"-திருப்பாடுகளின் காட்சி பண்டிவிரிச்சான்;-ஏரோது அரசனாக நடித்துள்ளேன்.
  • 1995-"புனித நீக்கிலார் வாசாப்பு"-(2இரவு கதை) சுண்டுக்குழி புலவர் எழுதிய வாழ்க்கைப்பெற்றான் கண்டல்-அரசனாக நடித்ததடன் மேற்பார்வை ஒழுங்கமைப்பு செய்துள்ளேன்.
  • 1996-"மன்னவன் ஆணை" நாட்டுக்கூத்து ஒளிவிழா-உயிலங்குளம்-நெறியாளர்
  • 2002-"திருப்பாடுகளின் காட்சி" –புனித செபஸ்தியார் பேராலயம்-பரிசேயராக நடித்தமை
  • 2003-"விசுவாச வித்துக்கள்"-நாட்டுக்கூத்து-புனித செபஸ்தியார் பேராலயம்-முரசறிவிப்போன்-சேவகன்
  • 2008-"கலிங்கம் வென்ற காவலன்"-மன்னார் பிரதேச சபை கலை இலக்கிய விழாவில்–தயாரிப்புக்கதைவசனம் நான் எழுதிய முதல் நாடகம் கலிங்க அரசனாகவும் நடித்தமை
  • 2010-"கல்வாரியில் கருணை மழை"-திருப்பாடுகளின் காட்சி-புனித செபஸ்தியார் பேராலயம் -ஏரோது அரசனாக நடித்தமை.
  • 2011-"ஓர் ஒளி பிறந்தது"-ஒளிவிழா-புனித செபஸ்தியார் பேராலயம்-நெறியாளர்
  • 2011-"கண்ணகி" நாடகம்-மாகாண கலைஇலக்கியவிழா-உதவி நெறியாளர்
  • 2017-02-26-"சத்தியத்தின் வித்து"-ஜேசப்வாஸ் நாடகம்-நெறியாளர்
  • 2017-"சந்திரகாசன் வாசாப்பு"- 3இரவுகதை நாட்டுக்கூத்து-தொகுப்பாளர்.
  •  
  • தாங்கள் இதுவரை பெற்ற விருதுகள் பற்றி---
  • 2005-திருமறைக்கலாமன்றம் சேவை விருது
  • 2010ம் ஆண்டு- கலைச்சேவை(நாடகத்துறை)பாராட்டு விருது-தமிழ்சங்கம்
  • 2013ம் ஆண்டு- இளைஞர் அபிவிருத்திக்கான விருது
  • 2017ம் ஆண்டு- இளைஞர் அபிவிருத்தி விருது அத்தோடு பொன்னாடையும் பொற்கிளியும் போர்த்தி கௌரவிக்கப்பட்டேன்

மன்னாரின் மக்களின் பிரதிநிதியாக இருக்கும் நியுமன்னார் இணையம் பற்றி---
நல்லதொரு செயலை செய்து வருகின்றீர்கள் எனது முதலாவது நேர்காணல் இதுதான் அந்த வகையில் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் என்னை நேர்காணல் கண்ட வை.கஜேந்திரனாகிய உங்களுக்கும் உங்களது நியூமன்னார் இணையக்குழுமத்திற்கும் மன்னாரின் பெருமைகளையும் கலைஞர்களின் திறமைகளையும் வெளிக்கொணரும் நியூமன்னார் இணையம் மன்னாரின் சொத்து தான் தொடரட்டும் உங்களது சேவை பாராட்டுக்கள்……
 
நியூமன்னார் இணையத்திற்காக
சந்திப்பு-வை-கஜேந்திரன்-














கலைஞனின் அகம் கணனியில் முகம் விம்பம் பகுதியில்....I.C.A.ஜோண்பொஸ்கோ Reviewed by Author on January 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.