அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் பங்கேற்றலுடன் இடம் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்-(PHOTOS)

-எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில்  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை(30) காலை 10.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம் பெற்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தலைமையில் ஆரம்பமான குறித்த கூட்டத்தில் தமிழ்  தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இ.ரா.சம்பந்தன்,பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ்நிர்மலநாதன், சித்தார்த்தன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான சத்தியலிங்கம், பா.டெனிஸ்வரன், எஸ்.பி.சிறாய்வா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

-இதன் போது நகர சபை மற்றும் பிரதேச சபை தேர்தல்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











மன்னாரில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் பங்கேற்றலுடன் இடம் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்-(PHOTOS) Reviewed by Author on January 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.