அண்மைய செய்திகள்

recent
-

தட்சனாமருதமடு பங்குத்தந்தைக்கு "ஆன்மீகச் சூரியன்" விருது வழங்கி கௌரவிப்பு


மாணவர்களுக்கு பாடசாலையுடன் இணைந்து பாடசாலை நேரத்திலும் பாடசாலை தவிர்ந்த நேரத்திலும் என எந்த நேரம் என பாராது ஆங்கிலக் கல்வியுடன் மாணவரின் கல்வி, ஒழுக்க, கலாச்சார முன்னேற்றத்தில் தன்னை இணைத்து அயராது அர்பணிப்போடு சேவை செய்து வரும் தட்சனாமருதமடு பங்கின் பங்குத்தந்தை வணபிதா போல் மத்தியு மதன்றாஜ் அவர்களுக்கு
                              
மன்னார் மாவட்ட யதீஸ் மாணவர் தொண்டு நிறுவன பணிப்பாளர் தேச கீர்த்தி, தேச அபிமானி திரு.S.R.யதீஸ் அவர்கள் " ஆன்மீகச் சூரியன் " என்ற கௌரவ விருதை வழங்கி கௌரவித்தார்.

இவர் பங்கு மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு சேவை செய்வதுடன் சகோதர சமய மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தி ஊரில் யாவரும் ஒற்றுமையாக வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்த அயராது பாடுபட்டு வருகின்றார்.

இதில் விசேட அம்சமாக தட்சனாமருதமடு ஊர்மக்களின் அலுவல்களை வெற்றிகரமாக செய்வதற்கு அங்கு பணியாற்றும் இந்துமத குருக்களுடன் ஒன்றாக மோட்டார் சைக்கிளில் பயணிப்பது எல்லோரையும் கவர்ந்த விடயம் என மடு பிரதேச செயலாளர் திரு.F.C.சத்திய சோதி அவர்கள் தனது சிறப்புரையில் வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது

ஆன்மீகச் சூரியன் விருதானது 27.12.2017 ஆம் திகதி மாலை 6 மணிக்கு தட்சனாமருதமடு பங்கு ஔி விழா நிகழ்வு தட்சனாமருதமடு புனித அந்தோனியார் ஆலய முன்றலில் நடைபெற்றது

தட்சனாமருதமடு பங்குத்தந்தை வணபிதா போல் மத்தியு மதன்றாஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு

பிரதம விருந்தினராக
வடமாகாண அமலமரித்தியாகிகள் சபையின் முன்னாள் தலைவர் வணபிதா போல் நட்சத்திரம் அவர்களும்

சிறப்பு விருந்தினர்களாக
திரு.F.C.சத்தியசோதி  மடு பிரதேச செயலாளர் அவர்களும்
தேச கீர்த்தி , தேச அபிமானி திரு.S.R.யதீஸ் மன்னார் மாவட்ட யதீஸ் மாணவர் தொண்டு நிறுவன பணிப்பாளர் அவர்களும் அவர்தம் பாரியாரும்

கௌரவ விருந்தினராக
தட்சனாமருதமடு இந்துமத குருக்கள் பன்னீர்ச்செல்வம் சர்மா அவர்களும் கலந்துகொண்டதுடன்
அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டதுடன் கலை நிகழ்வுகளும் மாணவர்களுக்கான பரிசில் வழங்குதலும் நடைபெற்று சிறப்பாக நிகழ்வு நிறைவடைந்தது.














தட்சனாமருதமடு பங்குத்தந்தைக்கு "ஆன்மீகச் சூரியன்" விருது வழங்கி கௌரவிப்பு Reviewed by Author on January 12, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.