Top Ad unit 728 × 90

அண்மைய செய்திகள்

recent
-

உலகின் மிக மோசமான விமான நிலையங்கள் இவைதான் -


கடந்த 2017 ஆம் ஆண்டின் மோசமான விமான நிலையம் குறித்து பயணிகளிடம் இணையதளம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் சூடானில் உள்ள ஜூபா விமான நிலையம் மோசமான விமான நிலையம் என தெரியவந்துள்ளது.
நுழைவாயில், ஓய்வு அறைகள், வாடிக்கையாளர் சேவை, பாதுகாப்பு, தூய்மை, உணவு வசதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
1. ஜூபா விமான நிலையம், தெற்கு சூடான்
ஜூபா விமான நிலையம் உலகின் மோசமான விமான நிலையம் ஆகும். கூறைகள் சிதிலமடைந்த ப்ளைவுட் மாடிகள், மக்கள் அந்த கூரையின் வழியாக விழுந்து காயம் அடைவதும், போதிய அளவில் வைபை வசதிகள் கிடையாது, கட்டண வசூல் போன்றவை குறித்து புகார் அளித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பயணிகள் தெரிவித்துள்ளனர்.
40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் மின்சாரம் இல்லாதது , துர்நாற்றம், மழை பொழிந்து கூடாரம் ஒழுகுதல் போன்ற காரணங்களால் இது உலகின் மோசமான விமான நிலையம் என்ற பட்டியலில் இடம்பித்துள்ளது.
இங்கே நேரம் செலவழித்திருப்பது எப்போதுமே விரும்பத்தகாதது என்று பயணிகள் தெரிவித்துள்ளனர்.


2.ஜெட்டா விமான நிலையம் சவுதி, அரேபியா
உலகிலேயே மிக மோசமான விமான நிலையங்களின் பட்டியலில் ஜெட்டா விமான நிலையத்தின் நிலையம் சிறிது முன்னேற்றம் கண்டதாக உள்ளது. ஏனென்றால், இங்கு ஓர் ஆண்டுக்குள் ஒரு புதிய மாற்று விமான நிலையத்தை திறப்பது தான் ஆனாலும் இங்குள்ள ஊழியர்களை மாற்றாத வரை இது மோசமான விமான நிலையமாகவே தொடரும் என பயணிகள் கூறுகின்றனர்.
விமான ஊழியர்கள் முரட்டுத்தனமாக, சோம்பேறி, மற்றும் தகுதியற்றவர்களாக உள்ளனர் என குற்றம்சாட்டப்படுகிறது. நீண்ட வரிசைகளுக்கு இட்டுச்செல்லக்கூடிய போதுமான அதிகாரிகள் இல்லை, கழிப்பறைகள் அரிதாக சுத்தம் செய்யப்படுவது மற்றும் இடவசதி குறைபாடு ஆகும்.
சுருக்கமாக சொன்னால் பயணிகள் ஊழியர்களிடம் பணிவை எதிபார்க்க கூடாது . சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் நிர்வாகிகள் சமீபத்தில் புதிய ஜெட்டா விமான நிலையத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் செய்துள்ளனர்.

3.போர்ட் ஹார்கோர்ட் விமான நிலையம், நைஜீரியா
போர்ட் ஹார்கோர்ட் விமானநிலையம் மூன்றாவது மோசமான விமான நிலையம் ஆகும். இங்கு ஊழல் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
விமான நிலைய அதிகாரிகள் பணியாளர்களிடம் அதிகமாக எல்லாவற்றிற்கும் லஞ்சத்தை கோருகின்றனர். மற்ற புகார்களில் குளியலறை வசதி இல்லாதது, ஏர் கண்டிஷனிங் பற்றாக்குறை, மற்றும் வருகை முனையத்தில் பாழடைந்த கூடாரம் ஆகியவை அடங்கும்.
நீங்கள் இலஞ்சம் கூறுகளை சமாளிக்க முடியாவிட்டால் இங்ருந்து விமானபயணம் மேற்கொல்வது கடினம், உதாரணத்துக்கு நீங்கள் சரியான விசா வைதிருந்தாலும் லஞ்சம் வாங்குவதற்காக போலி விசா என அங்கிருக்கும் அதிகாரிகள் சொல்வர்.

4. ஹேகக்லியன் விமான நிலையம், கிரேக்கம்
ஒவ்வொரு ஆண்டும், உலகின் மோசமான விமான நிலையங்களின் பட்டியலில் கிரேக்க விமான நிலையங்கள் இடம்பிடித்துவிடும்.
இந்த ஆண்டு ஹேகக்லியன் 4ம் இடம் பிடித்து அந்த சாதனையை தொடர்கிறது. விமான நிலையத்திற்கு வெளியே பயணிகள் வரிசையில் காத்திருக்கும் போது அனைவரையும் அடக்கியவாறு இருக்க உரிய இட வசதி இல்லை . திறனற்ற ஊழியர்கள், இடிந்த குளியலறைகள், ஏர் கண்டிஷனிங் இல்லாமை, பொதுமக்கள் அதிகளவு கூட்டம் ஆகியவற்றை அடிக்கடி புகாராக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
சர்வே ஒன்றின் அடிபடையில் பதுகாப்பு குறைபாடு, check in check out நீண்ட நேரம் விரயம், இறுக்கை குறைபாடு விமான நிலையிதில் இருக்கும் உணவகத்தின் பொருட்களின் மிக அதிக விலை ஆனால் அதற்கு சம்பந்தமே இல்லாத வகையில் அதன் தரம் ஆகியவை இங்கு பிரதான குற்றசாட்டுகள் ஆகும்.

5. லாகோஸ் சர்வதேச விமான நிலையம், நைஜீரியா
நைஜீரியாவின் அரசாங்கம், சீன முதலீட்டாளர்களின் உதவியுடன் நைஜீரியாவின் விமான நிலையங்களை மறுசீரமைக்க கிட்டத்தட்ட அரை பில்லியன் டொலர்களை உதவியுடன் பணியில் ஈடுபட்டுள்ளது.
துரதிஷ்டவசமாக, பல பயணிகள், லாகோஸ் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாட்டிலும், வசதிகளிலும் எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஆனால் " ஊழல்" என்பது பிரதானம் என்கின்றனர். த இடிந்த கழிவறைகள், இருக்கை பற்றாக்குறை, பழங்கால காசோலை நடைமுறைகள், குளிர்சாதன வசதி குறைபாடு, மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றை இங்கு முக்கிய குற்றச்சாட்டுகளாக உள்ளன.
அதிர்ஷ்டவசமாக விமான நிலையத்தில் பணம் கொடுத்து தங்கும் வசதி உள்ளது, இதில் மட்டுமே பயணிகள் தங்களை ஆசுவாசபடுத்திகொள்ள முடியும் .

உலகின் மிக மோசமான விமான நிலையங்கள் இவைதான் - Reviewed by Author on January 12, 2018 Rating: 5
Post a Comment
Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.