அண்மைய செய்திகள்

recent
-

உலகில் அதிகமானோர் பார்வையிட்ட நாடுகளின் பட்டியல்: முதலிடத்தில் பிரான்ஸ்


உலகில் அதிகமானோர் பார்வையிட்ட நாடுகளின் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிரான்ஸ் தக்கவைத்துள்ளது.
பிரான்சில் கடந்த ஓராண்டு மட்டும் சுமார் 89 மில்லியன் பார்வையாளர்கள் வந்து சென்றுள்ளனர்.
இது முந்தைய ஆண்டை விட சுமார் 8 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் கடும் சரிவை சந்தித்த பிரான்ஸ் தற்போது பூமியில் அதிகமானோர் பார்வையிட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்திற்கு எட்டியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மட்டும் சுமார் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஓராண்டு மட்டும் ஈர்த்துள்ளது. இது உலகின் வேறு எந்த நகரத்திற்கும் வாய்க்காதா பெருமை.

பெரும்பாலான பிரான்ஸ் மக்கள் தங்களது கோடைகால பயண திட்டமாக ஏனைய நாடுகள் போன்று வெளிநாடுகளுக்கு செல்வதில்லை.
உள்ளூர் சுற்றுலாதலங்களையே பெரும்பாலும் விரும்பிச் செல்கின்றனர். காரணம் அழகிய கடற்கரைகள், பனி மூடிய மலைமுகடுகள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் கிராமங்கள் என உலகின் வேறு எங்கும் கிட்டாத அனுபவம் இது.
திராட்சை மதுவுக்கு பெயர் பெற்ற நாடுகளில் ஒன்று பிரான்ஸ். ஆண்டு தோறும் சுமார் 24 மில்லியன் மக்கள் பிரான்சின் திராட்சை மது தயாரிக்கும் நகரங்களான Bordeaux, Burgundy உள்ளிட்ட பகுதிகளுக்கு வருகை தருகின்றனர்.
மட்டுமின்றி உலகின் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் பிரான்சின் 39 பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இப்பகுதிகளை பார்வையிடவே ஆண்டு தோறும் பல மில்லியன் மக்கள் வருகை தருவது குறிப்பிடத்தக்கது.
உலகில் அதிகமானோர் பார்வையிட்ட நாடுகளின் பட்டியல்: முதலிடத்தில் பிரான்ஸ் Reviewed by Author on January 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.