அண்மைய செய்திகள்

recent
-

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய 11,000 கார்கள்: எங்கே தெரியுமா? -


கடும் பனி மூட்டம் காரணமாக கப்பல் போக்குவரத்து தடைபட்டதால் சீனாவின் ஹைனான் மாகாணத்திற்கு செல்ல வேண்டிய வாகனங்கள் மொத்தமும் ஸ்தம்பித்துள்ளது.
சீனாவில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால் அங்குள்ள பொதுமக்களின் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று கடும் பனி மூட்டம் காரணமாக ஹைனான் பகுதிக்கு செல்ல வேண்டிய கப்பல் போக்குவரத்தை ரத்து செய்துள்ளனர்.

இதனால் ஹைனான் தீவுக்கு செல்ல வேண்டிய சுமார் 11,000 வாகங்கள் சாலையில் நிறுத்தப்பட்டு பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மட்டுமின்றி சுமார் 100,000 மக்கள் ஒரு இரவு முழுவதும் சாலையிலேயே கழித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி காலை விடிந்த பின்னரே கப்பல் போக்குவரத்து துவங்கியதாகவும், ஆனாலும் போக்குவரத்து நெரிசல் குறைய வெகு நேரமானதாகவும் துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




போக்குவரத்து நெரிசலில் சிக்கிய 11,000 கார்கள்: எங்கே தெரியுமா? - Reviewed by Author on February 23, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.