அண்மைய செய்திகள்

recent
-

167 சபைகளில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்க முடியாது! -


340 உள்ளூராட்சி சபைகளில் 167 உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஐ.ம.சு.மு வினதும் சு.கவினதும் ஒத்துழைப்பு தேவைப்படுவதாக ஐ.ம.சு.மு செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
எமது ஆதரவு இன்றி எந்தக் கட்சிக்கும் இந்த சபைகளில் ஆட்சியமைக்க முடியாது எனவும் எந்தத் தரப்புக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் இது வரை எந்த தரப்புடனும் உடன்பாடு எட்டப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர்,
ஐ.ம.சு.மு மற்றும் சு.க சார்பில் உரித்துடைய உறுப்பினர்கள் யார் யார் என்பது தொடர்பாக கட்சி தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுடன் பேசியே முடிவு செய்யப்படும். இதற்கு சில நாட்கள் பிடிக்கும்.
ஒரு கட்சிக்கு தனியாக ஆட்சியமைக்க முடியாத உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் ஐ.ம.சு.மு மற்றும் சு.க மக்கள் பிரதிநிதிகளுக்கு தெளிவான வழிகாட்டல்கள் வழங்க இருக்கிறோம். அதன்பிரகாரமே அவர்கள் செயற்படுவார்கள்.

167 சபைகளில் ஐ.ம.சு.மு மற்றும் சு.க ஆதரவு இன்றி ஆட்சியமைக்க எந்தக் கட்சிக்கும் முடியாது என்ற நிலை காணப்படுகிறது. இது தொடர்பில் எந்த கட்சியுடனும் உடன்பாடு காணப்படவில்லை என்றார்.
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளில் பொதுஜன பெரமுன 231 சபைகளிலும் ஐ.தே.க 34 சபைகளிலும் வெற்றியீட்டின. இவற்றில் பாதி சபைகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில் வேறு கட்சிகளின் ஆதரவுடனே ஆட்சி அமைக்கும் நிலை உருவாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.
167 சபைகளில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்க முடியாது! - Reviewed by Author on February 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.