அண்மைய செய்திகள்

recent
-

2017ஆம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட பெண்களின் பட்டியல்: முதலிடம் யார் தெரியுமா? -


சென்னை டைம்ஸ் நாளிதழ் நடத்திய கருத்துக்கணிப்பில், 2017ஆம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட பெண்ணாக ஓவியா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை டைம்ஸ் நாளிதழ், 2017ஆம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட பெண்கள் யார் என்னும் கருத்துக்கணிப்பை ரசிகர்களிடையே நடத்தியது.
30 பேர்களை கொண்டு தயாரான இந்த பட்டியலில், முன்னணி நடிகை நயன்தாராவை முந்தி நடிகை ஓவியா முதலிடம் பிடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ஓவியாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.


அதன் அடிப்படையிலேயே ஓவியா முதலிடம் பிடித்துள்ளார். நயன்தாராவுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. ரகுல் பிரீத் சிங் 3வது இடத்தையும், காஜல் அகர்வால் 5வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

6வது இடத்தில் ஏமி ஜாக்சனும், 7வது இடத்தில் ஆண்ட்ரியாவும் உள்ளனர். அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ், சமந்தா முறையே 14 முதல் 16வது இடங்களை பிடித்துள்ளனர்.
சின்னத்திரையில் இருந்து நடிகையாக அறிமுகமான பிரியா பவானி சங்கர் 18வது இடத்தையும், ஸ்ருதிஹாசன் 21வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இந்த பட்டியலில் த்ரிஷா 23வது இடமும், அமலாபால் 28வது இடத்தையும் பிடித்துள்ளனர். கடைசி இடமான 30வது இடத்தில் ஹன்சிகா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2017ஆம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட பெண்களின் பட்டியல்: முதலிடம் யார் தெரியுமா? - Reviewed by Author on February 16, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.