அண்மைய செய்திகள்

recent
-

உலகின் மிகவும் ஆபத்தான 5 இடங்களின் பட்டியல் -


அழகு இருக்கும் அனைத்திலுமே ஆபத்தும் இருக்கும். அதற்கு உதாரணமாக அழகான மற்றும் ஆபத்தான இடங்களும் உலகில் அமைந்துள்ளன. அந்தவகையில், உலகின் ரசிக்கக்கூடிய ஆனால் மரணத்தை விளைவிக்கும் மிக ஆபத்தான ஐந்து இடங்களின் பட்டியல் இது.


மரண பள்ளத்தாக்கு:
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள இந்த இடம் தான் உலகின் மிக அதிக வெப்ப நிலை உடைய பகுதியாகும்.
இது கடல் மட்டத்தில் இருந்து 86 மீற்றர் அடியில் உள்ளது. இதனால் இந்த பள்ளத்தாக்கு மரணத்தை ஏற்படுத்தும் வகையிலான வெப்பநிலையை கொண்டது.
இந்த பகுதியில் தான் உலகிலேயே அதிக அளவிலான வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த இடம் அழகான இடம் மட்டும் அல்ல திரில் பயணத்திற்கும் ஏற்ற இடம்.
ஆனால் உணவோ, தண்ணீரோ எதுவுமே கிடைக்காது. திரில் பயணத்திற்காகவே பலர் இந்த இடத்தை தெரிவு செய்கின்றனர்.

Half Dome:
ஹால்ப் டோம் மிக அழகான அருமையான ஒரு மலைச்சிகரம். ஆனால் இங்குச் செல்வது என்பது மிக சவாலானதாக இருக்கும்.
ஏனெனில் கடல் மட்டத்தில் இருந்து 8,800 அடி உயரத்தில் இருக்கிறது. இந்த ஹால்ப் டோம் சிகரத்திற்கு செல்லும் போது தவறாக ஒரு அடி எடுத்து வைத்தாலும் உடலின் ஒரு பாகம் கூட மிஞ்சாது.
இந்த இடத்திற்கு வாகனத்தில் செல்ல தரையில் இருந்து 10 முதல் 14 மணி நேரம் ஆகும். செல்லும் வழியில் ஏராளமான அருவிகள், அழகான இடங்களை கண்டுகளிக்கலாம்.
மலையில் செல்லும் பகுதிகளில் கருப்பு கரடிகளை அதிக அளவில் பார்க்கலாம். ஆனால் மோசமான வானிலை நிலவும் போது ஹால்ப் டோம் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

மரண சாலை:
உலகின் மிகஆபத்தான சாலை அமைந்துள்ள இடம் பொலிவியா. இந்த மரண சாலையின் நீளம் 61 கிலோ மீட்டர்.
இந்த இடம் பைக் ரைடர்களின் பிரியமான இடம். 11,800 மீட்டர் உயரம் வரை பயணம் இருக்கும். செல்லும் சாலைகள் பனியால் மூடப்பட்டு காணப்படும் என்பதால் எதிரில் என்ன உள்ளது என்பதே தெரியாது.
ஆண்டுக்கு 200 முதல் 300 பேர் வரை இந்த சாலையில் உயிரிழக்கிறார்கள். இந்த மலையில் பாம்புகள், கிளிகள், குரங்குகள் என பல்வேறு வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. இவ்வளவு ஆபத்தான பயணத்தை உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் மேற்கொள்ள விரும்புகின்றனர்.

ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகள்:
இந்தோனேஷியாவில் உள்ள ஜாவா மற்றும் சுமத்ரா பகுதிகள் அழகான அற்புதமான இடம். இங்கு ஏரிகள், பள்ளத்தாக்குகள், வித்தியாசமான கலாச்சாரங்கள், உள்ளூர் உணவுகள் என ஏராளமாக உள்ளன.
ஆனால் அடிக்கடி பூகம்பம் வரக்கூடிய பகுதியாகும். இதன்காரணமாக உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அடிக்கடி வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்படும். சுனாமி ஆபத்தும் அதிகம் உள்ள பகுதியாகும்.


லேக் நியாஸ், கேமரூன்:
கேமரூன் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ளது லேக் நியூஸ் என்ற ஏரி. இந்த ஏரி பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
ஆனால் இது சாதாரணமான இடம் அல்ல, அமைதியாக இருக்கும் எரிமலையை போன்றது.. ஏரியில் இருந்து கார்பன்டை ஆக்ஸைடு வாயு வெளியேறி வருகிறது.
1986ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் திகதி, நூற்றுக்கணக்கான மக்கள் இந்த ஏரி அருகே உயிரிழந்தனர்.
ஏரியை சுற்றி 15 மைல்களுக்கு மேல் கார்பன் டை ஆக்ஸைடு பரவியுள்ளது. இதனால் இந்த ஏரியை ஓட்டிய பகுதிகள் பாதுகாப்பற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் திரில் பயணம் செல்ல விரும்புவர்கள் இந்த இடத்தை வெகுவாக விரும்புகிறார்கள்.
உலகின் மிகவும் ஆபத்தான 5 இடங்களின் பட்டியல் - Reviewed by Author on February 05, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.