அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் உள்ள 94 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பெட்டிகள் விநியோகம்-(படம்)


உள்ளுராட்சி மன்ற தேர்தல் நாளை சனிக்கிழமை(10) இடம் பெறவுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பமாகியது.

-மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை,மன்னார் பிரதேச சபை,நானாட்டான் பிரதேச சபை,முசலி பிரதேச சபை,மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளுராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் இடம் பெறவுள்ள நிலையில் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 94 வாக்கெடுப்பு நிலைங்களுக்குமான வாக்குப்பெட்டிகள் மாவட்டச் செயலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 47 வட்டாரங்களில் இருந்தும் 54 உறுப்பினர்களை தெரிவு செய்ய இடம் பெறவுள்ள தேர்தலில் வாக்களிப்பதற்கு 86 ஆயிரத்து 94 பேர் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.











மன்னார் மாவட்டத்தில் உள்ள 94 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பெட்டிகள் விநியோகம்-(படம்) Reviewed by NEWMANNAR on February 10, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.