அண்மைய செய்திகள்

recent
-

தெருக்களில் மக்கள் கொல்லப்படுவார்கள்: அதிர்ச்சியளிக்கும் புதின் மற்றும் எலான்


செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் மக்களை அழிக்கும் என ரஷ்ய ஜனாதிபதி புதின் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ஆகியோர் பீதியை கிளப்பியுள்ளனர்.
’Artificial Intelligence' எனும் தொழில்நுட்பம் தற்போது வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பமாகும்.

இது எதிர்காலத்தில் மனிதர்களுக்கு தீய விளைவுகள் உண்டாக்கும் என, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் நிறுவனர் எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எலான் மஸ்க் இதுகுறித்து கூறுகையில், ’AI தொழில்நுட்பத்தை மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தான எதையும் செய்து விடாத வண்ணம் உருவாக்கம் பெற வேண்டும், அதில் வல்லுநர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
ஒரு நாகரீக அச்சுறுத்தலாக கருத்தப்படும் AI சக்தியை, ஒரு சில நிறுவனங்களின் கைகளில் விட்டு விட முடியாது. அது சரியானதாகவும் இருக்காது. எனவே, நாம் அதனை வளர்ச்சியை முன்கூட்டியே கட்டுப்படுத்த வேண்டும்.

நான் கூறுவதை மக்கள் கேட்டு, உண்மையில் கவலைப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். தெருக்களில் இறங்கி ரோபோக்கள், மனிதர்களை கொல்லும் காலம் வெகு விரைவில் இல்லை. அதுவரையிலும் நான் இந்த எச்சரிக்கையை விடுத்துக் கொண்டே இருப்பேன்’ என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ’கொலையாளிகளாக ரோபோக்கள் உருமாறும் போது, அது மிகவும் வினைத்திறன் வாய்ந்ததாக இருக்கும். அத்தருணத்தில் மக்களுக்கு எப்படி நடந்து கொள்வது என்பது தெரியாது’ எனவும் எலான் தெரிவித்துள்ளார்.

ஆனால், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் AI குறித்து கூறுகையில், ‘செயற்கை நுண்ணறிவு ஒரு மகத்தான வாய்ப்பாகும். எந்தவொரு நாடு செயற்கை நுண்ணறிவு சார்ந்த அதிகப்படியான ஆராய்ச்சிக்கு வழிவகுக்கிறதோ, அந்நாடு தான் பூமியில் ஆதிக்கம் செலுத்தும்’ என தெரிவித்துள்ளார்.
எனினும், ‘AI தொழில்நுட்பமானது மருத்துவ ஆராய்ச்சி மற்றும் அனைத்து வகையான தொழில்களையும் செழுமையான முறையில் முன் நிறுத்த வழிவகுப்பதோடு, சாத்தியமான போர்களை உண்டாக்கும் வல்லமையும் உடையது’ என்றும் புதின் தெரிவித்துள்ளார்.

புதினின் இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘அவர் (புதின்) மிகவும் கவலைப்படுகிறார் என்பதை தெளிவுபடுத்துவதன் மூலம், இது அனைத்துமே மூன்றாம் உலகப் போருக்கு நம்மை அழைத்துச் செல்லும் என்று நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
தெருக்களில் மக்கள் கொல்லப்படுவார்கள்: அதிர்ச்சியளிக்கும் புதின் மற்றும் எலான் Reviewed by Author on February 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.