அண்மைய செய்திகள்

recent
-

அமைச்சின் மேலதிக செயலாளராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மெல் கடமையை பொறுப்பேற்றார்!


அமைச்சின் மேலதிக செயலாளராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மெல் கடமையை பொறுப்பேற்றார்!

மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி, அமைச்சின் மேலதிக செயலாளராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மெல் தமது கடமையினை இன்று பொறுப்பேற்றார்.

திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மெல் கடந்த ஆறு வருடங்களாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்தார்.
இவர் இலங்கை நிர்வாக சேவை விஷேட தரத்துக்கு உயர்த்தப்பட்டதை அடுத்து பொதுச் சேவை ஆணைக் குழு அமைச்சின் மேலதிக செயலாளராக நியமித்துள்ளது.
திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மெல் மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி, அமைச்சில் அவர் இன்று (16.02.2018) கடமையினை பொறுப்பேற்றார்.
1995 ஆம் ஆண்டு தொடக்கம் 2005ம் ஆண்டு வரையில் மன்னார் கமநல சேவை திணைக்கள உதவிப் பணிப்பாளராக இவர் கடமையாற்றினார்.

2005ம் ஆண்டில் இருந்து கடந்த 20012 ம் ஆண்டு வரையில் மன்னார் பிரதேச செயலாளராக பணியாற்றினார்.
இதனை அடுத்து 2012 ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையில் மன்னார் மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவர் தமது கடமைகளை இன்று 16ம் திகதி (16.02.2018) பொறுப்பேற்பார்.

இவர் கடந்த கால யுத்த சூழ்நிலை மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் இடம்பெயர்ந்து பாதிப்படைந்த மக்களுக்காக இரவு பகலாக கடும் பணியாற்றினார்.
அரச பணிகளுக்கு அப்பால் மனித நேயப்பணியாளராகவும் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மெல் சேவையாற்றினார்.
நலன்புரி நிலையங்களில் மக்கள் இடர்களை எதிர்கொண்ட போது அரசு சாரா நிறுவனங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவிகளை பெற்றுக் கொடுத்தார்.

குறிப்பாக இறுதி யுத்தத்தின் போது காயப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு எடுத்துவரப்பட்டவர்கள் மட்டில் கரிசனையாக இருந்தார்.
இரவு பகல் பாராது அவர்களுக்கு தேவயானவற்றை செய்து கொடுப்பதில் முனைப்பாக செயற்பட்டார்.
இதனால் மக்கள் அவரின் உதவிக்காகவும் ஆலோசனைக்காகவும் எந்நேரமும் அவரை கடமை நேரத்திற்கு அப்பாலும் தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
மக்கள் தேவையின் நிமிர்த்தம் செல்லும் போதெல்லாம் அவற்றை உரிய அதிகாரிகள் ஊடாக நிறைவேற்றிக் கொடுக்கும் பன்பு கொண்டவர்.

கலையினையும் கலைஞர்களையும் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் மதித்து அரவனைத்து உரிய தருனத்தில் அவர்களை கௌரவித்த உயர்ந்த உள்ளம் கொண்டவர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மெல் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சின் மேலதிக செயலாளராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மெல் கடமையை பொறுப்பேற்றார்! Reviewed by Author on February 16, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.