அண்மைய செய்திகள்

recent
-

ஒரு நிமிட தாமதத்துக்காக பதவியை துறந்த பிரித்தானிய அமைச்சர் -


பிரித்தானிய அமைச்சர் ஒருவர் நாடாளுமன்றத்துக்கு ஒரு நிமிடம் தாமதமாக வந்ததற்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் பிரதமர் தெரசா மேவின் அமைச்சரவையில் சர்வதேச வளர்ச்சித் துறை அமைச்சராக இருப்பவர் மைக்கேல் பேட்ஸ். இவர் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பிரபுக்கள் அவை உறுப்பினராகவும் உள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்ற அவையில் நேற்று பெண்களுக்கான சம உரிமை வழங்குவது குறித்த விவாதம் நடந்தது.
அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினரான பாரோனெஸ் லிஸ்டர், கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளிக்க வேண்டிய மைக்கேல் பேட்ஸ், அப்போது அங்கு இல்லை. சுமார் ஒரு மணி நிமிடம் அவர் தாமதமாக அவைக்கு வந்தார்.
மேலும் அவர், அரசு சார்பாக எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு உரிய பதிலைக் கொடுக்க வேண்டியது என்னுடைய கடமை. உரிய நேரத்தில் பதிலளிக்க இயலாமல் போனதற்காக நான் வெட்கப்படுகிறேன்.

அதற்காக எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறியபடியே அவையை விட்டு உடனடியாக வெளியேறினார். இதைக் கண்டு, அவையில் இருந்த லிஸ்டர் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து லிஸ்டர் கூறுகையில், ‘தாமதமாக வந்ததற்காக அவர் மன்னிப்புக் கோரினால் போதுமானது. அவர் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை’ என தெரிவித்துள்ளார்.
எனினும், மைக்கேல் பேட்ஸின் ராஜினாமாவை பிரித்தானிய பிரதமர் தெரசா மே நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நிமிட தாமதத்துக்காக பதவியை துறந்த பிரித்தானிய அமைச்சர் - Reviewed by Author on February 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.