அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் பசுமாடுகள் வலை வீசி பிடிப்பும் விற்பனையும் நடைபெறுவதாக மக்கள் கவலை


மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் பசுமாடுகள் வலை வீசி பிடிப்பும் விற்பனையும் நடைபெறுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்
இவ்கொடியநிகழ்வானது  கடந்த பத்து நாட்களுக்கு மேலாக  நடைபெற்று வருகின்றது.

இலுப்பைக்கடவை கிராமசேவகர் பகுதியிலே இச்சம்பவம் நடைபெற்றுவருகின்றது. அதனுடன் அருகில் உள்ள கிராமங்களான கள்ளியடி பள்ளமடு முதளியார்குளம்  கன்னாட்டி பகுதிகளில் இயல்பாகவே கட்டாகாலி மாடுகள் திரிவதாகவும் இக்கட்டாகாலி மாடுகளினால் தோட்டங்கள் வயல்கள் சேதமடைவதாலும்  இம்மாடுகளை  வலைவீசிப்பிடிப்பது வழக்கமாகவுள்ளபோது.
கடந்த 10 நாட்களுக்கு மேலாக கட்டாகாலி மாடுகளுடன் வீட்டுப்பாவனை வளர்ப்பு மாடுகளுகம் பிடிக்கப்படுகின்றது.
 வீட்டுவளர்ப்பு மாடுகளுக்கு அவர்களின் அடையாளமாக  குறியீடுகள் இடப்பட்டிருக்கும்  சம்பவத்தின் போது  மேய்ச்சலுக்கு செல்லும் எல்லாமாடுகளையும்  தனிப்பட்ட  சிலர் வலை வீசிப்பிடித்து

  •  விற்பனை செய்வதாகவும் 
  • இறைச்சிக்கு அடிப்பதாகவும்  
  • பசுமாடுகளை கட்டி வைது துன்புறுத்துவதாகவும் (கன்று தாய்ச்சிபசு குற்றுயிராக கிடக்கின்றது)    வேறுஇடங்களுக்கு கொண்டு செல்வதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் முறையிடுகின்றனர்.
முறையற்ற முறையில் சேதங்களை விளைவிக்கும் வளர்ப்பு பசுக்களுக்கு பசுவின் சொந்தக்கார் இழப்பீடு வழங்கவேண்டும் என்பது வழக்கத்தில் உள்ளது

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இப்பிரச்சினைக்கு விரைவாக  நல்ல தீர்வை பெற்றுத்தருமாறு மக்கள் வேண்டுகின்றனர்.....

அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.....???








மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் பசுமாடுகள் வலை வீசி பிடிப்பும் விற்பனையும் நடைபெறுவதாக மக்கள் கவலை Reviewed by Author on February 23, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.