அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி-மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய-(படம்)


நாளை சனிக்கிழமை(10) இடம் பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும், தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான எம்.வை.எஸ். தேசப்பிரிய தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,,

மன்னார் மாவட்டத்தில் நாளை(10) சனிக்கிழமை இடம் பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளது.

தேர்தல் கடமைக்காக விசேட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் 94 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

47 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு 47 நிலைய அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த முறை மன்னார் மாவட்டத்தில் சுமார் 86 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

-ஆயிரம் அரச உத்தியோகஸ்தர்களும்,பொலிஸ் அதிகாரிகளும் தேர்தல் கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இம்முறை சரியான முறையில் அமைதியாக தேர்தல் நடவடிக்கைகளை எதிர்பார்த்துள்ளோம்.

மன்னார் மாவட்ட மக்களின் பூரண ஒத்துழைப்போடு நல்ல முறையில் தேர்தல் கடமைகளை மேற்கொள்ளுவோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி-மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய-(படம்) Reviewed by NEWMANNAR on February 10, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.