அண்மைய செய்திகள்

recent
-

இந்த தீவுக்கு செல்ல ஆண்களுக்கு அனுமதி இல்லை....


பின்லாந்தின் Helsinki கடற்பகுதியில் அமைந்துள்ள SuperShe தீவில் பெண்களுக்கு என மட்டுமேயான ஓய்வு விடுதிகளை திறக்க உள்ளனர்.
குறித்த தீவில் ஆண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் குறித்த தீவில் அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் சிறப்பு அம்சங்களுடன் கூடிய ஓய்வு விடுதிகளை திறக்க உள்ளார்.
இங்குள்ள இந்த விடுதிகளானது இந்த ஆண்டு இறுதியில் செய்பாட்டுக்கு வரும் என நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஜப்பானில் ஆண்களுக்கென மட்டும் விடுமுறைகால விடுதிகள் இருப்பதை கண்ட குறித்த தொழிலதிபர், அதேபோன்றதொரு விடுமுறைகால விடுதியை பெண்களுக்கென துவங்க முயற்சி மேற்கோண்டுள்ளார்.
இதன் பலனாகவே பின்லாந்தில் உள்ள Helsinki கடற்பகுதியில் பெண்களுக்கு எனமட்டுமான விடுமுறைகால விடுதியை அவர் உருவாக்கியுள்ளார்.
8.4 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த தீவில் 10 விடுதிகளை உருவாக்கி வருகின்றனர்.
யோகா மட்டுமின்றி சமையற்கலையும் இங்கு பெண்களுக்கு கற்றுத்தரப்படும் என இதன் நிர்வாகி Roth என்ற பெண்மணி தெரிவித்துள்ளார்.



இந்த தீவுக்கு செல்ல ஆண்களுக்கு அனுமதி இல்லை.... Reviewed by Author on February 08, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.