அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் உள்ள பிர பல வெதுப்பகம் சீல் வைத்து பூட்டு-(படம்)



மன்னாரில் உள்ள பிர பல வெதுப்பகம் ஒன்று நேற்று(22) வியாழக் கிழமை மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான பொது சுகாதார பரிசேதகர்கள் அடங்கிய குழுவினர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திடீர் என சென்று பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இதன் போது மன்னாரில் உள்ள பிரபல வெதுப்பகம் ஒன்றிற்கு சென்ற குறித்த குழுவினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன் போது குறித்த வெதுப்பகத்தில் உடல் நலத்திற்கு ஒவ்வாத வகையில் பொருட்களை களஞ்சியப்பதித்தியமை, அங்கு கடமையாற்றுபவர்கள் சிலர் தனி நபர் சுகாதாரத்தை கடைப்பிடிக்காமை, காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில், குறித்த வெதுப்பகத்தின் உரிமையாளருக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை (22) மன்னார் நீதிமன்றத்தில் பொது சுகாதார வைத்திய அதிகாரியினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதன் போது நேற்று வியாழக்கிழமை (22) விசரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா குறித்த வெதுப்பகத்தின் உரிமையாளர் குற்றத்தை ஒப்புக் கொண்டமைக்கு அமைவாக 25 ஆயிரம் ரூபாய் அபராதத்தை செலுத்துமாறு உத்தரவிட்டார்.

மேலும் நீதி மன்றத்தின் மறு அறிவித்தல் வரை குறித்த வெதுப்பகத்தை சீல் வைத்து மூடுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக குறித்த வெதுப்பகம் நேற்று வியாழக்கிழமை (22) சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

இதே வேளை மன்னார் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அதிகாரிகளால் மன்னார் நகர் பகுதியில் உள்ள மருந்தகங்கள் மற்றும் ஏனைய வர்த்தக நிலையங்கள்  மீது திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்ட போது மன்னார் நகரில் உள்ள பிரபல மருந்தகம் ஒன்றில் காலாவதியான மருந்துகள் விற்கப்பட்டமையால் குறித்த மருந்தகம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

மன்னார் நகரில் அமைந்துள்ள மருந்தகங்கள் மற்றும் ஏனைய வர்த்தக நிலையங்கள் என்பன மன்னார் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அதிகாரிகள் கடந்த வாரம் திடீரென சென்று சோதனைகளை மேற்கொண்டனர்.
சுமார் 8 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் கடந்த 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதன் போது மன்னார் நகரில் உள்ள பிரபல மருந்தகம் ஒன்றில் காலாவதியான மருந்துகள் விற்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் குறித்த மருந்தகத்தின் உரிமையாளருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மருந்தகத்தின் உரிமையாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறித்த நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டமையினால் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேலும் குறித்த மருந்தகத்தை சீல் வைத்து மூடுமாறு மன்று  உத்தரவிட்டதோடு, இதற்கான வழக்கு எதிர் வரும் 06.03.2018 வரை ஒத்திவைக்கப்;பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் உள்ள பிர பல வெதுப்பகம் சீல் வைத்து பூட்டு-(படம்) Reviewed by Author on February 23, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.