அண்மைய செய்திகள்

recent
-

தினமும் பயன்படும் அவசியமான மருத்துவ குறிப்புகள் -


வாழ்க்கைக்கு அவசியமான நாட்டு வைத்தியங்கள் சிலவற்றை பார்ப்போம்.
  • மங்குஸ்தான் பழத்தின் தோலைப் பொடி செய்து தேனுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
  • கருஞ்சீரகத்துடன் பனைவெல்லத்தை சேர்த்து உண்டால் தடைப்பட்ட மாதவிலக்கு உடனே வெளிப்படும்.
  • அன்னாசிப் பூவைப் பொடி செய்து சிறிது நீர் சேர்த்து தினமும் வயிற்றில் தடவினால் பெரு வயிறு கரையும்.
  • பித்தம் நீங்க சீதாப்பழத்துடன் இஞ்சிசாறு மற்றும் கருப்பட்டி சேர்த்து உண்ணுங்கள்.
  • மருதாணி இலைச்சாறு 30 மிலி எடுத்து 90 மிலி பாலுடன் கலந்து குடித்து வந்தால் (உணவுக்குப் பின்) கைகால் வலி குணமாகும்.
  • ஒரு தேக்கரண்டி நெல்லிச்சாறு, அரைத்தேக்கரண்டி தேன்கலந்து தினமும் காலையில் பருகிவந்தால் கண்நோய் வராது.
  • கேழ்வரகை அடிக்கடி உணவில் சேர்த்தால் திசுக்கள் சீராக செயல்படும், தசைகள் வலுவாகும்.
  • உடல் சூட்டுக்கு ரோஜா நீர் ஊரல் நல்லது (ரோஜா இதழை 6 லிருந்து 8 மணிவரை நீரில் ஊற வைத்த நீர்).
  • மாதவிடாய் நிற்கும் காலங்களில் ஏற்படும் கருப்பை மற்றும் கருவகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை ஓட்ஸ் உணவு சீர் செய்கிறது.
  • சீரகத்தைப் பொடி செய்து பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசி ஏற்படும்.

தினமும் பயன்படும் அவசியமான மருத்துவ குறிப்புகள் - Reviewed by Author on February 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.