அண்மைய செய்திகள்

recent
-

பால் பவுடரில் நோய்க்கிருமிகள்: உலக மக்களுக்கான ஓர் எச்சரிக்கை செய்தி -


என்னும் பிரான்சு நாட்டு பால் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் தயாரிப்புகளில் தொற்று நோய்க்கிருமிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளாகவே தனது நிறுவனத் தயாரிப்புகள் சிலவற்றில் நோய்க்கிருமிகள் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.
கடந்த வருடம் salmonella கிருமி நோய்த்தொற்று வெடித்துக் கிளம்பியதையடுத்து பல மில்லியன் பால் பவுடர் பெட்டிகளை அந்நிறுவனம் திரும்பப் பெற்றுக்கொள்ள முன்வந்துள்ளது.
இதே salmonella கிருமிதான் 2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட நோய்த்தொற்றிற்கும் காரணமாக இருந்தது.
இப்போது பிரச்சினைக்கு காரணமாக உள்ள வட மேற்கு பிரான்சில் அமைந்துள்ள அதே Craon தொழிற்சாலைதான் 2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட நோய்த்தொற்றிற்கும் காரணமாக இருந்தது.
பாலை உலர்த்தும் அமைப்புகளிலொன்றில் ஏற்பட்ட நோய்த்தொற்றே பிரச்சினைக்கு காரணமாக அமைந்ததால், Lactalisக்கு சொந்தமான அந்த தொழிற்சாலை மூடப்பட்டது.

எத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட்டார்கள்?
2005ஆம் ஆண்டு ஏற்பட்ட நோய்த்தொற்றினால் 146 குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதில் குறைந்தது 38 குழந்தைகளின் பிரச்சினைக்கு Lactalis பால்தான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
பாரீஸிலுள்ள Pasteur Institute, Craon தொழிற்சாலை மூடப்படும்வரையில் அங்கு salmonella கிருமிகள் இருந்ததாகக் கூறியுள்ளது.
இதன் விளைவாக 2005க்கும் 2006க்கும் இடையில் 25 குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக அது கூறியது.

Lactalis நிறுவனம் சந்திக்கவுள்ள பிரச்சினைகள்
இந்தப்பிரச்சினையால் Lactalis நிறுவனத்திற்கு பல நூறு மில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்படும்.
பாதிக்கப்பட்ட பல குழந்தைகளின் பெற்றோர் Lactalis நிறுவனத்தின்மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
ஐரோப்பா கண்டம், ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகியவற்றிலுள்ள நாடுகளுக்கு அனுப்பப்பட்ட சுமார் 12 மில்லியன் பால் பவுடர் பெட்டிகள் திரும்பப் பெறப்படவுள்ளன. பிரித்தானியாவும் அமெரிக்காவும் பாதிக்கப்படவில்லை.
Lactalisஇன் ஆண்டு வருமானம் 17 பில்லியன் யூரோக்கள் ஆகும். 47 நாடுகளில் தயாரிப்பு தொழிற்சாலைகளைக் கொண்ட இந்நிறுவனத்தின் பிரான்சு கிளைகளில் மட்டும் 15000பேர் வேலை செய்கிறார்கள்.

நோய்க்கிருமியால் ஏற்படும் பாதிப்புகள்
இந்த salmonella கிருமியால் நோய்த்தொற்று ஏற்பட்டால் diarrhoea, வயிற்றுப்பிடிப்பு, வாந்தி மற்றும் பயங்கர நீரிழப்பு ஏற்படும். குழந்தைகளுக்கு உயிரிழப்பும் ஏற்படலாம்.
பால் தரும் விலங்குகளிடமிருந்து பரவும் இந்த நோய்க்கிருமியால் ஏற்படும் நோய் குழந்தைகளுக்கும் மிகவும் வயதான முதியவர்களுக்கும் பெரும் தீங்கை ஏற்படுத்தக்கூடியது.
அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்
பிரான்சு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ள அதே நேரத்தில் Craon தயாரிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.
நிறுவனத்திற்கு அபராதங்கள் விதிக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் பால் பவுடரை இன்னும் பல முக்கியமான சூப்பர்மார்க்கெட்டுகள் தொடர்ந்து விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளதால், வியாபாரிகள் மீது தடைகள் விதிக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.
பால் பவுடரில் நோய்க்கிருமிகள்: உலக மக்களுக்கான ஓர் எச்சரிக்கை செய்தி - Reviewed by Author on February 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.