அண்மைய செய்திகள்

recent
-

த. தே. கூட்டமைப்பின் வவுனியா மாவட்டத்திற்குட்பட்ட நான்கு சபைகளுக்குமான பதவிப் பங்கீட்டு விபரம்..



நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஐந்து சபைகளில் நான்கு சபைகளில் அதிகமான ஆசனங்களை பெற்றுக்கொண்ட தமித் தேசிய கூட்டமைப்பு நான்கு சபைகளிலும் ஆட்சியமைக்க முன்வந்துள்ளதுடன் அந்த சபைகளுக்கான தவிசாளர்களையும் பிரதி தவிசாளர்களையும் நியமித்துள்ளது.

நேற்றயதினம் (15-02-2018)  மாலை வவுனியா தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற அங்கத்துவக்கட்சிகளின் முக்கியஸ்த்தர்கள் கலந்துகொண்ட ஒன்றுகூடலில் அனைத்து சபைகளுக்குமான தவிசாளர்கள் பிரதி தவிசாலர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டது.

அதனடிப்படையில் ;-

வவுனியா நகரசபைக்கு தவிசாளராக நாகலிங்கம் சேனாதிராசா அவர்களும் பிரதி தவிசாளராக சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் த. பரதலிங்கம் என்பவருக்கு பின் இரண்டு வருடங்களுக்கு தவிசாளர் பதிவி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு முதல் இரண்டு வருடங்களுக்கு துரைச்சாமி நடராசசிங்கம் (ரவி) அவர்களும் அடுத்துவரும் இரண்டுவருடங்களுக்கு தர்மலிங்கம் ஜோகராசா அவர்களும் தவிசாளர்களாகவும் முதல் ஒருவருடத்திற்கு வேலாயுதம் குகதாஸ் அவர்களும் இரண்டாம் மூன்றாம் வருடங்களுக்கு தமிழரசுக்கட்சியை சேர்ந்த ஒருவருக்கும் (பெயர் குறிப்பிடப்படவில்லை) நான்காம் வருடத்திற்கு சந்திரபத்மன் பாபு அவர்களும் பிரதி தவிசாளர்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்

வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு முதல் இரண்டு வருடங்களுக்கு சபாரெட்னம் தணிகாசலம் அவர்களும் அடுத்த இரண்டு வருடங்களுக்கு சோமசுந்தரம் சத்ஜேந்திரன் அவர்களும் தவிசாளர்களாகவும் நாகலிங்கம் ஜோகராசா , பொன்னையா தேவராசா ஆகியோர் முறையே இவ்விரண்டு வருடங்கள் பிரதி தவிசாளர்களாகவும் பெயரிடப்பட்டுள்ளனர்.

வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபைக்கு முதல் இரண்டு வருடங்களுக்கு சுப்பையா ஜெகதீஸ்வரன் (சிவம் ) அவர்களும் அடுத்த இரண்டு வருடங்களுக்கு சிறில் நிரூஜன் அவர்களும் தவிசாளர்களாகவும் சுப்பிரமணியம் அருள்கரன் ,சுப்பையா ஜெகதீஸ்வரன் ஆகியோர் முறையே இவ்விரண்டு வருடங்களுக்கு பிரதி தவிசாளர்களாகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தேர்தலுக்கு முன்பாக அங்கத்துவ கட்சிகளுக்குகிடையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் இப்பதவிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் பிரச்சனைகள் ஏற்ப்படும் பட்சத்தில் மாற்றங்கள் ஏற்ப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

த. தே. கூட்டமைப்பின் வவுனியா மாவட்டத்திற்குட்பட்ட நான்கு சபைகளுக்குமான பதவிப் பங்கீட்டு விபரம்.. Reviewed by Author on February 16, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.