அண்மைய செய்திகள்

recent
-

சாராயக் கடைகளை மூடுமாறு கோரி வவுனியாவில் கண்டனப் போராட்டம்!

சாராயக்கடைகளை மூடுமாறு கோரி கண்டனப் போராட்டம் ஒன்று எதிர்வரும் (08-02-2018) வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு வவுனியா பிரதேச செயலகம் முன்பாக நடைபெறவுள்ளது.

அனைத்துலகப் பெண்கள் தினத்தில் நடைபெறவுள்ள இக்கண்டன போராட்டத்தை சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளதுடன் உழைக்கும் பெண்கள் விடுதலை முன்ணணி அமைப்பும் இணைந்து நடத்தவுள்ளது.

இக்கண்டன போராட்டம் தொடர்பாக சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்


வடக்கு கிழக்கு மக்களாகிய எம் மீது யுத்தம் திணிக்கப்பட்டு சகல அடக்கு முறைகளுக்கும் ஆளாகி எமது அடிப்படைப் பொருளாதார கட்டமைப்பை இழந்து தெருவில் விடப்பட்டுள்ளோம். இந்த யுத்தத்தில் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டது எமது பெண் சமூகமே.
இந் நிலையில் கடந்த 09 வருடங்களில் வேலைவாய்ப்பு இன்மை  அதிகரித்த வாழ்க்கைச் சுமை என்பவற்றினால் ஏற்பட்டு வரும் கடன் சுமையினால் பெண்கள் அல்லலுற்றுக் கொண்டிருக்கிறார்கள். லீசிங் நாள் கடன்கள் கிழமைக் கடன்கள் குழுக்கடன் திட்டங்கள்  போதக்குறைக்கு பிரமிட் வியாபாரமுறை என எம் அடிப்படைப் பொருளாதாரத்தையே ஆட்டங்கன வைக்கின்ற மக்கள் விரோத திட்டங்கள் ஒருபுறம் சாராய (பார்) மதுக்கடை போத்தல் கள்ளுப்பாவனையும், மாவா, கஞ்சா, ஹெரோயின் போதை பொருட்கள் பாவனைகள் அதிகரிப்பு மறுபுறம் என பெண்களின் குடும்ப வாழ்விற்கும் சுய பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இல்லாமல் செய்திருப்பது மட்டுமல்லாமல் உழைக்கும் மக்களின் வருமானத்தில் பெரும் பகுதியை மதுக் கடைகளினாலேயே சுரண்டப்படுகின்றது.
மது மற்றும் போதைப்பொருள் பாவனைகளின் அதிகரிப்பானது எமது பொருளாதார மற்றும் கல்வி
கட்டமைப்புக்களை அழிப்பது மட்டுமின்றி சமூகத்தில் பெண்களுக்கெதிரான வன்முறை சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை, லஞ்சம் மற்றும் வீதி விபத்துக்கள் என பாரிய குற்றச் செயல்களுக்கு பிரதான காரணியாக மாறியிருக்கின்றது.

எமது சமூகத்தின் அனைத்து கட்டமைப்புகளையும் தகரத்து பொருளாதரத்தை சிதைத்து எம்சமூகத்தை கடனாளியாக, நோயாளியாக, சிந்தனையற்றவர்களாக மாற்றி மக்களைச் சுரண்டி மேலும் வறுமையில் தள்ளும் அனைத்து திட்டங்களை முறியடிக்கவும் சாரய (பார்) மதுக்கடை, கள்ளுக்கடைகளை இழுத்து மூடி எமது சமூகத்தின் நல்வாழ்விற்காகவும் இந் நாளில் ஒன்றிணைந்து குரல்கொடுக்கவும் போராடவும் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பாகிய நாம் உழைக்கும் பெண்கள் விடுதலை முன்னணி உடன் இணைந்து கண்டன போராட்டம் ஒன்றினைட வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வவுனியா பிரதேச செயலகம் முன்பாக ஏற்பாடுசெய்திருக்கின்றோம். எம்முடன் இணைந்துகொள்ளுமாறு அனைத்து மகளீர் பெண்கள் அமைப்புக்களையும், அனைத்து சமூக அமைப்புக்களையும்  மக்களையும் உரிமையுடன் போராட அழைக்கின்றோம்.

இவற்றை எம் சமூகத்திலிருந்து முழுமையாக அகற்றும் வரை தொடர்போராட்டங்களை முன்னெடுக்க எம்முடன் இணைந்து செயற்படுமாறும் அனைத்து மகளீர் பெண்கள் அமைப்புக்களையும், அனைத்து சமூக அமைப்புக்களையும்  மக்களையும் உரிமையுடன் போராட அழைக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாராயக் கடைகளை மூடுமாறு கோரி வவுனியாவில் கண்டனப் போராட்டம்! Reviewed by Author on March 07, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.