அண்மைய செய்திகள்

recent
-

பெரிய பரந்தனில் அமைக்க திட்டமிடும் மதுபானசாலைக்கு மக்கள் மீண்டும் எதிர்ப்பு -


கிளிநொச்சி - பெரிய பரந்தன் பிரதேசத்தில் புதிய மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் மீண்டும் கரைச்சி பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
கரைச்சி பிரதேச செயலகத்திற்கு சென்ற பிரதேச மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் பிரதேச செயலாளர் த. முகுந்தனிடம் நேற்று மகஜரை கையளித்துள்ளனர்.

குறித்த மகஜரில் பத்துக்கு மேற்பட்ட பொது அமைப்புக்கள் கையொப்பம் இட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கரைச்சி பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புதிய மதுபானசாலை அமையவுள்ள இடத்திற்கு அருகில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி, புனித திரேசா பெண்கள் கல்லூரி, மற்றும் விஞ்ஞானக் கல்வி நிலையம் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் காணப்படுகின்றன.
பெரிய பரந்தன் கிராமத்தில் 500இற்கு மேற்பட்ட குடும்பங்கள் காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலான குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள்.

எனவே தமது பிரதேசத்தில் புதிய மதுபானசாலை அமைவதானது பெரும் பொருளாதார மற்றும் கலாச்சார பாதிப்புக்களையும் ஏற்படுத்தும்.

முக்கியமாக நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் பனை, தென்னைவள தொழிலாளர்களாக உள்ளனர். இதனால் புதிய மதுபானசாலை அமையும் போது இவர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும்.
எனவே குறித்த மதுபானசாலை விடயத்தில் பிரதேச மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் கருத்தில் கொண்டு அதற்கான அனுமதியை வழங்காது இருக்க வேண்டும் என மக்கள் சார்பாக பிரதேச மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெரிய பரந்தனில் அமைக்க திட்டமிடும் மதுபானசாலைக்கு மக்கள் மீண்டும் எதிர்ப்பு - Reviewed by Author on March 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.