அண்மைய செய்திகள்

recent
-

தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் மீனவர்களின் வலைத்தொகுதிகள் முன் அறிவித்தல் இன்றி கடலில் இருந்து அகற்றல்-மீனவர்கள் பாதிப்பு-அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.-(photos)


விடத்தல் தீவிற்கு அண்மித்த கள்ளாற்றிற்கு தெற்கு பகுதியில் உள்ள சம்பன் பாஞ்சான் கடற்பகுதியில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் மீனவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் 'சிறகு' வலைத் தொழிலுக்கான வலைத்தொகுதிகள் கடந்த சனிக்கிழமை கடலில் வைத்து எவ்வித அறிவித்தல்களும் இன்றி மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளரின் உத்தரவிற்கு அமைய கடலில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் நேற்று திங்கட்கிழமை(12) அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பாதீக்கப்பட்ட தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் மீனவர்கள் மேலும் தெரிவிக்கையில்,,,

விடத்தல் தீவை பிறப்பிடமாகவும்,தோட்டவெளி ஜோசப்வாஸ் நகரை வதிவிடமாகவும் கொண்ட சுமார் 173 மீனவர்கள் விடத்தல் தீவிற்கு அண்மித்த கள்ளாற்றிற்கு தெற்கு பகுதியில் உள்ள சம்பன் பாஞ்சான் கடற்பகுதியில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக சிறகு வலைத் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

-எனினும் ஜோசப் வாஸ் நகர் மீனவர்களுக்கும்,பாப்பாமோட்டை கிராம மீனவர்களுக்கும் இடையில் சின்னச் சின்ன வாய்த்தர்க்கம் ஏற்பட்டு வருகின்றமை வழமை.

-குறித்த பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் வகையில் கடந்த 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடற்தொழில் திணைக்களம் தலையிட்டு தீர்க்கும் முகமாக கடலில் எல்லைகள் இட முடியாத எமது நாட்டின் சட்டத்திற்கு முரணாக தாம் ஒரு சட்ட நிர்ணயத்தை கொண்டு கடலில் எல்லை பிரித்து தருவதாக கூறி கடலில் எல்லைக்கட்டைகளை இட்டனர்.குறித்த செயற்பாடு இரு மீனவவர்களுக்கும் இடையே முரண்பாடுகள் வலுவடையக்காரணமாக அமைந்தது.

-முரண்பாடுகள் வலுவடைந்து வந்த நிலையில் கடந்த வருடம் 14-10-2017 அன்று பாப்பாமோட்டை மீனவர்களினால் எமது மீனவ கிராமிய அமைப்பிற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.

-குறித்த கடிதத்தில் பாப்பாமோட்டை மீனவர்கள் கால காலமாக தொழில் புரிந்து வந்த குறித்த கடற்பதியில் இருந்து தோட்டவெளி ஜோசப்வாஜஸ் நகர் மீனவர்களின் வலைகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும்.

-தவரும் பட்சத்தில் பாப்பாமோட்டை மீனவர்கள் குறித்த வலைகளை அகற்றுவார்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.அதனை எமது மீனவர்கள் மறுத்திருந்தார்கள்.

இந்த நிலையில் எமது பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன் பிடி வலைகளை பாப்பாமோட்டை மீனவர்கள் கடலில் வைத்து மிக மோசமாக வெட்டி நாசப்படுத்தி இருந்தனர்.

-குறித்த பிரச்சினை தொடர்பாக அடம்பன் பொலிஸ் நிலையத்தில் பாதீக்கப்பட்ட மீனவர்கள் முறைப்பாடு செய்த போது அதனை பாப்பாமோட்டை கிராம மீனவர்கள் மறுத்திருந்தனர்.

இவ்விடையம் தொடர்பாக எமது மீனவ அமைப்பின் ஊடாக கடற்தொழில் திணைக்களம்,மன்னார் பிரதேச செயலகம்,மாந்தை மேற்கு பிரதேச செயலகம், மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் உள்ளிட்ட பலருக்கு கடிதங்களை அனுப்பி வைத்தோம்.குறித்த கடிதத்தில் நாம் காலகாலமாக தொழில் செய்து வந்த குறித்த பகுதியில் தொடர்ந்தும் மீன் பிடியில் ஈடுபட்டு வருவோம் என்பதனையும்,எமது தொழில் உடமைகளுக்கு சேதம் ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விட்டிருந்தோம்.

-இந்த நிலையில் கடந்த 10 ஆம் திகதி சனிக்கிழமை(10-3-2018) காலை நாங்கள் குறித்த கடல் பகுதிக்குச் சென்று எமது தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டு கரை திரும்பிய நிலையில் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளரின் கட்டளைக்கு அமைவாக பாப்பாமோட்டை மீனவ அமைப்பின் தலைவர்,செயலாளர்,உறுப்பினர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் இணைந்து நாம் கடற்தொழிலில் ஈடுபட்டு வரும் மீன் பிடி வலைகள்,கூடுகள்,வலை பாயும் கம்புகள் என்பன எவ்வித முன் அறிவித்தலும் இன்றி நாம் தொழில் செய்யும் கடற்பகுதியில் இருந்து முற்றாக அகற்றியுள்ளனர்.

சுமார் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியாக 120 வலைத்தொகுதிகளும்,அதற்கான கம்புகளும் இவ்வாறு அகற்றப்பட்டுள்ளதாக பாதீக்கப்பட்ட மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் மீனவர்கள் தமது கிராமிய மீனவ அமைப்பினூடாக அன்றைய தினம் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததோடு, நேற்று திங்கட்கிழமை(12) பாதிக்கப்பட்ட மீனவர்கள் அடம்பன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாம் நீதி கோரி நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் பாதீக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் மீனவர்களுக்கு தொழில் பாதிப்பை முற்றாக ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த சம்பவங்களினால் குறித்த மீனவர்களின் குடும்பங்கள் தற்போது பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதோடு,பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் என அனைவரும் பாதிப்படைந்துள்ளதாக பாதீக்கப்பட்ட மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் மீனவர்களின் வலைத்தொகுதிகள் முன் அறிவித்தல் இன்றி கடலில் இருந்து அகற்றல்-மீனவர்கள் பாதிப்பு-அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.-(photos) Reviewed by Author on March 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.