அண்மைய செய்திகள்

recent
-

இந்த ஆண்டின் மிகப் பிரபலமான பெயர்


இந்த ஆண்டின் உலக அளவில் மிகப் பிரபலமான பெயர் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
2018 ஆம் ஆண்டு துவங்கி 3 மாதங்களே ஆகியுள்ள நிலையில் உலகெங்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இதுவரை பிறந்துள்ளனர்.
குடும்பத்தின் புதிய உறுப்பினர்களை வரவேற்று பல குடும்பங்களும் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றன.
பல குழந்தைகளுக்கும் பெயர் சூட்டும் விழாக்களும் நடைபெற்றுள்ளன. அந்த வகையில் இந்த ஆண்டில் பிரபலமான சில பெயர்கள் டிரென்டாகவும் துவங்கியுள்ளன.

தற்போது பிரபல இணையதளம் ஒன்று இந்த ஆண்டில் இதுவரை பிரபலமான பெயர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் எம்மா என்ற பெயர் முதலிடத்தில் உள்ளது. 2017 ஆம் ஆண்டு முதலிடத்தில் இருந்த இந்த பெயரானது இந்த ஆண்டும் முதலிடத்தில் உள்ளது.
பழைய ஜேர்மன் பெயரான எம்மா என்றால் முழுமை அல்லது அனைத்தையும் குறிக்கும் உலகளாவிய என பொருள்.
இதன் அடுத்த இடத்தில் ஒலிவியா என்ற பெயர் உள்ளது.
ஒலிவியா பெயரை முதன் முதலில் பயன்படுத்தியவர் புகழ்பெற்ற நாடக ஆசிரியரான வில்லியம் ஷேக்ஸ்பியர். இவரது Twelfth Night என்ற நாடகத்தின் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் ஒலிவியா ஆகும்.
இந்த ஆண்டில் பிரித்தானியா உள்ளிட்ட சில நாடுகளில் அரச திருமணங்களும் நடைபெற உள்ளன. அந்தவகையில் சில ராயல் பெயர்களும் தற்போது பிரபலமடைந்து வருகின்றன.

அதில், Charlotte மற்றும் Mia ஆகிய பெயர்கள் தற்போது பிரபலமாகியுள்ளன.
உலகில் மிக பிரபலமாக இருக்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள்:
  1. Emma
  2. Olivia
  3. Ava
  4. Isabella
  5. Sophia
  6. Mia
  7. Amelia
  8. Harper
  9. Charlotte
  10. Mila
ஆண் குழந்தைகளின் பெயர்கள்:
  1. Liam
  2. Noah
  3. Logan
  4. Oliver
  5. Mason
  6. Lucas
  7. Ethan
  8. Elijah
  9. Aiden
  10. James
இந்த ஆண்டின் மிகப் பிரபலமான பெயர் Reviewed by Author on March 28, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.