அண்மைய செய்திகள்

recent
-

வாக்குறுதிகளை செயற்படுத்துவதற்கான கால அட்டவணையை இலங்கை அறிவிக்க வேண்டும் -


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தாம் அளித்த வாக்குறுதிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான கால அட்டவணையை இலங்கை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவாவில் உள்ள இயக்குநர் ஜோன் ஃபிஷர் வலியுறுத்தி உள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் நீதி, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் என்பனவற்றை உறுதிப்படுத்துவதற்காக நிலைமாற்றுக் கால நீதிப் பொறிமுறையை ஸ்தாபிப்பதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்கள் அடங்கியபொறுப்புக்கூறல் முறைமை, உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை, காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் மற்றும் இழப்பீடு தொடர்பான அலுவலகம் என்பன குறித்தே அந்த உறுதிப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தன.

எனினும், தற்போதைய ஜெனிவா அமர்வு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில் காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் மட்டுமே நிறுவப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
காணாமல்போனோர் தொடர்பான பணியகத்தை நிறுவியமையானது ஒரு சாதகமான நடவடிக்கையாகும்.
அது தமது பணிகளை விரைவாகவும், முறையாகவும் மேற்கொள்ள வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை அரசாங்கம் தமது கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் தாமதம் காண்பித்து வருகின்றது. இது பல ஆண்டுகளாக நீதிக்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்டவர்களினதும், அவர்களின் குடும்பத்தினருக்கும் பாதிப்பாக உள்ளது.

எனவே, அரசியல் ரீதியான காரணங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொள்வதை நிறுத்தி, அதன் உறுதிப்பாடுகளை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தி உள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் ஜெனிவாவில் உள்ள இயக்குநர் ஜோன் ஃபிஷர் இந்த விடயத்தை வலியுறுத்தி உள்ளார்.
வாக்குறுதிகளை செயற்படுத்துவதற்கான கால அட்டவணையை இலங்கை அறிவிக்க வேண்டும் - Reviewed by Author on March 21, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.