அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை குடும்பங்கள் உட்பட அகதிகள் குழுவொன்று அமெரிக்கா பயணம் -


அமெரிக்காவில் குடியமருவதற்காக நவுரு தீவு அகதிகள் முகாமிலிருந்து ஐந்தாவது அகதிகள் குழு அமெரிக்கா சென்றுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அவுஸ்திரேலியாவுடனான என்ற அகதிகள் மீள்குடியேற்ற திட்ட உடன்படிக்கைக்கு அமைய குறித்த குழு அந்த நாட்டுக்குச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ரோஹிங்கியா முதலான நாடுகளின் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த எட்டு சிறுவர்கள் அடங்களாக 29 அகதிகள், நவுரு தீவிலிருந்து நேற்று வெளியேறியுள்ளனர்.
அவர்களுள் மூன்று குழந்தைகள் அடங்களாக இரண்டு இலங்கை குடும்பமும் அடங்குகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேன்புல்லுக்கும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கடலோர தடுப்பு முகாம்களிலிருந்து 1,250 அகதிகளை குடியேற்ற இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.
இந்தக் குடியேற்றத் திட்டம் கடந்த 15 மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நவுரு தீவிலிருந்து 139 அகதிகளும், பப்புவா நியூகினியா மானஸ் தீவிலிருந்து 85 அகதிகளும், கடந்த செப்டம்பர் மாதம் முதல் மீள்குடியேற்றத்திற்காக வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அமெரிக்க அதிகாரிகள் குழு, நவுரு தீவில் தங்கிருப்பார்கள் என்றும், எனினும் அடுத்தக்கட்ட குழுவை மீள்குடியமர்த்துவததற்கான நேர்காணலை மேற்கொள்வதற்கான திட்டத்தை அவர்கள் இன்னும் திட்டமிடவில்லை என்றும் அகதிகள் செயற்பாட்டு கூட்டணியின் பேச்சாளர் இயன் ரின்டோலை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை குடும்பங்கள் உட்பட அகதிகள் குழுவொன்று அமெரிக்கா பயணம் - Reviewed by Author on March 05, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.