அண்மைய செய்திகள்

recent
-

சுவிட்சர்லாந்தில் இலங்கை தமிழர் முன்னெடுக்கும் புது முயற்சி -


சுவிட்சர்லாந்தில் திரைப்பட ரசிகர்களை ஊக்குவிக்கும் பொருட்டு புகழ்பெற்ற ஆலம்பரா திரையரங்கை இலங்கை தமிழர் ஒருவர் முன்னெடுத்து நடத்த உள்ளார்.

பெர்ன் மாகாணத்தின் சோலோதுர்ன் பகுதியில் குடியிருக்கும் கிரித்தாஸ் பாலசுப்ரமணியம் என்பவரே புகழ்பெற்ற ஆலம்பாரா திரையரங்கை முன்னெடுத்து நடத்த உள்ளார்.

ஆலம்பாரா திரையரங்கானது போதிய வரவேற்பின்றி படிப்படியாக மூடுவிழா கண்ட ஒரு திரையரங்காகும். தற்போது 400 இருக்கைகள் கொண்ட குறித்த திரையரங்கை கிரித்தாஸ் பாலசுப்ரமணியம் முன்னெடுத்து நடத்த உள்ளார்.
சுவிட்சர்லாந்தின் பெரும்பான்மையான திரை ரசிகர்களை ஈர்க்கும் பொருட்டு தமிழ் மட்டுமின்றி உலக திரை வரிசைகளையும் புதுப்பொலிவு பெறும் ஆலம்பாரா திரையரங்கில் காட்சிப்படுத்த உள்ளார்.

1980 காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான இலங்கை தமிழ் மக்கள் உள்நாட்டு போர் காரணமாக சுவிஸ் நாட்டில் குடியேறினர்.
கனடா, ஜேர்மனி மற்றும் பிரித்தானியாவை விட சுவிட்சர்லாந்தில் குடியிருக்கும் தமிழர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும்.
சுவிட்சர்லாந்தில் மட்டும் தமிழ் வம்சாவளியினர் சுமார் 50,000 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


சுவிட்சர்லாந்தில் இலங்கை தமிழர் முன்னெடுக்கும் புது முயற்சி - Reviewed by Author on March 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.