அண்மைய செய்திகள்

recent
-

இனப்படுகொலை என்று சொன்னால் என்ன? யாவரும் அறிய வேண்டிய முக்கிய விடயம் -


இலங்கை அரசாங்கத்தால் 70 ஆண்டுகாலமாக திட்டமிட்டு ஒரு இனம் அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது, இதனை இனப்படுகொலை என்று கூறாமல் வேறு என்னவென்று கூறுவது என பெங்களூர் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் தொடர்பான பேராசிரியர் போல் நியூமன் தெரிவித்துள்ளார்.
தற்போது ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்றுவரும் 37ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பக்க அமர்வு ஒன்றில் கலந்து கொண்டு இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர் போல் நியூமன், ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட யுத்தம் 2009இல் மௌனிக்கப்பட்டதன் பின்னர் அதில் இருந்து தொடர்ச்சியாக ஐக்கிய நாடுகள் சபையில் ஈழத்தமிழர்களின் மனித உரிமைகள் தொடர்பில் வலியுறுத்தி வருகின்றவர்களுள் மிக முக்கியமானவராக கருதப்படுகின்றார்.

இந்நிலையில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பில் இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையின் இனப்படுகொலைக்கு 70 ஆண்டுகால வரலாறு இருக்கின்றது, அது 1948ஆம் ஆண்டில் முதன் முதலில் இந்திய வம்சாவளிகளை நாடற்றவர்களாக மாற்றியதில் இருந்து ஆரம்பமாகின்றது என குறிப்பிட்டார்.
அடுத்தது 1956ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டமை இது இனப்படுகொலையின் அடுத்த அங்கம்.
இதில் மிகவும் முக்கியமான விடயம் என்னவென்றால் 300 வருடங்களுக்கு மேல் தனது பூர்வீகத்தைக் கொண்ட ஈழத்தமிழர்கள் அடிமைகளாக வாழ்கின்றனர்.
300 வருடங்களாக ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களிடம் அடிமைகளாக வாழ்ந்த ஈழத்தமிழர்கள் சுதந்திரத்திற்கு பின்னர் சிங்களவர்களிடம் அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு அடிமைகளாக வாழ்ந்த ஈழத்தமிழர்களிடம் இருந்த ஒரே சொத்து அவர்களின் கல்வியும் வேலைவாய்ப்பும், அதனையும் கூட புது கல்வி சட்டத்தின் ஊடாக பறிக்கின்றார்கள், வேலைவாய்ப்பையும் சிங்களவர்களுக்கு வழங்குகின்றார்கள்.

1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் இயற்றப்படுகின்றது, அந்த சட்டத்தின் ஊடாக 100 வீதமும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களாக மட்டுமே இருக்கின்றார்கள்.
பல்கலைக்கழகங்களை பொருத்த மட்டில், அங்கு கற்கும் மாணவர்களும் பேராசிரியகர்களும் 85 சதவீதம் பெரும்பான்மை சமூகத்தை கொண்டவர்கள் தான் அங்கம் வகிக்கின்றார்கள், இதில் கிழக்கு மற்றும் வடக்கு பல்கலைக்கழகங்கள் உள்ளடங்கியும் விகிதாசார அடிப்படையில் பெரும்பான்மையினரே அதனை ஆக்கிரமிக்கின்றார்கள்.
அரசாங்க வேலைகளிலும் கூட 95 சதவீதமானவர்கள் சிங்களவர்களே, அதேபோல் சட்டக்கல்லூரி மாணவர்களும் கூட 95 சதவீதமானவர்கள் சிங்களவர்களாகவே இருக்கின்றார்கள்.
இலங்கையினுடைய தூதுவராலயங்கள், உலகளாவிய ரீதியில் இருக்கும் தூதுவராலயங்களில் ஒரே ஒரு தமிழர் மாத்திரமே அங்கம் வகிக்கின்றார்.
இலங்கை இராணுவத்தில் 99.5 சதவீதம் பெரும்பான்மை சிங்களவர்கள் மாத்திரமே இராணுவத்தில் அங்கம் வகிக்கின்றார்கள்.
இலங்கை அகதி முகாம்களில் பிடித்து வைக்கப்பட்டிருப்பவர்களின் 100 சதவீதமானவர்கள், தமிழர்கள்தான் இருக்கின்றார்கள்.
யுத்தத்தின்போது தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் போன்ற எல்லா ஆயுதங்களையும் இலங்கை இராணுவத்தினர் பயன்படுத்தியது தங்கள் முன்னால் இருக்கக்கூடிய தமிழ் மக்கள் மீது. அதில் 100 வீதம் முழுதும் பாதிக்கப்பட்டது தமிழர்களே.
வடமாகாணத்தில் மூன்று மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன, அது தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது, அதில் மூன்றிலும் தோண்ட தோண்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட மீண்டும் அதைத் தோன்றாமல் அப்படியே விட்டுவிட்டார்கள்.
தாங்கள் வாழ்கின்ற பிரதேசத்தில் கூட இலங்கை இராணுவத்தினரிடம் அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது. உதாரணமாக கிழக்கில் இருந்து வடக்கிற்கு செல்லவேண்டும் என்றாலும் இராணுவத்தினரிடம் அனுமதிக் கடிதங்களை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது.
இந்த யுத்தத்தின்போது தமிழர்களுடைய கலாச்சாரம், பண்பாடு என்பன திட்டமிட்டே அழிக்கப்பட்டுள்ளன. இதில் மிக முக்கியமாக இந்து ஆலயங்களிலும், கத்தோலிக்க திருச்சபைகளிலும் இலங்கை இராணுவத்தினர் திட்டமிட்டு தாக்குதல்கள் நடத்தியிருந்தார்கள்.
தமிழர்களின் இன விகிதாசாரத்தை தடுப்பதற்கு கற்பத்தடை உருவாக்கப்பட்டது, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசத்தில் 90 ஆயிரம் விதவைகள் இதன் காரணமாக இருக்கின்றனர், இவற்றுள் 40 வயதிற்கு குறைந்த 40 ஆயிரம் விதவைகள் இருக்கின்றனர்.
தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள்கொண்டு தமிழ் மக்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழர்கள் மாத்திரமே பாதிக்கப்படுகின்றனர். 1995இல் இருந்து யுத்தம் முடியும் வரை 56 பொருட்களுக்கு இலங்கை அரசாங்கம் தடை விதிக்கின்றது? அதில் மருத்துவ வசதி உட்பட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தடை செய்யப்படுகின்றது. இது திட்டமிட்ட படுகொலைக்கு முக்கியமான ஆதாரமாக காணப்படுகின்றது.
இலங்கை இராணுவம் போரில் ஒரு யுக்தியாக தமிழ் மக்கள் மீது, தமிழ் பெண்கள் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொள்கின்றனர். அதில் எண்ணிலடங்கா பாலியல் துன்புறுத்தல்களை இராணுவம் ஆயுதமாக பயன்படுத்துகின்றது.

நாட்டின் பாதுகாப்பு எனக்கூறி சோதனைச் சாவடிகளை நாடு முழுவதிலும் அமைக்கின்றார்கள், அதன் மூலம் தடுத்து நிறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதவை. இதில் முழுக்க முழுக்க தமிழர்களே பாதிக்கப்படுகின்றனர். சோதனை சாவடிகளின் மூலம் கூட தமிழர்களை திட்டமிட்டு அழிக்கின்றார்கள்.
கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருப்பவர்கள் அதிகமானோர் சிங்களவர்கள் எனினும், கைதிகளுக்கு இடையில் ஏற்படும் வன்முறைகளில் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் தமிழர்களே. இதுவும் திட்டமிட்ட இனப் படுகொலைதான்.

இவ்வாறு எல்லா விடயங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள், அதுவும் 100 வீதம் எல்லா வழிமுறைகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களே.
மருத்துவ வசதியை தடுப்பது, தமிழர்கள் மீது கொத்துக் குண்டு தாக்குதல்களை பிரயோகிப்பது, பல்கலைக்கழகங்களுக்கு தமிழ் மாணவர்களை அனுமத்திக்காமல் இருப்பது, பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர்கள் முழுக்க முழுக்க சிங்களவர்கள், இராணுவத்தில் 99 சதவீதம் சிங்களவர்கள் இவ்வாறு எல்லா வழிமுறைகளிலும் பெரும்பான்மையினர் இருக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு 70 வருடங்களாக திட்டமிட்டு ஒரு இனம் அழிக்கப்படும்போது அதனை நான் இனப்படுகொலை என்று கூறாமல் என்னென்று சொல்வது எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.
இனப்படுகொலை என்று சொன்னால் என்ன? யாவரும் அறிய வேண்டிய முக்கிய விடயம் - Reviewed by Author on March 23, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.