அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்காவில் கொலைவெறி தாக்குதல்: நிர்வாண மனிதன் சுட்டதில் 3 பேர் பலி -


அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்றில் நுழைந்த மர்ம நபர் அங்கு சாப்பிட்டு கொண்டு இருந்தவர்கள் மேல் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
தெற்கு அமெரிக்காவில் உள்ள டென்னெஸ்ஸீ மாகணத்தின் உள்ள அண்ட்டியாஷ் என்ற இடத்தில் வேஃப்ல் ஹவுஸ் என்னும் பிரபல உணவகம் ஒன்று இயங்கி வருகிறது.

இன்று வார விடுமுறை நாள் என்பதால் வேஃப்ல் ஹவுஸ் உணவகத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை கையில் துப்பாக்கியுடன் ஆடை ஏதும் இன்றி நிர்வாணமாக ஒரு மர்ம நபர் அந்த உணவகத்துக்குள் நுழைந்துள்ளார்.
கண நேரத்தில் துப்பாக்கியை எடுத்து உணவகத்தில் சாப்பிட்டுகொண்டு இருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளான் அதன் பின் காரை எடுத்துகொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.
இந்த கொலைவெறி தாக்குதலில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலியாகியுள்ளனர். நான்கு பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்து பேசிய பொலிஸ் அதிகாரிகள் தாக்குதல் நடத்திய நிரவாண மனிதனின் பெயர் Travis Reinking(29) 4646 அவரன் மேல் கோட் மட்டும் அணிந்து நிர்வாணமாக இருந்துள்ளான்.
துப்பாக்கிசூட்டில் அவன் பயன்படுத்திய துப்பாக்கி AR-15 assault rifle எனும் உயர் ரக துப்பாக்கி என்று கூறினர் மேலும் நிர்வாண மனிதனின் புகைப்படங்கள் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அவனை பற்றி தகவல் தெரிந்தால் தொடர்பு கொண்டு தெரிவிக்க தொலைபேசி எண்ணையும் பொலிஸ் அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் கொலைவெறி தாக்குதல்: நிர்வாண மனிதன் சுட்டதில் 3 பேர் பலி - Reviewed by Author on April 23, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.