அண்மைய செய்திகள்

recent
-

குழந்தைகளை ஏசி ரூமில் தூங்க வைக்கிறீங்களா? கண்டிப்பா இதை தெரிஞ்சுகோங்க


ஏசி காற்று குழந்தைகளின் முகத்தில் நேரடியாக படக் கூடாது. அதற்கு ஏற்றாற்போல், குழந்தைகளை மாற்றி படுக்க வைக்க வேண்டும். ஏசி காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், குழந்தைகள் மூச்சுவிட சிரமப்படுவார்கள். இதனைக் கவனித்துக் கொள்வது மிகவும் அவசியம்.
  • ஏசி பில்டரில் இருக்கும் தூசியை வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். இல்லையெனில் பில்டரில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத தூசிகள், குழந்தைகளின் மூச்சுக்குழாய்க்குள் சென்றுவிடும். இந்த தூசியை வெளியேற்ற நுரையீரல் அதிக சளியை உற்பத்தி செய்யும்.
  • சூடான அறையில் இருந்து, சட்டென்று ஏசி அறைக்குள் அழைத்து செல்ல வேண்டாம். ஏசி அறையில் நுழைந்ததும் 16, 17 டிகிரி என குறைந்த வெப்பநிலையில் ஏசியை வைக்கக் கூடாது.
  • ஏசி அறையில் நுழைந்த உடனே, குழந்தைகளை சட்டை இல்லாமல் தூங்க வைக்கக் கூடாது. வளர்ந்த பிள்ளைகளுக்கு நெஞ்சுப் பகுதியையும், 3 வயதுக்கு உட்பட்ட குழந்தை என்றால், நெஞ்சு மற்றும் பாதத்தை துணியால் மறைத்து தூங்க வைக்கவும்.
  • 16 மற்றும் 17 டிகிரி வெப்பநிலையில் தொடர்ந்து தூங்கும் குழந்தைகளுக்கு, சுவாசப் பாதிப்பு ஏற்படும். பிறந்த குழந்தையை கதகதப்பான அறையில் தான் தூங்க வைக்க வேண்டும். அம்மாவில் வயிற்றில் இருக்கும் போது, 30 டிகிரி வெப்பநிலையில் இருந்திருக்கும். எனவே 23 -26 டிகிரி வெப்பநிலையில் ஏசியை வைப்பது தான் நல்லது.
  • ஏசி தொழில்நுட்பத்தின் படி, மெஷின் உள்ளே வெளிக்காற்று வரும். ஆனாலும் வெளிக்காற்று உள்ளே வருமாறு ஒரு சிறிய திறப்பு எங்காவது இருக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும். இல்லையெனில், நீங்கள் வெளிவிட்ட காற்றையே குழந்தை சுவாசிக்க நேரிடும்.

குழந்தைகளை ஏசி ரூமில் தூங்க வைக்கிறீங்களா? கண்டிப்பா இதை தெரிஞ்சுகோங்க Reviewed by Author on April 25, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.