அண்மைய செய்திகள்

recent
-

டென்மார்க்கில் தேசிய ரீதியில் மதிப்பளிக்கப்பட்ட ஈழத்தமிழன் -


டென்மார்க் நாட்டில் அண்மையில் இடம்பெற்ற 2017ஆம் ஆண்டிற்கான சாதனையாளர் மதிப்பளிப்பில் ஈழத்தமிழர் ஒருவர் தேசிய வீரனுக்கான விருதினை பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளார்.
டென்மார்க்கில் தேசிய மட்டத்தில் இடம்பெற்ற 15 வயதுப்பிரிவுக்கான 100 மீற்றர் ஓட்டம் மற்றும் 200 மீற்றர் ஓட்டம் ஆகியவற்றில் ஈழத்தமிழர் சிறுவனான நிலான் கணேஸ்வரன் முதலாம் இடத்தைப்பெற்று அரசின் தேசிய வீரனுக்கான விருதினை தனதாக்கிக்கொண்டுள்ளார்.
2002ஆம் ஆண்டு பிறந்த நிலான் கணேஸ்வரன் டென்மார்க்கின் தரம் 9ல் கல்விகற்று வருகிறார்.

தாயகத்தில் கிளிநொச்சி வட்டக்கச்சியை பிறப்பிடமாகக் கொண்ட கணேஸ்வரன் பத்மசோதி தம்பதிகளின் இளைய மகனாகிய நிலான் கணேஸ்வரன் அவர்களின் தந்தையார் சண்முகம் கணேஸ்வரன் டென்மார்க் Sonderborg நகரசபை உறுப்பினராக டென்மார்க் அரசியல் களத்திலும் கடந்த பலவருடங்களாக சேவையாற்றி வருகிறார்.
இவர் 15 வயதுப் பிரிவுக்கான 1௦௦ மீற்றர் ஓட்டத்தினை 11.68 வினாடிகளிலும் ,2௦௦ ஓட்டத்தினை 24.10 வினாடிகளிலும் ஓடி முடித்து தனது சாதனையை நிலைநாட்டியுள்ளார். இதற்காக டென்மார்க் அரசு, 06.04.2018 அன்று இவரை Land mester ஆக தெரிவுசெய்து பட்டம் வழங்கி மதிப்பளித்துள்ளது.

இவர் கடந்த சில வருடங்களாக vidar Atlatik Sonderborg என்ற விளையாட்டுக்கழகத்தில் பயிற்சி பெற்று வருவதுடன் டென்மார்க் தமிழர் விளையாட்டுத்துறை, மாலதி தமிழ் கலைக்கூடம் போன்ற அமைப்புக்களின் தடகள மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றி பல வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கியுள்ளார்.

இவர் பாடசாலை நேரங்கள் தவிர்ந்து, மற்றைய ஓய்வு நேரங்களில் பகுதி நேரமாக அங்குள்ள (AIdi Supermarket என்ற நிறுவனத்தில் காசாளர் ஆகவும் பணியாற்றி, விளையாட்டு பயிற்சிகளிலும் ஈடுபடுகின்றார்.
டென்மார்க்கில் தேசிய ரீதியில் மதிப்பளிக்கப்பட்ட ஈழத்தமிழன் - Reviewed by Author on April 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.