Top Ad unit 728 × 90

அண்மைய செய்திகள்

recent
-

கலாபூஷணம் விருதுபெற்ற கபிரியேல் இம்மானுவேல(சீனிமுத்து)புலவர் அவர்களின்.....


கலைஞனின் அகம் கணனியில் முகம்  விம்பம் பகுதியில்  நாடக நடிகர் நாட்டுக்கூத்து கலைஞர் கைவினைஞர் கவிஞர் விளையாட்டு என பன்முகப்படைப்பாளியும் கலைமாமணி மற்றும் கலாபூஷணம் விருதுபெற்றவரும் 56வருட கலைச்சேவையாளருமான கபிரியேல் இம்மானுவேல(சீனிமுத்து)புலவர் அவர்களின் அகத்தில் இருந்து…..

தங்களைப்பற்றி----
மன்னார் மாவட்டத்தின் நறுவிலிக்குளம் வங்காலையினை பிறப்பிடமாகவும் உயிலங்குளம் புதுக்கமம் கிராமத்தின் மன்னார் மண்ணே வாழிடமும் ஆகும்  எனது தந்தை திரு. ஏலியாஸ் கபிரியேல் புலவர் தாய் கபிரியேல் ஞானசவுந்தரி பிள்ளைகள் உறவுகளுடனும் 1962-2018 கலையுடன் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றேன்.

தங்களது தந்தை பற்றி----
எனது தந்தை திரு. ஏலியாஸ் கபிரியேல் பரியாரி புலவர்  தமிழ்வித்துவான் 1945ம் ஆண்டு இந்தியா சென்று படித்து தமிழ்வித்துவான் பட்டம் பெற்றார் அத்துடன் இலங்கையில் 1951கலைமாமணி விருதும் பெற்றுள்ளார் சிறந்த கலைஞர் நாட்டுப்பற்றாளர் கலையார்வளர்.

தங்களது கல்விக்காலம் பற்றி---
எனது குடும்பத்தில்03வது மகன் நான் எனது ஆரம்பக்கல்வியை
வஞ்சியன்குளம் றோ.க.த.க பாடசாலையில் கற்றேன் பின் பாடசாலையைவிட்டு விலகி வங்காலை காணிக்கை நாதன் கூஞ்ஞ அவர்களிடமும் தமிழும் எனது தந்தையாரிடம் இலக்கியமும் பல்வேறு அறிவுசார் நூல்களையும் கற்றேன் அத்துடன் காலஞ்சென்ற திரு.பத்திநாதன் மாற்கு அவர்களிடமும்  யாழ்ப்பாணம் நடேசன் பாலசுப்பரமணிய ஐயாவிடமும் கற்று புலமைபெற்று எனது கலைப்பணியை 1962ம் ஆண்டில் இருந்து ஆரம்பித்தேன்.

நாட்டுக்கூத்துக்கலைஞர்களுக்கு இருக்கவேண்டிய தகுதிகள் என்றால்……
நாட்டுக்கூத்துக்கலைஞன் அதுவும் புலவர்கள் நான்கு மதத்தினையும் அதன் வேதவாக்கியங்களையும் அதன் சின்னங்கள் மகத்துவங்கள் தத்துவங்கள் நன்கு அறிந்து இருக்கவேண்டும் இஸ்லாம் சைவம் கிறிஸ்த்தவம் பௌத்தம் இவை நான்குமே தனித்தனியாக இருந்தாலும் சொல்லுகின்ற விடையம் ஒன்றுதான் மக்களின் அறவழியில் அன்பு தான் வாழ்வு

புலவர்களின் புலமை பற்றி......
புலவர்களின்புலமை எனும் அன்று தமிழில் உள்ள  பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஐம்பெருகாப்பியம் ஐம்சிறுகாப்பியம் இலக்கண இலக்கிய நூல்களை நன்கு கற்றுணுர்ந்தார்கள் அதிலும் நன்னூல் முத்தொள்ளாயிரம் கம்பராமாயனம் போன்ற நூல்களை நன்கு கற்றுணர்ந்தார்கள் நானும் படித்துள்ளேன் அது ஒரு வரம் நான் பெரிதாக கல்வி கற்றதை விட அனுபவத்தாலும் எனது ஆர்வத்தாலும் நிறைய கற்றுக்கொண்டேன் .

தமிழ்மொழியின் சிறப்பும் அத்தோடு எனது காலத்தில் கொண்டச்சி சேர்ந்த செரிபு என்ற கவிஞர் ஒரு காப்பு பாடினார் இப்படி

பூமாரி பொன்மதி
பூர்வச் கருவசேர் மனதில்
கோமாரி மேகமது பூவெடுத்து மாயேடு
ஆரஞ்சுவர் பாசயூரான் சீர்மணி
ஆரணிஞ்சல் எல்லிறைவனே காப்பு


(பூமாரி-பூ மாரி-கடல் பொன்மதி-ஆகாயம் சீர்மணி-நட்சத்திரம் எல்-இறைவன்)
நான் எழுதிய பல கவிதைகளை நாடகங்களை பலர் பிரதி எடுத்துள்ளார்கள் பரவாயில்லை ஆனால் கலைஞர்கள் சுயமாக தமது ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கலைஞர்கள் எப்படியிக்கவேண்டும்----
நான் என்ன சொல்ல எமது பெரியோர்களால் சொல்லப்பட்டள்ளதைப்பாருங்கள்
 • ஆசுகவி-திடிரென கவிபாடுதல்
 • மதுரம்- காதல் மற்றும் அன்பு கனிவுடன்பாடுதல்
 • சித்திரம்-காமவெறியுடன் பாடுதல்
 • வித்தாரம்-அகங்காரம் கொண்டு பாடுதல்(வடசொல் அதிகம்இருக்கும்)
அதேபோல் நாட்டுக்கூத்தில் 03பாங்கு உள்ளது
 • வடபாங்கு
 • தென்பாங்கு
 • சிந்துநடை(காத்தவராயன் கூத்து) சரித்திர நாடகங்கள் சமூகநாடகங்கள் நகைச்சுவை நாடகங்கள் என உள்ளது

பாத்திரங்களை படைக்கும் போது கவனிக்கவேண்டிய விடையங்களை…
சொல்லோடு பொருளமைந்து
சேரநிதி வல்லவன்
வல்லறிவான் இவன்
நறுங்குகின்ற ஞானமூர்த்தி
பல்லுகமுறையும் மாமுனி

பரமன் யமையும் வையகத்து கலைதனிலே

ஒரு சொல்லின் பொருள் அதன் கதையின்பாத்திரம் பலபொருள்கள் பல பாத்திரங்கள் அவற்றுக்கு ஏற்றால் போல் இருக்கவேண்டும் அப்போதுதாhன்அது சிறந்த கலையாக இருக்கும்.

நீங்கள் எழுதிய நாட்டுக்கூத்து நாடகங்கள் பற்றி---
நான் பல நாடகங்கள் நாட்டுக்கூத்துக்கள் எழுதியுள்ளேன் தற்போது சில நாடகங்கள் நாட்டுக்கூத்துக்கள்பெயர்கள் தான் ஞாபகத்தில் உள்ளவையினை சொல்கின்றேன்.
 • கைத்தான் வாசாப்பு(யாழ்ப்பாணம்)
 • சந்தோமையார் வாசாப்பு
 • சதேயூ வாசாப்பு 
 • மகுடாபிஷேகம் வாசாப்பு-1977
  • சம்பேதுரு அப்போஸ்தலர் வாசாப்பு
  • புனித தவநாதன் வாசாப்பு
 • கன்னியின் திருமணம் நவீன நாட்டுக்கூத்து-12-06-1977
 • சிலுவையின் புதுமை நாட்டுக்கூத்து.
 •  வடமோடி தென்மோடி நாட்டுக்கூத்துக்கள்
  நாடகங்கள்
 • மரிஸ்ரெல்லாவின் மர்மம்-நாடகம்-2005
 • திரு ஞானசீலன் படைவென்ற நாடகம்-இரண்டுஇரவு
 • புனித சூசையப்பர் நாடகம்-இரண்டுஇரவு-1986-02-22
  • நெபுக்கத்துநேசர் சிறு நாடகம்
  • சீரணிப்பர் சிறு நாடகம்
  • சம்பேதுரு சிறு நாடகம்
  • சங்கிலித்தொடர் சிறு நாடகம்
  • தாவீதின் தத்துவம் சிறு நாடகம்
  • ரெட்சகன் ஜனனம் சிறு நாடகம்
  • அன்னையின்புதுமை சிறு நாடகம்
  • எஸ்பிரதாஸ சீலன் சிறு நாடகம்
  • திருத்துவத்தின் உருவம்
 வரலாறுகள் கட்டுரைகள்
 • புதுக்கமம் கிராமத்தின் வரலாறு
 • வஞ்சியன் குளஆலயவரலாறுபல அறிஞர்களின் ஆராச்சிக்கட்டுரைகளை எழுதியுள்ளார்
 • நூல்களிலும் வந்துள்ளது.
வசன நாடகங்கள்….
 • மகுடாபிஷேகம் வசன நாடகம்-1976
 • ஆந்திரேயின் சரிதை
 • ஏழையின் கண்ணீர்
 • குடியை கெடுத்தவன்
 • ஆவதந்திரம் தனக்கந்திரம்
 • ஆதிஸ்டபலன்
 • காணிக்ககை
 • யோசப்வாஸ்
 • ஒரு குழந்தை இருதாய்
 • கற்பாவின் தரிசனம்(இஸ்லாமிய நாடகம்)
 • நபிகளின்அலங்கிர்தம்
 • ஞானக்குழந்தைகள்
 • கலைப்பரிசு
 • பார்வதிதிருமணம்
 • சித்தாத்தனின் துறவு
ஆனந்தகலிப்பா
 • புதுக்கமம்-குஞ்சுக்குளம்-கள்ளிகட்டைக்காடு-முதலைக்குத்தி-உயிலங்குளம் ஆலயங்களின் கவிகள் பாடியுள்ளேன்.
 • அந்தோனியார்பேரில்பத்துப்பதிகம்
 • சமரகவி பாடல்கள்
 • கோயில் பாடல்கள்
 • கல்வெட்டுப்பாடல்கள்(இறந்தவர்களுக்கு அவரது சரிதை)
 • புதுக்கமம்சு10சையப்பர் ஆலயம்(மங்களகீதம்இசைப்போம்)
 • உயிலங்குளம் இராயப்பர் ஆலயம்(இறைவன் நாமத்தில்அவதரித்த)
 • நறுவிலிக்குளம் யாகப்பர் ஆலயம்(திருபரதூய நமஸ்காரம்)கப்பல் பாடல்கள் வாழ்த்துப்பாடல்கள்
 • புதுக்கமம் பாடசாலைக்கீதம்
 • புதுக்கமம் மாதர்சங்க கீதம்

நாட்டுக்கூத்து நாடக கலையைத்தவிரவேறு தெரிந்த விடையங்கள் பற்றி---
 • பஞ்சாங்கம் பார்த்தல்
 • மனை அளத்தல் 
 • ஓவியங்கள் வரைதல்
 • நாட்டுக்கூத்து நாடகம்
 • கல்வெட்டுப்பாடல்கள் வாழ்த்துப்பாடல் எழுதுதல்
 • கைப்பணிவினைப்பொருட்கள் செய்தல் (பனையோலையில் களிமண்ணில்- எழுத்தாணிகொண்டு பனையோலையில் எழுதுவேன்)
 • ஆர்மோனியம் தபேலாசில இசைக்கருவிகள் வாசிப்பேன்
 • கரப்பு வைத்தல்(நண்டு பிடித்தல்) 
 • கலப்பையும் பிடிப்பேன் விவசாயம்.
கலைஞர்களுக்குரிய கௌரவிப்பு சரியாக கிடைக்கின்றதா…
அதுதான்இல்லை கலைஞர்கள் கௌரவிப்பு விருதுகள் வழங்கள் விழாக்களுக்கு அழைத்தல் என்பவற்றில் எல்லாமே பாகுபாடு தான் ஆரம்பகாலங்களில் இனம்(செப்புபட்டையம்-கொப்பேடு-செப்பேடு-அரவம்-மரவம்) மதம் பாகுபாடும் தற்போது செல்வாக்கு தேவைப்படுகின்றது திறமைக்கு இடம்  இல்லை என்பதை உணருகின்றேன்.
மூத்தகலைஞராக1962-2018 வரை இருக்கின்றேன்.

தாங்கள்பெற்ற விருதுகளும் பட்டங்களும் 
 • முதியோர் கவிதைப்போட்டியில்முதல் இடம்
  • கௌரவ விருது-மன்னார்தமிழ்சங்கம் செம்மொழி விழாவில்-2010
  • கலாபூஷணம் -2007-கலாச்சார பண்பாட்டுஅலுவல்கள்திணைக்களம்
  • கலைஞர் சுவதம் விருது- மன்னார் நகரம்- கலாச்சார பண்பாட்டுஅலுவல்கள்திணைக்களம-2017
 எங்களுடைய காலத்தில் பெரிதும் பொன்னாடையும் பொற்கிளியும் தந்துள்ளார்கள் இப்போது ஞாபகத்தில் இல்லை


மன்னார்மாவட்டத்தின் பெருமைபேசுகின்ற நியூமன்னார் இணையம் பற்றி----
இதுவரை என்னை போட்டிக்களைத்து முட்டிமோதியவர்கள்தான் அதிகம் நீங்கள் தான் முதன் முதலாய் என்னை பேட்டியெடுத்து வெட்டவெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றீர்கள் அதற்காக கஜேந்திரனாகிய உங்களுக்கும் உங்களது இணைய நிர்வாகத்தினருக்கும்  எனது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.

சந்திப்பு-வை.கஜேந்திரன் -


 

கலாபூஷணம் விருதுபெற்ற கபிரியேல் இம்மானுவேல(சீனிமுத்து)புலவர் அவர்களின்..... Reviewed by Author on April 16, 2018 Rating: 5
Post a Comment
Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.