அண்மைய செய்திகள்

recent
-

உணவில் கலப்படம் உயிர்கள் கவலைக்கிடம்…..


உணவில் கலப்படம் உயிர்கள் கவலைக்கிடம்…..

இந்த உலகில் மனிதன் உயிர் வாழத்தேவையான மூன்று விடையங்களை அடிப்படையாக கொண்டுள்ளான் அது உணவு-உடை-உறையுள் என்று எமது பெரியோர்களால் சொல்லப்பட்டுள்ளது யாவரும் அறிந்த விடையமே….
அதில் முதலாவதாய் உள்ளது உணவு அந்த உணவு தொடர்பாகதான் இங்கு பார்க்கப்போகின்றோம்.
ஒருமனிதன் சராசரியாக மூன்று வேளை காலை மாலை இரவு உணவு உண்கின்றான். இது சாதாரண நிகழ்வு தான் இதுவே பணம் படைத்தவர்களின் உணவும் உண்ணும் வேளையும் மாறுபடும் வேறுபடும் ஏழைகளினதும் நாட்கூலிகளினதும் உணவுகள் சொல்ல வேண்டியதில்லை தெரிந்த விடையமே…..

இங்கு உயிர் வாழ்வதற்கும் உலாவுவதற்கும்  உணவு கட்டாயம் என்பதால் எப்பாடுபட்டாவது எதையாவது செய்து உண்ணத்தான் வேண்டும் என்ற நிலை
அந்த உணவும் சிலர் ருசிக்காகவும் பலர் பசிக்காகவும் உண்கின்றபோது சிலரை பசியே உண்கின்றது தனிக்கதை.

உலகில் ஒரு பகுதியில்  ஒருதொகுதி உணவுகள் உற்பத்திகள் குப்பையில் கொட்டப்படுகின்ற அதே வேளை இன்னுமொருபகுதியில் உணவின்றி பல உயிர்க்ள இறக்கின்றனர் என ஆய்வு சொல்கின்றது.

சும்மா கிடக்கின்றது வயிறு என்று அதை நிரப்பும் வேளையில் பலர் ஈடுபடுவதுண்டு எதைச்சாப்பிடுகின்றோம் என்று தெரியாமல் சாப்பிடுகின்றார்கள் இன்னும்.

உணவு முறையில் தற்போது
•    அழகு கவர்ச்சி சார்ந்ததா……
•    ஆரோக்கியம் நோய் எதிர்ப்பு சக்தி சார்ந்நதா…

இவையிரண்டில் மக்கள் அதிகம் விரும்புவது அழகையும் கவர்ச்சியும் தான் அந்த உணவில் இருப்பது வெறும் கழிவுதான் அதுவும் இரசாயண ங்கள் மிகவும் கொடுரமாய் தாக்கும் நச்சு நஞ்சுபதார்த்தங்கள் சேர்ந்த கலவையாகவே இருக்கும். இதையாருமே உணர்ந்து கொள்வது மக்களின் இயலாமையாகிப்போன விடையமாக உள்ளது.

நாம் உண்ணும் உணவுகளில் கலப்படம் என்பது எதில் இல்லை என்று சொல்ல முடியாத அளவுக்கு கலந்துள்ளது.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி
அமிர்தத்திலும் அதிகமாய் கலந்திருக்கின்றது நஞ்சு என்பது புதுமொழி

தெரியாமல் நடப்பவை அதிகமாக இருந்தாலும் தெரிந்து நடப்பதையும் கண்டுகொள்ளாமல் தான் இருக்கின்றோம்..
  • பெற்றோலில் கருவாடு காயவைத்தல்(ஈக்கள் மொய்க்காது பழுதாகாது அழகாக இருக்கும் பாதிப்பில்லையாம் விற்பனையாளரின் கருத்து)
  • பழைய வெந்தயம் இதரப்பொருட்களில் வர்ண சாயம் கலத்தல்.
  • பழைய பொருட்கள் புளி போன்ற பொருட்களில் எண்ணைசேர்த்து பிசைதல்;
  • மிளகு 1kg 1200ருபாய் பப்பசி விதை கலத்தல்
  • பாணில் ஈஸ்ற் அதிகமாய் கலத்தல் வெளிறி அழகாய் இருக்கும்.
  • பிளாஸ்ரிக் அரிசி
  • பிளாஸ்ரிக் முட்டை
  • பழங்கள் காய்கறிகள் அனைத்திலும் இரசாயணம் தெளித்தல் விசிறுதல்.
  • புரொய்லர் கோழி இறைச்சி (சமைப்பதற்கும் சாப்பிடுவதற்கும் இலகு
பழங்களில் காய்கறிகளில் இயல்பாகவே வாழும் பூச்சிகள்  கூட வாழ முடியவில்லை இரசாயணத்தால் அதை வாங்கி உண்ணும் நாங்கள் எப்படி ஆரோக்கியமாக வாழ முடியும் சிந்தியுங்கள்.
பழைய புகையூட்டல் முறையினையும் இயற்கையான உரங்களையும் மறந்து விட்டோம்.
  • எண்ணெய்யில் வரும்போது இரசாயணக்கலப்பு அந்த எண்ணெயில் பொரியல் செய்யும் போது உணவகங்கள் விருந்துக்கான பெரும்சமையல்களில்  பிரதானமாக இறைச்சி வடை பப்படம் மிளகாய் இன்னும் பலவகையான பொருட்களை பொரிக்கும் போது அந்த நேரம் பிளாஸ்ரிக் துண்டு ஒன்றினை அதில் போட்டால் பொரித்து எடுக்கப்படகின்ற பொருள் மொறுமொறுப்பாகவும் அழகாகவும் எண்ணைத்தன்மையில்லாமலும் அதே நேரம் அதிகமாகவும் பொரிக்கலாம் பொரிக்கப்படுகின்றது.

வீட்டில் சமைக்கும் உணவுகளை பெரிதாக விரும்பி சாப்பிடாதவர்கள் அப்படிசாப்பட்டாலும் தவறுதலாக வரும் தலைமுடி சிறுகல் என்றவுடன் பொங்கி எழுகின்ற நாம் சுவைக்காகவும் ஈசிக்காகவும் கடையில் வாங்கும் உணவுகளில் எதைக்காண்கின்றோம்…..???

இன்னும் கொஞ்சமாய் பார்த்தால் Fast Foods துரித உணவுகள் என்று நாம் எமது உடனடித்தேவைக்கான உணவுகளை கடைகளிலும் உணவகங்களிலும் பெற்றுக்கொள்கின்றோம் எந்தளவுக்கு அது சுத்தமானதாகவும் சுகாதாரமாகயும் இருக்கும் என்று சொல்ல முடியுமா…???
•    இறைச்சி துண்டுக்குள் புழு
•    உணவுப்பார்சலில் புழு-மட்டத்தால்-எலி-இன்னும்
•    குளிர்பாணத்தினுள் (ஆணுறை-பல்லி-தவளை-பூச்சி-இன்னும்
•    தேயிலையில் சீனி சுண்ணாம்பு கலப்படம்
இவ்வாறு நிறைய சம்வங்கள் பத்திரிகைகளில்..........
 பொது இடங்களில் வீதிகளில் வெட்டி விற்கப்படுகின்ற அன்னாசி-மாங்காய் கொய்யா-இளநீர் போன்றவற்றில் சுத்தமில்லை என்பதோடு சில தொற்றும் கொடிய நோய்கள் எயிட்ஸ் இரத்தத்தோடு கலந்து பாதிக்கப்பட்ட செய்தியும் உண்டு அல்லவா..

அத்தோடு சிறுவர்கள் அதிகமாக விரும்பி உண்ணும்
•    இனிப்பு வகைகள் கன்டோஸ் வகைகள்
•    டிப்பி டிப்பி போன்ற வைகள்
•    நூடில்ஸ் வகைகள்(2நிமிடத்தில் றெடி)
•    பிஸ்கட்வகைகள்
•    பைக்கட் பொதிகள் என்று
•    புதப்படுத்தப்பட்ட ரின்மீன்-யோகட்வகைகள் இன்னும்
குளிர்பானங்கள்  பால்மா அதிக வளர்ச்சிக்காய் என விளம்பரங்களைப்பார்த்து இன்னும் ஏராளமாய் உள்ளது இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்…. நீள்கின்றது எமது பாவனைப்பொருட்களின் வரிசை….

இவற்றில் பெரும்பாலும் இரசாயணங்கள் சுவையூட்டிகள் வர்ணக்கலவைகள் எண்ணற்ற சேர்வைகள் சேர்த்து தான் செய்கின்றார்கள் பல படிமுறைக்கு பின்பு எமக்கு பாவனைக்கு வரும் போது அழகான ஆரோக்கியமானதென மாயையை உருவாக்கி விளம்பரத்துடன் விற்பனைக்கு வரும் போது நாமும் அதை விரும்பி வாங்குகின்றோம் பயன்படுத்துகின்றோம்.

நாம் தினமும் பருகும் போத்தில் தண்ணீரிலும் குளிர்பானங்களிலும் இருக்கும் ஆபத்தினைப்பார்ப்போம்.......
ஒரு பிளாஸ்ரிக் வாட்டர் பாட்டலில் கண்ணுக்கு தெரியாத ஆயிரக்கணக்கான நுண்ணிய பிளாஸ்ரிக் துகள்கள் போலிப் புறப்பலின் நைலோன் போலி எத்தலின் நெத்தலின் என கண்ணுக்கு தெரியாத பிளாஸ்ரிக் 1லீட்டர் தண்ணீரில் 0-10000
micro மைக்கிறோ பிளாஸ்ரிக் துகல்கள்  இருப்பதாக  வாசிங்டன் DCஆய்வில் OFF MEDIA கண்டறியப்பட்டுள்ளது..
சுத்தமான நீர் என்று நாம் பாட்டிலில் வாங்கி அருந்தும் தண்ணீரில் தான் இவ்வளவு அசுத்தம் விளம்பரங்களைப்பார்த்து ஏமாந்து போகின்றோம்.

 
ஒரு soft drinks ஓரு hard drinks இரசாயன கலவையால் ஆகிறது...
மென்பானம் (soft drinks) என்பது அதிக அளவில் 'ஃபிரக்டோஸ்' எனும் சர்க்கரையும் கார்பன்-டை-ஆக்சைடும் கலக்கப்பட்ட ஒரு பானம். எந்தவொரு ஊட்டச்சத்தும் இல்லை. இதைக் குடிப்பதால் சக்தியும் கிடைப்பதில்லை. இது ஆரோக்கியமும் அளிப்பதில்லை.
மென்பானங்களின் சுவையை மேம்படுத்துவதற்காகஇ காஃபீன் எனும் வேதிப்பொருளைச் சேர்க்கிறார்கள். இனிப்பை நிலைப்படுத்துவதற்காகச் சிட்ரிக் அமிலம்இ பாஸ்பாரிக் அமிலம் போன்றவற்றைக் கலக்கிறார்கள். வண்ணமூட்டுவதற்காக கேராமல் மற்றும் பீட்டா சுரோட்டீனை பயன்படுத்துகிறார்கள். தவிர மென்பானங்களில் செயற்கைச் சுவையூட்டிகள்இ செயற்கை நிறமூட்டிகள்இ பதப்படுத்தப் பயன்படும் பொருள்கள் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நம் உடல் உறுப்புகளுக்கு ஆபத்தைத் தருகிறது.
சோடா வகைகள் சிறந்த பூச்சிநாசினி மருந்தாகவும் உள்ளது(விஷ ஜந்துக்கள் இறக்கின்றன கறல்-காவி சுத்தமாகின்றது சமூகஊடகங்களில் காட்டுகின்றார்கள்.)

•    புகைத்தல் புற்றுநோயை உண்டு பண்ணும் என்று விளம்பரப்படுத்தியே கோர்லீப்-புழனந டுநநக வகைகள் விற்கின்றார்கள் அதை புகைக்காமலா…. இருக்கின்றோம்.
•    குளிர்பாணப்போத்தல்களில் மூடிகளில் உயர் நிலை சீனி தாழ்நிலை சீனி  நடு நிலைசீனி என வர்ணத்தோடு குறிப்பிட்டுள்ளார்கள் குடிக்காமலா…. விடுகின்றோம்.
•    குடி குடியை கெடுக்கும் குடிக்காமலா இருக்கின்றோம்
நஞ்சு குடித்தால் அதன் தாக்கம் உடனே தெரியும்
மேலே குறிப்பிட்டவையும் நஞ்சுதான் அவை மெல்லக்கொல்லும் நஞ்சு….இதில் இருந்து எமது இளம் பிஞ்சுகளையாவது காப்பாற்ற விழிப்படைவோம்.

•    அதுபோல கடைகளிளும் அங்காடிகளிலும் விற்கின்ற பொருடகள் விலை அதிகம் நிறை குறைவு
•    பொருட்களின் தரமின்மை காலவதியான பொருட்கiளின் திகதியினை மாற்றி விற்றல்.
•    பொருளின் நிறை ஒன்று அதன் தன்மை ஆனால் அது உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வேறு அதன் விலைகள் நிறுவனப்பெயருக்கு ஏற்றது போல் மாறுபடும்.

கவனமாயிராமல் உணவில் பல்லி விழுந்து கஞ்சியில் இறந்து  அதையுண்ட ஒரு குடும்பத்தில் 04பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டு  ஒரு குழந்தை இறந்துள்ள சம்பவமும் உள்ளது.
அது போல பல்லியோடு குழைத்து பிட்டு அவித்து உண்டு ஒரு பெண் இறந்த சம்பவமும் உண்டு சமீபத்தில் வடை மாவுடன் மாறி மலத்தீன் தூளினை கலந்து சுட்ட வடை வித்தியாசம் கண்டு பிடித்ததால் பாதகமின்றி பாதுகப்பாக… தெரியமல் இருக்கும் இன்னும் பல.....

•    தாய்ப்பால் மட்டும் தான் கலப்படம் அற்றது என்று இருந்த வேளை தற்காலத்தில் அந்த தாய்ப்பாலும் விற்பனைக்கு உண்டு அமெரிக்காவில்
•    சுவாசத்திற்கு தேவையான தூய்மையான காற்றும் விற்பனைக்கு உண்டு சீனாவில் பிறநாடுகளிலும்
•    குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர் அதுவும் விற்பனைக்கு எல்லா நாடுகளிலும் இவ்வாறு அவசியமான அனைத்து பொருட்களும் விற்பனைக்கு வந்துவிட்டது.
தற்போது மக்களின் அவசியத்தேவைகள் அனைத்திலும் ஆடம்பரத்தேவைகள் அனைத்திலும் அப்பட்டமான முறையில் கலப்படம் நடக்கின்றது நாமும் கண்டு கொள்ளவில்லை........................
இதைச்செய்பவர்களின் பிரதான நோக்கம் பணம் தான் மிகவிரைவாக முன்னேறிவிடவேண்டும் என்ற எண்ணமும் சொகுசான வாழ்க்கையை வாழவேண்டும் என்ற சுயநலச்சிந்தனையால் அருமையான வளங்கள் எண்ணற்ற மனித உயிர்கள் மட்டுமன்றி ஏனைய உயிர்களும்  தினம் தினம் பலியாகி கொண்டுதான் இருக்கின்றது.
நாம் அடுத்த தலைமுறைக்கு கொடுக்கப்போவது சுடுகாடுகளையும.;… வறண்ட பாலைவனங்களையும்….. தான் அதற்கான தீவிர செயற்பாடுகளே தற்போது நடைபெற்று வருகின்றது.

•    நெல்லு முளைக்கும் இடங்;களில் எல்லாம் பெரும் கல்லு கட்டடிடங்கள் முளைக்கின்றது.
•    விதைப்பவர்கள் அதிக வினைத்திறனைப்பெற இரசாயணம் தெளிக்கின்றார்கள்
•    முதலாளிகள் நஷ்டம் ஏற்படாமல் இருக்க இரசாயணமுறையில் பதப்படுத்துகின்றார்கள்
•    விதையில் இருந்து முளைத்து உணவுக்கு வரும்வரை
•    விஷமான உரங்கள் தான் (ஸ்பிறே ஊசி தெளிப்பு மூலமும்) ஊட்டப்படுகின்றது
•    விதம் விதமாய் விளம்பரங்களால் ஆரோக்கியமாய் காட்டப்படுகின்றது.
•    ஆறுகள் குளங்கள் ஏரிகள் கிணறுகள் கடல் எல்லாம் அணு உலைகளும் ஆலைகளும் அகழ்வுகளும் ஆடம்பரவிடுதிகளும் அமைத்துகொண்டு வாழ எத்தனிக்கும் சில பண முதலைகளினால் தான் எல்லாவற்றினையும் இழந்து நிம்மதியான நித்திரைக்கு கூட மாத்திரை தேவைப்படுகின்றது.

எண்ணற்ற வருத்தங்கள் வியாதிகள் கொடிய நோய்கள் அத்தனைக்கும் தனித்தனியாய் நவீன மருத்துவப்பரிதோதனைகள் அப்படியிருந்தும் அந்த உயிர்!!! காக்கப்படுகின்றதா என்றால்….கேள்விக்குறியே….
அன்று இருந்த எமது புத்திஜீவிகள் புலவர் பெருமக்கள் மனித உடலில் 4444 நோய்ப்பிணிகள் தான் இருக்கும் என்றும் அதற்கு கைவைத்தியம் பாட்டிவைத்தியம் மூலம் குணப்படுத்தி 100 வயதுகள் தாண்டியும் ஆரோக்கியமாய் வாழ்ந்தார்கள்.

இன்று எமது உணவுகளினதும் கலப்படத்தால்
13-16 வயதில் பருவமடையும் பெண்கள்
தற்காலத்தில் 8-9-10வயதிற்குள் பருவமடைகின்றார்கள் அந்தப்பிள்ளை எதிர்கொள்ளவிருக்கும் சமூகப்பிரச்சினைகள் சிந்தியுங்கள்)
நோய்களின் தாக்கத்தினால் சிறுவயதிலே மாரடைப்பு-பார்வையிழப்பு புற்றுநோய்கள் குறைப்பிரசவம் ஊனம் அங்கவீனம் போசாக்கின்மை இன்னும் ஏராளமான நோய்கள் ஏற்பட்டு ஆரோக்கியமற்ற வாழ்வும் இறப்புக்கள் ஏற்படுகின்றது.
இவற்றுக்கெல்லாம் மூலகாரணமாய் அமைவது எமது உணவுப்பழக்கவழக்கமும் விழிப்புணர்வு இன்மையும் தான்.
  • நம்மிடம் இருந்து நுங்கு இளநீர் வேப்பங்குச்சி தேங்காய் உப்பு இவற்றினை பெற்றுக்கொண்டு சோடா- ப்பிரஸ்-பால்பவுடர் தருகின்றான் அழகு நமக்கு… ஆரோக்கியம் அவனுக்கு….

நவீனத்திடமும் விஞ்ஞானத்திடமும்
அழகுக்கும் கவர்ச்சிக்கும் அடிமைப்பட்டு
ஆரோக்கியமான வாழ்வைவிட்டு
அறிவற்றவர்களாய் ஆடம்பரவாழ்க்கையில் எம்மை நாமே தொலைத்து  எதற்கு வாழ்கின்றோம் என்று தெரியாமலே வாழ்கின்றோம் 

எமது தலைமுறையினரை மறந்து.

மக்கள் மனதளவிலும் உள்ளத்திலும் உயிராலும் நல்ல ஆரோக்கியமாக இருந்தால் மருந்து தேவைப்படாது.
பணத்தினை மட்டுமே குறிக்கோளாக இருக்கும்  முதலைகளிடம் ஆக…நோயில் இருக்க வேண்டும் மக்கள் அல்லவா…நான் இன்னும் சொல்லவா……

யாரையும் குறை சொல்லமுடியாது உற்பத்தி செய்வோரும் விற்பனை செய்வோரும் மனச்சாட்சியுடன் செயற்பட்டால்
கொள்வனவு செய்வோரும் நுகர்வோரும் விழிப்புணர்வுடன் இருந்தால் தடுக்கலாம் இவ்வாறான தரமற்ற உற்பத்திகளை…

ஈசியாக வாழ நவீன ஊசியுடன் வாழப்பழகிக்கொண்டு இருக்கின்றோம்.

தனியொருவன் சிந்தித்தால் மட்டும் போதூது தாமாகமுன்வந்து தயாராகவேண்டும்  தலைமுறைகாக்க…

இங்கே சுட்டிக்காட்டப்பட்டவை சுருக்கத்தின் சுருக்கமே.....நாம் வாழும் வாழ்க்கை நரகமே.....
-கவிஞர்-வை.கஜேந்திரன்-
உணவில் கலப்படம் உயிர்கள் கவலைக்கிடம்….. Reviewed by Author on April 07, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.