அண்மைய செய்திகள்

recent
-

மனித வடிவ ரோபோவை உருவாக்கி ஜப்பான் பொறியாளர் சாதனை -


ஜப்பானை சேர்ந்த பொறியாளர் திரைப்படஙகளில் படங்களில் வருவதை போன்று நடக்கும் வகையிலான ராட்சத மனித வடிவ ரோபோக்களை உருவாக்கி அசத்தி உள்ளார்.
Masaaki Nagumo எனும் பொறியாளர் உருவாக்கிய இந்த ரோபோ 28 அடி உயரம் 7 டன் எடையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவில் ஏறி அமர சிறிய லிப்ட் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

ஏறி அமர்ந்து விட்டால் அதனை இயக்கி நகர்ந்து செல்லவும், அதன் ஒரு கையில் உள்ள துப்பாக்கி மூலம் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பூபந்துகளை குண்டுகளை போல சுடவும் முடியும்.
மேலும் இந்த ரோபோ மணிக்கு 1 கிமீ வேகத்தில் நடந்து செல்லும் என்கிறார் அதனை வடிவமைத்துள்ள Masaaki Nagumo.
மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவது மட்டுமே தமது ரோபட்டின் நோக்கம் என்ற அவர், இதனை மணிக்கு 930 அமெரிக்கா டாலர் வீதத்தில் வாடகைக்கு விடவும் தயார் என கூறியுள்ளார்.


மனித வடிவ ரோபோவை உருவாக்கி ஜப்பான் பொறியாளர் சாதனை - Reviewed by Author on April 16, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.