அண்மைய செய்திகள்

recent
-

தமிழ்மொழி பேசுவோராலே..... தமிழ்புறக்கணிக்கப்படுகின்றது.


தமிழ்மொழி பேசுவோராலே தமிழ் புறக்கணிப்படுகின்றது
ஏன் இந்த கேவலமான செயல்.....
மன்னார் மாவட்டத்தில் தற்போது அபிவிருத்திகள் பல இடங்களில் பலவாறாக நடைபெறுகின்றது மகிழ்ச்சியான விடையம் தான் ஆனாலும் சில  மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியாத  சம்பவங்கள் நடைபெறுகின்றது.

அதில் ஒரு விடையம்தான் கடந்த 06-04-2018 மாலை காட்டாஸ்பத்திரி கிராமத்தில்  நீண்ட கால தேவையாக இருந்த ஜும்மா பள்ளியின் குறையினை நிவர்த்தி செய்யும் முகமாகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவருமான றிசாட் பதியுதீன் அவர்களின் வாக்குறுதிக்கமைய சவூதி நாட்டின்  நிதி உதவியுடன் ஜும்மா பள்ளிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற்றுள்ளது.

காட்டாஸ்பத்திரி ஜும்மா பள்ளி நிர்வாக தலைவர் அப்துர் ரஹீம் அவர்களின் வழி நடத்தலில் , முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் , அமைச்சர் றிசாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன்  தலைமையில் குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற்றது.

இவ்நிகழ்வில் பிரதானமாக பயன்படுத்தபட்ட பாதகையில் BANER அரபு ஆங்கிலம்; ஏனைய மொழிகள் இருந்த போதும் தமிழ்  மொழியும் சகோதர மொழியான சிங்களமும் அந்த பாத்கையில் பொறிக்கப்பட வில்லை  ஏன்...? என்ன காரணம்.
நிதி அனுசரனையாளர்கள் தங்கள் செயல்திட்டம் தொடர்பான விடையங்களை அவர்களதுமொழியில்  குறிக்கின்றபோது    அத்திட்டம் செயல்படுகின்ற பிரதேசம்  பகுதிகளில் பயன்பெறுகின்றவர்களின் தாய்மொழியில் பொறிக்கப்பட வேண்டும் அல்லவா...

இலங்கையின்பலபாகங்களில் தமிழ்மொழியானது அழிக்கப்படுகின்றதுடன்; தமிழ்மொழிக்கொலையும்  நடைபெறுகின்றது அங்கு தமிழ் பணியாளர்கள் அதிகாரிகள்  அரச தலைவர்கள் இல்லாமலிருப்பதும்  இருந்தும் கண்டுகொள்ளாமல் இருப்பதும் கவலைக்குரியமானதும் அவமானமும் ஆகும்.

 நாங்களே எங்களின் உரிமைகளை உடைமைகளை  அற்பசொற்ப சலுகைகளுக்காகவும் சுகபோக வாழ்வுக்காவும் விட்டுக்கொடுப்பவர்களாகவும்  தாரைவார்க்கும் செயல்களிலீடுபடுகின்றோம்.

தட்டிக்கேட்டவேண்டிய தலைவர்களே  தலைசாய்த்து தடம் மாறும் போது அவர்களின் கீழ் உள்ள மக்கள் எப்படி தன்மானத்துடன் வாழமுடியும்

  • தேர்தல் காலங்களில் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்
  • சொன்னதை செய்யுங்கள்.
  • சொன்னதை செய்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு  இவ்வாறான புறக்கணிப்பு செயல்களில் ஈடுபடாமலும்  செய்யாமலும்  செய்வோர்களை தடுத்துமுறையான வழியில் சரியான  முறையில்  அபிவிருத்திகளையும் செய்வதோடு  
  • எமக்கான உரிமையினையும் கொள்கையினையும் காத்துக்கொள்ளவேண்டும் கடைப்பிடிக்க வேண்டும்.

இலவசம் என்று  இன்னொருவன் கால்களில் விழுவதா......
எம்மை  நாமே இழப்பதா........

நிகழ்ச்சி நிரல்களில் தமிழில் இல்லை.....
ஆண்டறிக்கைகள் தமிழில் இல்லை.......
சில ஆவணங்கள் கடிதங்கள்தமிழிலில்லை.....

 
இனியும் இவ்வாறான செயல்கள்  தடுமாறியும் நடைபெறாமல் இருக்க தலைமைகளுடன் மக்களுமிணைவோம்....
 -வன்னியன்-

தமிழ்மொழி பேசுவோராலே..... தமிழ்புறக்கணிக்கப்படுகின்றது. Reviewed by Author on April 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.