அண்மைய செய்திகள்

recent
-

ஜனாதிபதி மைத்திரி மீதான நம்பிக்கையீனங்கள் வளர்கின்றன

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது தமிழ் மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு தருவார் என்பது அவர் மீதான முதல் நம்பிக்கை.

அதனைத் தொடர்ந்து காணாமல்போனவர் களின் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகள் என எல்லா வற்றுக்கும் தீர்வு பெற்றுத் தருவார் என்பது ஏனைய நம்பிக்கைகள்.

எனினும் இனப்பிரச்சினைக்கான தீர்வு முதல் இங்கு குறிப்பிடப்பட்ட எந்தப் பிரச்சினை களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்வு பெற்றுத் தரவில்லை.

ஒரு நாட்டின் ஜனாதிபதி நினைத்த மாத்திரத்தில் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வைத் தந்துவிட முடியாது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நன் முயற்சிகளுக்கு பேரினவாதிகளும் முன்னைய ஆட்சியாளர்களும் குந்தகம் செய்வர் என்ற உண்மை நிலையை தமிழ் மக்கள் உணர்ந்திருந்ததனால்,
ஜனாதிபதி மைத்திரிக்கு தீர்வைத் தருவதற்குக் கால அவகாசம் தேவை என்று தமிழ் மக்கள் உளப்பூர்வமாக நினைத்திருந்தனர்.

ஆனால் காலம் கடந்து போகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் குறுகிக்கொண்டு வருகிறது.

இருந்தும் தமிழ் மக்கள் எதிர்பார்த்த நம் பிக்கைகள் தளர்வுற்று அவர் மீதான நம்பிக்கையீனங்களே வளரத் தொடங்கியுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை தோற்றுப் போகுமாயின், அந்த நம்பிக்கை அவநம்பிக்கையாக மாறுமாயின் இலங்கையில் இனி எவர் ஆட்சி யில் இருந்தாலும் அவரை நம்புதல் என்பது தமிழ் மக்களிடம் ஒருபோதும் சாத்தியப்படமாட் டாது என்பதை சத்தியம் செய்து சொல்ல முடியும்.

எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பாதுகாத்து அதனை நிறைவேற்றுவதென்பது ஒட்டு மொத்தச் சிங்கள மக்களினதும் தலையாய கடமையாகும்.

விடுதலைப் போராட்டம் முடிவுற்ற பின்னர் தமிழ் மக்களிடம் சிங்கள மக்கள் எதிர்பார்க்கக் கூடிய ஒரே ஒரு விடயம் தனித் தமிழீழம் என்ற கோரிக்கையை கைவிடுதல் என்பதாகவே இருக்க முடியும்.

தனி நாட்டுக் கோரிக்கையை கைவிடுவதற் காக தமிழ் மக்களுக்கு அவர்கள் கேட்கின்ற அதி காரத்தையும் உரிமையையும் வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் சிங்கள மக்கள் கூறியிருக்க வேண்டும்.

ஆனால் இவை எதுவும் நடக்காமல் தமிழ் மக்களுக்கு உரிமையோ, அதிகாரமோ வழங்க முடியாது என்பதாக தென்பகுதியின் ஒரு தரப்பினர் திமிறுகின்றனர். இது அவ்வளவு நல்ல தல்ல.

இன்று தமிழ் மக்கள் நலிவுற்றுப்போக லாம். ஆனால் என்றோ ஒரு நாள் தமிழ் மக் கள் பலம் பெறலாம். இவை சொல்லி நடப்ப தல்ல.

ஆகையால் தமிழ் மக்கள் ஜனாதிபதி மைத்திரி மீது கொண்ட நம்பிக்கையைப் பாதுகாப்பதில்தான் இலங்கைத் திருநாட்டின் மாங்கனி வடிவம் மாற்றமுறாமல் இருந்துகொள்ளும்.


ஜனாதிபதி மைத்திரி மீதான நம்பிக்கையீனங்கள் வளர்கின்றன Reviewed by Author on April 16, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.