அண்மைய செய்திகள்

recent
-

வரவேற்பு நிகழ்வின் போது ஐ.தே.க, த.வி.கூட்டணி உறுப்பினர்கள் வெளி நடப்பு -


நானாட்டான் பிரதேச சபையின் தலைவர், உப தலைவர் தெரிவின் போது திருவுளச்சீட்டின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியமையானது, இறைவன் கொடுத்த வரம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் மண்டபத்தில் இருந்து வெளி நடப்பு செய்துள்ளனர்.
நானாட்டான் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான வரவேற்பு நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உரை நிகழ்த்தியுள்ளார்.

இந்த நிலையில், நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் உப தலைவர் தெரிவுகள் இடம்பெற்ற போது குறித்த தெரிவின் வாக்களிப்புக்கள் சம நிலையை அடைந்தது. எனினும், தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுகள் திருவுளச்சீட்டின் மூலம் நடைபெற்ற போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இருவர் திருவுளச்சீட்டின் மூலம் தலைவர் மற்றும் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டமை 'இறைவன் கொடுத்த வரம்' என தெரிவித்துள்ளார்.

இந்த உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டபத்தில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் 8 பேர் வெளி நடப்பு செய்துள்ளதுடன், நிகழ்வுகள் எவ்வித தடங்கலும் இன்றி நிறைவடைந்துள்ளது.

மேலும், இதில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களுக்கு உரிய கௌரவம் வழங்கப்படவில்லை எனவும், பழையதை மறப்போம், என கூறிக் கொண்டு பழைய விடயங்களை ஞாபகப்படுத்துகின்றமை தமக்கு வேதனையை ஏற்படுத்துவதாகவும், அதனைக் கண்டித்தே தாம் மண்டபத்தில் இருந்து வெளி நடப்பு செய்ததாகவும் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

வரவேற்பு நிகழ்வின் போது ஐ.தே.க, த.வி.கூட்டணி உறுப்பினர்கள் வெளி நடப்பு - Reviewed by Author on April 26, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.