அண்மைய செய்திகள்

recent
-

சவுதியில் திரையிடப்பட்ட படம் இதுதான்! நிரம்பி வழியும் மக்கள் கூட்டம் -


சவுதி அரேபியாவில் முதல் சினிமா தியேட்டர் ஹவுஸ் புல்லாக மக்கள் திரண்டு வருவதுடன் 15 நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.
திரையரங்குகளில் சினிமா பார்ப்பது பாவச்செயல் மற்றும் ஆபாசம் என்று கருதிய சவுதி அரேபிய அரசாங்கம் அனுமதி மறுத்தது.

35 ஆண்டுகளாக மத தலைவர்களால் இந்த தடை நீக்கப்படாமல் இருந்த போதும், உள்நாட்டு சேனல் வழியாக சவுதியில் வெளியாகும் திரைப்படங்களை மக்கள் பார்த்து வந்தனர், சவுதியில் தயாராகும் படங்கள் வெளிநாட்டிலும் வெளியாகின.
இந்நிலையில் சமீபகாலமாக சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வரும் இளவரசர் முகம்மது பின் சல்மான், தியேட்டரில் சினிமா திரையிடப்படும் என அறிவித்திருந்தார்.

இதனைதொடர்ந்து நேற்று முதல் சினிமா தியேட்டர் திறக்கப்பட்டது, ஹாலிவுட் படமான பிளாக் பாந்தர் (Black panther) திரையிடப்பட்ட நிலையில், வெறும் 15 நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததுடன் ஹவுஸ் புல்லாக நிரம்பி வழிகிறது.
இதற்கென சினிமா தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் புதிய திரையரங்குகள் திறக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வரும் 2030ஆம் ஆண்டிற்குள் 350 வளாகங்களில் 2500 திரையரங்குகள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் மூலம் 30000 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு மற்றும் 130, 000 பேருக்கு பகுதி நேர வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இதன் மூலம் பொருளாதாரத்திலும் முக்கிய மாற்றங்கள் ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

சவுதியில் திரையிடப்பட்ட படம் இதுதான்! நிரம்பி வழியும் மக்கள் கூட்டம் - Reviewed by Author on April 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.