அண்மைய செய்திகள்

recent
-

திருகோணமலைக் கடலில் யாரும் அறியாத அதிசயம் -


திருகோணமலை, திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் இராவணன் வெட்டுக்கு அருகே கடலின் அடியில் இருந்து பழைய, அழகிய சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

கடல் மட்டத்தில் இருந்து 80 அடிக்கு கீழே குறித்த சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
திருகோணமலை பிரதேசமானது புராதன காலத்திலிருந்து தமிழர்களின் தலைநகரமாகவும், தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களை அதிகளவில் உள்ளடக்கிய நகராகவும் பார்க்கப்படுகின்றது.

இது, தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழர் தாயகத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டு, சிறப்புடன் திகழ்ந்தது.
இந்நிலையில், திருகோணேஸ்வரம் ஆலயத்திற்கு அருகே தற்போது மீட்கப்பட்டுள்ள சிலைகள் தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இவை குறித்த ஆலயத்தினுடைய சிலைகளா அல்லது, ஆலய கட்டுமானத்தின்போது நீரினுள் புதையுண்டு போனவையா என்ற பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், திருகோணமலை நகரமான பல்லின சமூகத்தை கொண்ட நகரமாக மாற்றம் அடைந்துள்ள நிலையில், இந்த சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையை தொல்லியலாளர்களைத் தாண்டி தமிழ் அரசியல் தலைமைகள் எவ்வாறு பார்க்கின்றனர், அல்லது இது தொடர்பில் அவர்களது நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பது அனைவராலும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

எனினும், தமிழர் தாயகமான திருகோணமலையில் மீட்கப்பட்ட இந்த அழகிய சிலைகள் தமிழர்களின் சிறப்பை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது என்பதில் ஐயமில்லை.
திருகோணமலைக் கடலில் யாரும் அறியாத அதிசயம் - Reviewed by Author on April 28, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.