அண்மைய செய்திகள்

recent
-

உலகில் அதிக முறை மரண தண்டனை விதித்த நாடுகளின் பட்டியல் -


உலகில் அதிக முறை மரண தண்டனை விதித்த நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளதாக மனித உரிமைகள் ஆணையம் பட்டியல் வெளியிட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் உலகின் 23 நாடுகளில் மொத்தம் 993 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில் சீனா முதலிடத்தில் உள்ளது. இதன் அடுத்த இடங்களில் ஈரான், சவுதி அரேபியா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இருப்பினும் ஆண்டு தோறும் மரண தண்டனை விதிக்கப்படுவது குறைந்து வருவதாகவும்,
2015 ஆம் ஆண்டு(1634) 39% என இருந்த எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டு(1,032) 4% குறைந்துள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

சஹாரா சுற்றுவட்டார ஆப்பிரிக்க நாடுகளில் மரண தண்டனை விதிப்பது மிக அதிக அளவில் குறைந்துள்ளதாகவும்,
இப்பகுதியில் உள்ள 20 நாடுகள் அனைத்து குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிப்பதை ரத்து செய்துள்ளது.
ஆனாலும், சோமாலியா மற்றும் தெற்கு சூடான் ஆகிய இரு நாடுகள் கடந்த ஆண்டு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றுவதில் முதலிடத்தில் உள்ள சீனா, இதுவரை கொல்லப்பட்டவர்களின் உறுதியான பட்டியலை வெளியிட மறுத்துள்ளது.
2017 ஆம் ஆண்டு ஐக்கிய அமீரகம், பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் குவைத் நாடுகள் மீண்டும் மரண தண்டனை விதிப்பதை அமுலுக்கு கொண்டு வந்தது.

ஆனால் 2016 ஆம் ஆண்டு வரை மரண தண்டனை விதித்து வந்த போட்ஸ்வானா, இந்தோனேசியா, நைஜீரியா, சூடான் மற்றும் தைவான் ஆகிய நாடுகள் கடந்த ஆண்டு எந்த மரண தண்டனையும் விதித்ததாக பதிவு செய்யப்படவில்லை.
மேலும். பங்களாதேஷ், கேமரூன், சீனா, எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், குவைத், மலேசியா, மவுரித்தேனியா, மொரோக்கோ, மேற்கு சஹாரா, நைஜீரியா, பாகிஸ்தான்,
பப்புவா நியூ கினி, கட்டார், இலங்கை, தைவான், துனிசியா, ஐக்கிய அமீரகம், அமெரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய 21 நாடுகள் மரண தண்டனை குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு பதிவு செய்துள்ளது.
மட்டுமின்றி 2017 ஆம் ஆண்டு மட்டும் 53 நாடுகளில் சுமார் 2,591 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்துள்ளதாகவும் குறித்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இது கடந்த 2016 ஆம் ஆண்டு 3,117 என இருந்தது குறிப்பிடத்தக்கது.


உலகில் அதிக முறை மரண தண்டனை விதித்த நாடுகளின் பட்டியல் - Reviewed by Author on April 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.