அண்மைய செய்திகள்

recent
-

உலக காலநிலை எச்சரிக்கை நாடுகளில் இலங்கை 4காவது இடத்தில்! -


உலக காலநிலை எச்சரிக்கை கொண்ட நாடுகளின் தரப்படுத்தலில் இலங்கை 4ஆவது இடத்தில் உள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் அனர்த்தங்களுக்க 96 சதவீத காரணம் காலநிலையால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எனவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் காலநிலை தொடர்பான அறிக்கையொன்றில் யுனிசெப் நிறுவனம் இதனை குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுவரும் வெள்ளம், மண்சரிவு, கடும் காற்று மற்றும் வறட்சி என்பன இந்த காலநிலை மாற்றத்தின் விளைவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களுக்கு உதவும் நோக்கில் அவுஸ்திரேலிய அரசாங்கம், உலக உணவுத்திட்டம் மற்றும் யுனிசெப் அமைப்பு என்பன இணைந்து இலங்கை அரசாங்கத்துடன் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டுள்ளன.

இதன்படி இலங்கைக்க 7 இலட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த திட்டத்தின்மூலம் இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, குருணாகல், புத்தளம், அநுராதபுரம், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்கு உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
உலக காலநிலை எச்சரிக்கை நாடுகளில் இலங்கை 4காவது இடத்தில்! - Reviewed by Author on May 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.