அண்மைய செய்திகள்

recent
-

விடுதலைப் புலிகளால் எந்தவொரு தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை! இராணுவ தளபதி -

லித் தீவிரவாதத்தின் பெயரில் எந்தவொரு வெடிப்புச் சம்பவமோ அல்லது துப்பாக்கிச்சூட்டு சம்பவமோ 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதிக்குப் பின்னர் இதுவரை ஏற்பட்டது இல்லை, போருக்குப் பின்னரான முன்னேற்ற விடயத்தில் உலக நாடுகளுக்கு நாம் முன்மாதிரியாக இருக்கின்றோம் என இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.இந்திய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
இலங்கையின் நீதித்துறைக் கட்டமைப்புக்குட்பட்ட எந்த விசாரணைக்கும் இலங்கை இராணுவம் தயாராகவே உள்ளது.
பன்னாட்டுச் சமூகத்தின் பேச்சைக் கேட்டுக்கொண்டு இருந்தால் இலங்கை மட்டுமல்ல எந்தவொரு நாடும் ஆக்கப்பூர்வமடையாது, போரில்கூட நாம் வெற்றியடைந்திருக்க மாட்டோம்.

இலங்கை இப்போது அமைதியான நாடாக இருக்கின்றது, வெளியிலிருந்து ஆக்கிரமிப்பு போன்றவை இல்லாவிட்டாலும் அமைதியை விரும்பாத சில தீய சக்திகள் ஆங்காங்கே குழப்பங்களை அவ்வப்போது ஏற்படுத்துகின்றன.
புலித் தீவிரவாதத்தின் பெயரில் எந்தவொரு வெடிப்புச் சம்பவமோ அல்லது துப்பாக்கிச்சூட்டு சம்பவமோ 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதிக்குப் பின்னர் இதுவரை ஏற்பட்டது இல்லை, போருக்குப் பின்னரான முன்னேற்ற விடயத்தில் உலக நாடுகளுக்கு நாம் முன்மாதிரியாக இருக்கின்றோம்.
வடக்கில் இராணுவத்தினர் கணிசமான அளவில் குறைக்கப்பட்டுள்ளனர், பெருமளவு காணிகள் மீளவும் மக்களிடம் திருப்பி வழங்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தல், ஆள் கடத்தல் உள்ளிட்ட விடயங்களைத் தடுக்கவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் படையினரை நிலைநிறுத்தல் அவசியமாகின்றது.

சிவில் நடவடிக்கைகளில் இராணுவம் தலையீடுகளைச் செய்வதில்லை, போர் நீண்டகாலம் நடைபெற்ற ஒரு பகுதிக்கு அமைதிக் காலத்தில் சிவில் செயற்பாடுகளுக்கு படையினரின் ஒத்துழைப்பு தேவை.
இது தொடர்பில் நான் வடக்கு மாகாண முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன், சிலர் எமது பிரசன்னத்தை எதிர்த்தாலும் பலர் ஆதரிக்கின்றனர்.

இராணுவம் நிலைகொண்டிருக்கும் மக்களின் மேலும் பல காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.


விடுதலைப் புலிகளால் எந்தவொரு தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை! இராணுவ தளபதி - Reviewed by Author on May 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.