அண்மைய செய்திகள்

recent
-

வேண்டா வெறுப்புடன் பணியாற்றாதீர்கள்





செய்யும் தொழிலே தெய்வம் என்றார்கள் நம் முன்னோர்கள்.
யார் யார் எத்தொழிலைச் செய்தாலும் அவர வர் தாம் செய்கின்ற தொழிலை தெய்வமாகப் போற்றிச் செய்தல் வேண்டும் என்பதுதான் இதன் பொருள்.

எனினும் இப்போதிருக்கக்கூடிய அரச கட்ட மைப்பாயினும் சரி, தனியார் துறையாயினும் சரி எங்கும் செய் தொழிலை மதியாமை தலை விரித்தாடுவதைக் காணமுடியும்.

குறிப்பாக அரச பணி என்பது பொதுமக் களுக்குச் சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டதாகும்.

ஓர் அரச பணியாளர் பெறுகின்ற சம்பளம் என்பது பொதுமக்களுக்குச் சேவை செய்வதற்காக வழங்கப்படுவது.

எனினும் அரச துறையில் பணியாற்று கின்ற பணியாளர்களில் ஒரு பகுதியினர் தாம் செய்கின்ற தொழிலை மதிப்பதாகவோ அல்லது பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண் டும் என்பதை உணர்ந்து கொள்வதாகவோ இல்லை.

பொதுமக்களை அலைக்கழிப்பது என்பது இத்தகையவர்களின் வேலையாக இருப்ப தைக் காணமுடிகின்றது.

இதேபோன்று தனியார் துறையிலும் செலுட் டுத்தனம் மேலோங்கி இருப்பதைக் காணலாம்.

வாடிக்கையாளர்களை மதிப்பது, நல்வார் த்தை பேசுவதென்ற சூழமைவு அறவே இல்லாத தனியார் துறை அமைப்புக்களை நாம் நேரில் காணமுடிகிறது.

இத்தகைய  செலுட்டுத்தனங்கள் பொதுமக்களுக்கு உடனடி மன உளைச்சலைக் கொடுத்தாலும் காலப்போக்கில் குறித்த தனியார் நிறுவனம் கந்தறுந்து போவதைக் காணமுடியும்.
இஃது நாட்டுக்கு மக்கள் சமூகத்துக்கு ஆரோக்கியமானதல்ல.

இதுதவிர, சில தனியார் வர்த்தகர்கள் தங்கள் பொருளாதார பலத்துக்கேற்ப செட்டுத் தனத்துடன் செயற்படுவதைக் காணமுடிகின்றது.

பணம் இருந்தால் யாரையும் மதிக்கத் தேவையில்லை என்ற அற்பத்தனம் அவர் களைச் சூழ்ந்து அதுவே அவர்களின் வீழ்ச் சிக்கு வித்திடுகிறது.

இவற்றையயல்லாம் கூறுவதன் நோக்கம் குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதல்ல. மாறாக எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான்.

எனவே அரச மற்றும் தனியார் துறை அமைப்புக்கள் ஒவ்வொன்றும் தனது ஒட்டு மொத்தப் பணியாளர்களிடத்தும் நேர்மனப் பாங்கை வளர்த்தெடுப்பதற்கான ஏற்பாடு களைச் செய்தல் வேண்டும்.

ஆன்மீக சிந்தனைகள்,  தத்துவக் கருத்துக் கள், முகாமைத்துவ எண்ணக்கருக்கள், பொது சனத் தொடர்பின் முக்கியத்துவம் என்ற வகையில் தனது பணியாளர்களை வழிப்படுத்துதல் அவசியம்.

இதனைச் செய்கின்றபோது எங்கும் எதிலும் சேவை மனப்பாங்கும் சுமுகமான தொடர்பாடலும் புரிந்துணர்வும் மேலோங்கும்.

இந்நிலைமை மனிதர்களை மதித்தல்; சேவை செய்தல்; செய்யும் தொழிலைத் தெய்வ மாகப் போற்றுதல் என்ற உயர்ந்த குண இயல்பை பணியாளர்களிடையே ஏற்படுத்தும்.
valampuri


வேண்டா வெறுப்புடன் பணியாற்றாதீர்கள் Reviewed by Author on May 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.