அண்மைய செய்திகள்

recent
-

நாட்டுக்கூத்து நாடகங்களின் எழுச்சிக்கு கலைப்பட்டறைகள் உருவாக்க வேண்டும்….C.M.சேவியர் பெர்னாண்டோJP


ஊடாக நம்மைக்காண வருகின்றார் நாட்டுக்கூத்த நெறியாளர் இளைப்பாறிய அதிபர் அகிலஇலங்கை சமாதானநிதவானுமாகிய ஆளுநர் விருது பெற்ற C.M.சேவியர் பெர்னாண்டோ அவர்களின் அகத்திலிருந்து.

நாட்டுக்கூத்து நாடகங்களின் எழுச்சிக்கு கலைப்பட்டறைகள் உருவாக்க வேண்டும்….

தங்களைப்பற்றி---
எனது சொந்த இடம் பேசாலை தற்போது சென்.யூட் வீதி பேசாலையில் எனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சமூகசேவையிலும் கலையிலும் ஈடுபாட்டுடன் செயலாற்றி வருகின்றேன். எனது சேவைக்கு என்னுடன் இணைந்து பணியாற்றும் எனது மனைவி C.M.செல்வதி குருஸ் நினைவில்….


தங்களின் கலைப்பயணத்தின் தொடக்கம் பற்றி-
எனது கலைப்பயணம் எனும் போது எனது தந்தை சு10சை கிறிஸ்தோகு பெர்னாண்டோ சிறந்த நாட்டுக்கூத்து நடிகராகவும்; தாய் கிறிஸ்தோகுமேரி லெம்பேட் செயலாற்றினர் எனது ஆரம்பக்கல்வியை 1-11வரை மன்னார் வங்காலை புனித ஆனாள் கல்லூரியிலும் உயர்தரம் மன்.பேசாலை புனித பற்றிமா பாடசாலையிலும் கற்று கல்விமானிப்பட்டதாரியாகி மன்.பேசாலை புனித பற்றிமா பாடசாலையிலே ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றினேன்.
எனது ஆரம்பக்கல்வி காலத்தில் வங்காலையில் வளர்கலை மன்றத்தினை எனது மாமா ஏசியன் லெம்பேட் நாட்டுக்கூத்து நடிகராக இருந்தபோது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது  எனது தந்தையும் நாடகநடிகர் தான் அதனால் இயல்பாக எனக்கு நாடடுக்கூத்து நடிப்பு வசமானது.

முதல் நாட்டுக்கூத்து எனும் போது-
1964ம் ஆண்டு சிறுசிறு பாத்திரம் ஏற்று நடித்துள்ளேன் அதன்பிறகு பிரதான பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தேன்
1974 உயர்தரம் கற்கும் போது எனக்கு ஒரு பிரதி பாஞ்சாலி சபதம் கிடைத்தது அந்த நாடகத்தினை நானே பழக்கி நடித்து மேடையேற்றினேன் அதிலும் துரியோதனாக நடித்தேன்.

நீங்கள் நடித்த நாடக நாட்டுக்கூத்து நாடகங்கள் பற்றி-

30மேற்பட்ட நாடகநாட்டுக்கூத்துக்களில் நடித்துள்னே; அவற்றில் சிலவற்றினை தருகின்றேன்
  • சூழ்ச்சியின் வீழ்ச்சி-பாஞ்சாலிசபதம்-நாடகம்-1974
  • பண்டாரவன்னியன் வரலாற்று நாடகம்-1974
  • மூளைக்கல்-சமூக நாடகம் -1982
  • வாழ்விழந்த மங்கை-சமூக நாடகம்-1982
  • யார் செய்த பாவம் தாலலயம் விவிலிய நாடகம்-1977
  • என்துன்பத்தினை என்னிடம் இருந்து எடுத்து விடாதீர்கள்-1997
  • மூவிராசாக்கள் நாட்டுக்கூத்தில்-ஏரோது மன்னனாகவும்
  • இராம இராவணன் நாட்டுக்கூத்தில்-இராவணனாகவும்
  • புனிதர் அருளானந்தம் நாடகத்தில் குமரப்பா தளபதியாகவும்
  • வீரவீமன் புரட்சிதுறவி-அருளப்பர்-மர்மத்தளபதியிலும் பாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளேன் இதுவரை 30ற்கும் மேற்பட்ட நாட்டுக்கூத்து நாடகங்களில் நெறியாள்கை செய்தும் பிரதான பாத்திரம் ஏற்றும் நடித்துள்ளேன்.

நாட்டுக்கூத்து அன்றும் இன்றும் நிலை பற்றி---
நாட்டுக்கூத்து ஒரு சிறந்த கலை அன்றைய காலத்தில் நாட்டுக்கூத்து என்றால் எல்லோரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் பாரிய வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருந்தது விரும்பிப்பார்ப்hர்கள் ஏற்றுக்கொண்டார்கள் மதித்தர்கள். தற்போதைய சு10ழல் அப்படியல்ல நாட்டுக்கூத்து அரங்கேற்றம் என்பதே அரிதாகவுள்ளது அப்படிப்பார்க்ப்போனாலும் ஒரு நாட்டுக்கூத்தில் ஒரு இரு பாத்திரங்கள் நல்ல நடிப்பை வெளிப்படுத்துவார்களே தவிர முழுமையாக நன்றாக இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை நாட்டுக்கூத்துக்கலைஞர்களின் விருப்பமின்மையும் அவர்களுக்கான நேரமின்மையும் மக்களின் விருப்பமின்மையும் பொருளாதார பிரச்சினையும் காரணம் என்பேன்.


நீண்ட நாட்களாக கலைப்பயணத்தில் புகைப்படகலைஞராகவும் இருக்கின்றீர்கள் பழைய ஆவணங்கள் இல்லையே…

ஆம் உண்மைதான் எனது கமெராவினால் மற்ற கலைஞர்களின் முகங்களை எடுத்தேனே தவிர என்னை நான் எடுத்துக்கொள்ளவில்லை என்னிடமே கமெரா இருப்பதினால் பிறகு எடுத்துக்கொள்ளலாம் என்று இருந்து விட்டேன். அத்தோடு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்து விட்டேன் அதன் விளைவுதான் என்னிடம் முந்திய பழைய ஆவணங்கள் குறைவு எனலாம்.
நாட்டுக்கூத்து கலையை எவ்வாறு எழுச்சி பெறச்செய்ய வேண்டும்.
விருப்பம் உள்ள இளைஞர்களை கிராமம் தோறும் உள்ளார்கள் அவர்களை ஒன்றிணைத்து பயிற்சிகளை கலைப்பட்டறையும் வழங்குவதுடன் மேடையேற்றங்களையும் செய்யவேண்டும்.
 ஊக்குவிப்புக்களை கலைகலாச்சாரப்பிரிவுகள் செய்ய வேண்டும். மூத்த நாட்டுக்கூத்து கலைஞர்கள் இளைஞர்களை வழிநடத்தவேண்டும் உறுதுணையாக இருக்கவேண்டும். உதாரணமாக எமது கிராமத்தில் இளைஞர்கள் மூவிராசாக்கள் பட்டறை மன்றம் உருவாக்கி துடிப்புடன் செயற்படகின்றார்கள் பாராட்டுகின்றேன்.

நாட்டுக்கூத்தில் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் போது எது இலகுவானது---
நான் பல நாட்டுக்கூத்து நாடகங்களில் மூவிராசாக்கள் ஏரோது அரசனாக வசனம் பேசி நடிக்கும் போது மிகவும் அடர்வசனமாக இருக்கும் அதையும் பேசி நடித்தேன் அத்தோடு பாஞ்சாலி சபதம் நாட்டுக்கூத்தில் துரியோதனன் பாத்திரத்திரத்தில் நடித்துள்ளேன் இப்பாத்திரம்தான்  நான் நடித்த முதல் பாத்திரம் முழுமையாக வசனங்களை பேசுவேன் அப்படியே என்னுடன் நடிக்கும்  ஏனைய பாத்திரங்களின் வசனங்களையும் பேசுவேன் எனக்கு இயல்பாகவே கடவுள் அருளாலும் எனது தந்தையினதும் மாமாவினதும் வழிகாட்டலில் நான் பழகிக்கொண்டேன் நாட்டுக்கூத்தில்   எனக்கான இடத்தினை தக்கவைத்துக்கொண்டேன் நாட்டுக்கூத்தில் பேசாலையில் முடிசு10டா மன்னன் என்று சொல்லும் அளவுக்கு விருப்பத்துடன் நடித்தேன் மக்கள் சொல்ல கேட்டிருக்கின்றேன்.

அதிபர் ஆசிரியரக இருந்து ஓய்வுபெற்றுள்ள நீங்கள் தற்போதைய மாணவர்களின் நிலை பற்றி---
தற்போதைய சு10ழலில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் சுமுகமான செயற்பாடு இல்லை என்று சொல்கின்றார்கள் அதற்கு பல காரணங்கள் உண்டு தற்போதைய கல்விமுறை மற்றும் நவீன சாதனங்களின் பாவனை சினிமா போன்றவை மாணவர்களை மிகவும் பாதிக்கின்றது.
ஆசிரியர்களை கிண்டலடிப்பது அடிப்பது போன்ற பல காட்சிகளை சினிமாவில் நகைச்சுவைக்காகவோ சும்மாவோ காட்டுகின்றார்கள் அதைப்பார்த்த மாணவர்கள் தாமும் அப்படியே செய்ய முயலுகின்றனர் அத்துடன் மாணவர்களின் கல்வித்திறன் நல்ல நிலையில் உள்ளது.
தங்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் முழுமனதுடன் தங்களை தயார்படுத்தி கற்பிக்கின்றார்களா… இல்லையா என்பதை நன்கு புரிந்து கொள்கின்றார்கள் ஒருபாடசாலையில் உள்ள 40 ஆசிரியர்களின் 30 ஆசிரியர்களின் செயற்பாடு இப்படியிருந்தால் அந்த மாணவர்களின் எதிர்காலம் எப்படியிருக்கும் சிந்தியுங்கள்.
அதிபர் ஆசிரியருடனும் ஆசிரியர் மாணவர்களுடனும் நல்ல முறையில் ஒழுங்கான செயற்பாடுகளையும் விழுமியங்களையும் நல்ல புரிதலையும் கொண்டிருப்பார்களானால் தரமான மாணவசமூதாயத்தினையும் ஆரோக்கியமான சமூகத்தினையும் உருவாக்கலாம் அதற்கு அனைவரும் ஒன்றிணையவேண்டும்.

65 வயதிலும் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுகின்றீர்களே எப்படி----

ஆசிரியராக அதிபராக புகைப்படகலைஞராக இருந்து ஓய்வு பெற்று தற்போது எனக்கு மிகவும் பரிச்சையமான தொழிலான மீன்பிடியினை மேற்கொள்கின்றேன்.
மீன்பிடியும் ஒரு கலைதான் என்னிடம் சொந்தமாக ஒரு ரோலர் உள்ளது கிழமைகளில் 03 நாட்கள் ரோலர் கொண்டு மீன்பிடித்து வருகின்றேன் எனக்கு கரவலை விடுவலை பாய்ச்சுவலை  நன்றாக செய்வேன் அன்றைய காலத்தில் பாய்மரக்கப்பலில் வாரித்தண்டுதல் திசைபார்த்து பலவிதமான செயற்பாடுகள் செயல்முறைகள் உள்ளது கஸ்ரப்பட்டு செய்தோம் இன்று நவின வசதிகள் இலகுவானதாக தொழிலினை மேற்கொள்ள உதவினாலும் கஸ்ரங்களும் இருக்கத்தான் செய்கின்றது.

ரோலர் பாவனையால் மீன் இனம் அழிந்து  வருவதாகவும் தடைசெய்யப்பட்டதாகவுள்ளதே அது பற்றி…
சர்வதேச அளவில் ரோலர் தடைசெய்யப்பட்டுள்ளபோதும் மன்னார் பேசாலையில் கிழமையில் 03 நாட்கள் ரோலர் பயன்படுத்த அனுமதியுண்டு சுமார் 176-180 ரோலர்கள் உள்ளது 1974ல் இருந்து பயன்பாட்டில் உள்ளது. இருந்தாலும் இந்தியாவினதும் ஏனையவர்களின் வருகையாலும் பாதிப்பு இருப்பது உண்மைதான்.
இரண்டு வகையான ரோலர் பாவனையுள்ளது அதாவது MIT Roling-மிற் ரோலிங்-மிதப்பு மீன்பிடித்தல்  Bottam Roling -வொட்டம் ரோலிங்-அடியோடு வாரி அள்ளுதல் இதுபாதிப்புதான் ஆனால் பேசாலைக்கடல் சேத்துக்கடல் என்பதால் பரவாயில்லை இரால் சுமார் 05-10 அடிசேத்தில் புதைந்து விடும்அதன் இனப்பெருக்கம் முடிந்த பின்பு வெளியில் வரும் அப்போதுதான் நாங்கள் பிடிக்கின்றோம்
பாதிப்பினை உணர்ந்துள்ளபோதும் பொருளாதாரத்திற்காய்…..

மறக்க முடியாத சம்பவம் ஒன்று
கலைவாழ்வில் அல்ல எனது வாழ்வில் எனது இளமைப்பருவத்தில் புகையிரதத்தில் பயணிக்கின்றேன் கட்டையடம்பன் பகுதியில் அவசரமாக புகையிரதம் நிறுத்தப்படுகின்றது. சிறிது நேரத்தில் புறப்படுகின்றது அப்போது எனது சு10க்கேஸ் ஒருவர் எடுத்து வெளியில் வீசுகின்றார் இன்னொருவர் எடுத்துக்கொண்டு ஓடுகின்றார் நான் பதட்டத்துடன் பாய்ந்து திரத்திக்கொண்டு ஓடுகின்றேன் சிறிது தூரம் ஓடிப்பார்க்கின்றேன் பிடிக்க முடியவில்லை மீண்டும் புகையிரதம் நோக்கி ஓடிவருகின்றேன் நகர்ந்து கொண்டு இருக்கும் புகையிதரத்தில் கடைசி அப்பாரட்மென்டில் ஏறுகின்றேன் டிக்கட்கேட்டு பேசுகின்றார் விபரத்தினை சொல்லுகின்றேன் அவர்முருங்கனில் இறக்கி விடுகின்றார். அன்றோடு போனதுதான் எனது செமினறி வாழ்க்கை.

தங்களின் அனுபவத்தில்இருந்து இளைஞர் யுவதிகளுக்கு----

நாங்கள் எங்களைப்படைக்கவில்லை கடவுள்தான் எங்களைப்படைதிருக்கின்றார் ஒவ்வொருவரினதும் படைப்புக்கு ஒரு நோக்கம் உள்ளது ஒவ்வொருவருக்கும் தனித்திறமைகளை நிறைவாகத்தந்துள்ளார் நாம் தான் அதை அடையாளம் கண்டு வெளிக்கொண்டுவரவேண்டும்.
ஒரு காலம் வரும் என்று காத்திராமல் உடனுக்குடன் செய்யவேண்டியதை உரிய நேரத்தில் செய்யவேண்டும் காலத்தினை தள்ளிப்போடுதல் கூடாது செய்யவேண்டியதை சமகாலத்தில் செய்து முடிப்பதே மிகவும் சிறந்தது. உதாரணமாக அன்று ஒரு இரவில் ஒரு வில்லுப்பாட்டு எழுதுவேன் தற்போது 2மாதங்கள் ஆனாலும் எழுத முடியவில்லையே….

தங்களது சேவைகள் பற்றி----
  • பேசாலை மத்தளக்காரர் குழு(திருமண விழாக்களில் பாரம்பரிய பாடல்களைப்பாடுதல்)
  •  பாடசாலைக்காலத்தில் எப்படி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினேனோ அதுபோல்  இப்போதும் அதிகாலையில் கோவிலில் இருந்து,இறைசிந்தனையும் கருத்துக்களையும் வழங்கி வருகின்றேன்
  • பேசாலை புனித சூசையப்பர் பரித்தியாக சபை உறுப்பினர்(இறந்த வீடுகளில் இரவிரவாக ஒப்பாரி பாடுதல்-குழு)
  • 1982-2006 வரை புகைப்பட பிடிப்பாளராக செயற்பட்டேன்.
  • 03-06-1997 முதல் 20-08-2013வரை கல்விப்புலத்தில் ஆசிரியராக பதில் அதிபராக அதிபராக 37வருடங்கள் 06மாதம் கடமையாற்றி 23-08-2013 ஓய்வுபெற்றுள்ளேன்.
  • மன்.புனித பற்றிமா கழகத்தில் ஆரம்பத்தில் இருந்து 1975-2015வரை 40 ஆண்டுகள் உறுப்பினராகவும் ஓரிருவருடங்கள் செயலாளராகவும் தலைவராகவும் கடமையாற்றியுள்ளேன்.
  • தலைமன்னார் பொலிஸ் எல்லைப்பிரிவுக்குட்பட்ட பொலிஸ் ஆலோசனைக்குழுவில் உறுப்பினர் அடையாள அட்டை உள்ளது.
  • மன்.பற்றிமா ம.வித்தியாலயத்தில் நடைபெற்ற தலைமன்னார் பகுதி பாடசாலைகளுக்கிடையிலான Pநுயுஊநு Pசுழுபுசுயுஆநு நிகழ்வினை தலைமைதாங்கியமை.
  • நாடளாவியரீதியில் 104 இசுறு பாடசாலைகளுக்கிடையிலான கொழும்பில் வலுவூட்டல் நிகழ்ச்சி திட்டத்தில் அதிபராக கலந்து கொண்டமை.
  • பேசாலையில் 2007ம் ஆண்டில் நடைபெற்ற அருளப்பர் ஈரிராக்கதை ஆரம்ப நிகழ்வின் போது அருட்பணிபேரவை செயலாளராக சிறப்புரையாற்றியமை.
  • அருளப்பர் நாடகத்தில் நான் ஏரோதாகவும் எனது மனைவி ஏரோதியாளாகவும் நடித்திருந்தோம்.
  • எனது மனைவி SDC செயலாளராகவும் 1992-1997 05வருடங்கள் இருந்துள்ளார். 
  • பல நூல்களுக்கு ஆக்கங்கள் எழுதியுள்ளேன்.
  • மன்னார் பேசாலை பிரதேச பொலிஸ் ஆலோசகர் குழு உறுப்பினர்
  • 2016 வரையான புனித வெற்றியன்னை ஆலயத்தில் 5வருடங்களாக உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெறும் மாணவச்களுக்கான தரம்-09 மூவரில் நானும் எனதும் மனைவியும் இருவர்
  • 2012-2016 எனது மனைவி செல்வதி குருஸ்  திருப்பாலத்துவ பிரதம ஊக்குவிப்பாளராக கடமையாற்றியுள்ளார்
  • தாங்கள் பெற்ற விருதுகளும் பட்டங்களும் 
  • மன்னா பத்திரிகை பாராட்டுச்சின்னம்-28-12-2013
  • ஆசிரியர் கௌரவிப்பு-விழிகள் கலாமுற்றம்-2014
  • ஆசிரியர் கௌரவிப்பு-கிறீடம்-தமிழர் முன்னேற்றக்கழகம்-கொழும்பு
  • கலைஞர் விருது கலாசாரப்பேரவை மன்னார்-30-11-2014
  • கலைஞர் சங்கமம்-புலவர் செபஸ்தியான் நினைவாக-2004
  • வடமாகாண பாராம்பரிய கலைஞர்களுக்கான ஆளுநர் விருது-28-06-2014
  • Higher Education Scholaship Awared-2012
    • Grade 5 Scholaship-AIA Principal Apprace
    • Bachelor  Of Education B.Ed-01-06-2008 இவற்றுடன் பல இடங்களில் பொன்னாடை கௌரவமும் பெற்றுள்ளேன்.

நியூமன்னார்இணையம் பற்றி—
நல்லதொரு செயற்பாடு தான் மன்னாருக்கென்று உருவாக்கி மன்னார் நிகழ்சிகளையும் கலைவிழாக்கலையும் அத்துடன் சிறப்பாக கலைஞர்களை கௌரவிக்கும் வெளிப்படுத்தும் நோக்கில் விடுதேடிவந்து நேர்காணல் கண்டு அதுவும் முதற்தடவையாக கலந்துரையாடி வெளிக்கொணருவது சிறப்பான விடையம்.
இன்னும் தங்களின் இணையத்தின் ஊடாக நிறையக்கலைஞர்களை வெளிக்கொணரவேண்டும் என்பது எனது விருப்பம் இணைய நிர்வாகிக்கும் உங்களுக்கும் இணையக்குழுமத்தமிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்களின் இச்சேவைக்கு இறைவன் நிறைவான ஆசிகள் வழங்குவார் தொடரட்டும் உங்கள் பணி…

நியூமன்னார் இணையத்திற்காக
சந்திப்பு-வை-கஜேந்திரன்-
















நாட்டுக்கூத்து நாடகங்களின் எழுச்சிக்கு கலைப்பட்டறைகள் உருவாக்க வேண்டும்….C.M.சேவியர் பெர்னாண்டோJP Reviewed by Author on May 05, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.