அண்மைய செய்திகள்

recent
-

எமது பாரம்பரியத்தினை இளையதலைமுறைக்கு கையளிக்க வேண்டும்....இ.யக்கோவு சேரம்


கலைஞனின் அகம் கணணியில் முகம் விம்பம் பகுதியில் ஆய்வாளர் பல்துறைக்கலைஞர் மறை சமூக தமிழ் தன்னார்வப்பணியாளரும் சமாதான நீதவானாகிய இறம்மிகேல் யக்கோவு சேரம் அவர்களின் அகத்திலிருந்து….

தங்களைப்பற்றி-
என்னைப்பற்றி சொல்ல பெரிதாக.....நான் பெரியகுளம் பறப்பாங்கண்டல்; சொந்தமிடமாகவும் தற்போது முள்ளிக்குளம் இரணை இலுப்பைக்குளம எனது குடும்பத்தினருடன் சமூகப்பணியில் என்னை இணைத்து செயலாற்றி வருகின்றேன்.

தங்களது கல்விக்காலம் பற்றி-
அது ஒரு போராட்ட காலம்தான் இருந்தும் க.பொ.த சாதாரணதரம் வரை கற்றதோடு காலச்சூழ்நிலையால் இந்தியா சென்று மறைபணியாளராக(வேதியர்)டிப்ளோமா கற்கையினை 1966-1968 முப்பணி நடுநிலையம் திண்டிவனம் தென்இந்தியாவில் பெற்றுக்கொண்டேன்.

தங்களது அழைப்பு பற்றி---
எனது இறையியல் கற்கையினை நிறைவு செய்த பின்பு 30-05-1968 மடுத்திருத்தாலத்தில் அனுப்புதற்சடங்கினை பேரருள் ஜெறோம் எமிலியானுஸ் பிள்ளை யாழ் ஆயர் அவர்களால் பெற்றுக்கொண்டேன்.

தங்கள் பணியின் தன்மை பற்றி---
பணி விருதுவாக்கு- “அவர்வளர்க”  “எல்லோருக்கும் எல்லாமாக”
இலக்கு-முழுமனித விடுதலை(ஆன்மீகம்-அரசியல்-சமூக-பொருளாதார உடல் சார்ந்தவை)
தாங்கள் ஈடுபடும் பணிச்செயற்பாடுகள் பற்றி---
  • மறைப்பணி
  • பொதுப்பணி
  • தமிழ்ப்பணி
  • கலைஞர்.கவிஞர்
  • ஆய்வாளர் யோகாசன ஆசிரியர்.
 யோகாசன ஆசிரியரான நீங்கள் பயிற்ச்சி வழங்கியுள்ளீர்களா...
ம்ம் நிறையவே பயிற்ச்சிகளை வழங்கியுள்ளேன். (இப்போதும் நான் கலையில்  பயிற்ச்சியை மேற்கொள்ளுகின்றேன்) பல இளைஞர்களுக்கு பழக்கி சாகாசங்கள் செய்துள்ளோம் ஒரு முறை துவிச்சக்கர வண்டியை பின்னால் ஓடி கிளிநொச்சியில் நடந்த போட்டியில் முதலாமிடம் பெற்றுள்ளேன். எனது மகனும் எனது ஊர் இளைஞர்களும் அருமையாக செய்வார்கள் அதற்கான ஆவணங்கள் ஒன்றும் தற்போது என்னிடம் இல்லை முள்ளிவாய்க்கால் நந்திக்கடலில் கரைந்து போனது.

பணியாற்றிய தளங்கள் பற்றி---
யாழ் மறைமாவட்டம் மறைக்கல்விப்பணி
யாழ்-ஹட்லிக்கல்லுரி
புனித பத்திரிசியார் கல்லூரி
புனித அந்தோனியார் கல்லூரி  கல்லூரிகளிலும் இடங்களிலும் பணியாற்றியுள்ளேன்.
பங்குப்பணி-ஊர்காவற்துறை-பருத்திதுறை-உரும்பிராய்-நாரந்தனை தீவுப்பகுதிகள்
கலைப்பணி-திருமறைக்கலாமன்றம்.

தங்களின் சேவைகளுக்கு பாராட்டி கௌரவித்த விருதுகள் பற்றி---
  • சிறந்த சமூகசேவையாளர்
  • சிறந்த கவிஞர்
  • சிறந்த எழுத்தாளர்
  • ஆய்வாளர் கொளரவிப்பு
  • ஒருங்கிருக்கை நெறியாளர்
  • பல்துறைக்கலைஞர் கௌரவிப்பு-மடு-24-02-2016
  • நினைவுச்சின்னம்- தமிழ்தூது தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா –தமிழ்சங்கம்-02-03-04-2015
  • சிறந்த சமூகசேவையாளர வடக்கு மாகாணம் -2015

தாங்கள் பணியாற்றும் அமைப்புக்கள் பற்றி---

  • செயலாளர்-தேசியமறைபரப்பு ஆணைக்குழு தமிழ்ப்பிரிவு-1983-1984)
  • தலைவர்-மறையாசிரியர் ஒன்றியம்
  • உறுப்பினர்-வன்னிமாவட்ட விளையாட்டு ஒருங்கிணைப்புக்குழு
  • தலைவர்-கிராம அபிவிருத்தி சங்கங்களின் சமாசம்-மடு
  • செயலாளர்-கமக்கார அமைப்புகளின் சமாசம்-மடு
  • மாந்தை மேற்கு பிரதேசசபை ஆலோசனைக்குழு மனிதஉரிமை பெண்கள் சிறுவர் உரிமை பாதுகாவலர்
  • செயற்குழு உறுப்பினர்-ம.து.ம.சங்கம்-மன்னார்
  • செயற்குழு உறுப்பினர்-தமிழ்சங்கம் மன்னார்
  • உறுப்பினர் மத்தியஸ்சபை-மடு மன்னார்
  • மன்னார் மாவட்ட சமாதான நீதவான்
  • பொதுநிலையினர் ஆணைக்குழ-தூய யோசேவாஸ் மன்றம். மன்னார்

இவ்வாய்வு தொடர்பான ஆர்வம் தங்களுக்கு ஏற்படுத்தியவர்கள் பற்றி---
பலர் உள்ளனர் அதில் முதன்மையானவர் அருட்தந்தை ஜெயசீலன் அடிகளார்-யாழ்ப்பாணம் ,உலகத்தமிழ்ப்பேரவை தலைவர் அருட்தந்தை எஸ்-இம்மானுவேல் அடிகளார்-
அருட்தந்தை தமிழ்நேசன் அடிகளார் இவர்களுடன் இன்னும் சிலர் உள்ளனர்.

இச்செயற்பாடு கடிணமாக இல்லையா---
இல்லை.... எனக்கு படிப்பித்தவர்கள் என்னிடம் கற்றவர்கள் எனக்கு தெரிந்தவர்கள் என்னை தெரிந்தவர்களிடம் எனது எண்ணத்தினை தெளிவு படுத்துவேன் அவர்கள் புரிந்து கொள்ளுவார்கள் அத்துடன் பழைமையான ஏடுகள் கல்வெட்டுக்கள் ஓவியங்கள் இன்னும் பலவற்றினை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுக்கவேண்டும் என்பதற்கான செயற்பாடுதான் இது.

தற்போது இப்பணியில் சவாலான விடையம்…
ஒரு நாடகம் 30 ஊர்கள் 03 இரவுக்கதைகள் அரங்கேற்றினோம் அதுதான் சந்திரகாசன் நாடகம் தான் ஆம் ஏடுகள் வாசிப்பவர்கள் எமது ஊரில் பலர் உள்ளார்கள் ஆனால் அவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதில்லை இவர்களையும் இவ்வாறான செயற்பாடுகள் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு குழுவாக செயற்படவேண்டும் அதுதான் சிறப்பான விடையம். ஆதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளேன்.

தங்களது மறைபணி எனும் போது----
எனது பிரதான பணியே மறைபணிதான் அது ஆளப்பரியது சுமார் 50 வருடங்களுக்கு மேலாக பணியாற்றுகின்றேன் அதிலும் சமயப்பணி அதிகமானதுதான் நிறையவே உள்ளது அதிலும் குறிப்பாக முள்ளிகுளத்தில் எனது செயற்பாட்டில் சிற்றாலயம் அமைத்தல்  அதுபோல் எனது மறைபரப்பு பங்கு தச்சனாமருதமடுப்பகுதியில் உருவாக்கினேன்.
மறைபற்று விசுவாசம் இன்றி மதம் மாறுபவர்களை தடுத்தல் இறைபற்றறுள்ளவர்களாக தொடர்ந்து செயற்படுதல்.

கவிஞர் கலைஞரான நீங்கள் நூல் ஏதும் வெளியிட்டு உள்ளீர்களா…
இல்லை இதுவரை வெளியிடவில்லை ஆனால் எனது கவிதை கட்டுரை பாடல்கள் ஆய்வுக்கட்டுரைகள் சமயக்கட்டுரைகள் என்பனவற்றை ஞானஒளி-மன்னா-உதயன்-தினக்குரல்-பாதுகாவலன் போன்ற பத்திரிகைகள் எனது ஆக்கத்தின் களமாக அமைந்துள்ளது. அதுவே போதும் என நினைக்கின்றேன்.

தற்போது எழுத்துப்பணியில் உள்ளீர்களா…
ஆம் சில ஆய்வுகள் செய்துகொண்டுதான் இருக்கின்றேன். முதல் கட்டமாக எமது பாரம்பரியமிக்க தூய கூட்டத்து மாதா ஆலய வரலாறுகளை ஆய்வுசெய்து கொண்டிருக்கின்றேன் மிகவிரைவில் அதை ஆவணப்படுத்த வேண்டும் என எண்ணியுள்ளேன்.

மன்னாரின் பழமையை பேணுவதற்கான தற்போது தாங்கள் செயலாற்றும் பணிபற்றிச்சொல்லுங்கள்---
தொல்பொருட்களை தேடுதல் சேர்த்தல் அதாவது ஓலைச்சுவடிகள்-சிற்பங்கள்-ஓவியங்கள்- நூல்கள்-கல்வெட்டுக்கள்-வரலாற்று சின்னங்கள்.பேணுதல் வேண்டும்.
பறப்பாங்கண்டல் தூய கூட்டத்துமாதா திருத்தல மேம்பாட்டு பணிகள்.
விழிப்புணர்வு பரப்புரை-ஆலய உறுப்புரிமைக்கிராமங்களுக்கும் ஏனையோருக்கும் ஆய்வாளர்கள் திருத்தலப்பயணிகளுக்கும்  தன்னார்வ இறைவார்த்தைப்பணி புரிதல் இவ்வாறு எனது செயற்பாடுகள் தொடர்கின்றன.

தாங்கள் செய்ய எண்ணியுள்ள பாரிய செயற்பாடுகள் திட்டங்கள் ஏதும் உள்ளதா…
ஆம் அருமையான கேள்வி..,பறப்பாங்கண்டல் திருதலத்தில்  ஒரு அருங்காட்சியகமும் நூல்நிலையமும் அமைக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு அதற்கு பலமுயற்சிகளை எடுத்துவருகின்றேன் பலரிடம் பேசியுள்ளேன். இறைவனின் திருவருளால் மிகவிரைவில் நிறைவேறும் என உறுதியாக நம்புகின்றேன்.

மன்னாரின் பிரதிநிதி நியூமன்னார் இணையம் பற்றி-
நான் ஊடகங்களில் பத்திரிக்கையினை தான் அதிகம் வாசிப்பேன் ஆனாலும்  எனதுன் பேரன் சொல்லக்கேட்டிருக்கின்றேன் இன்று நீங்களே  நேரில் என்னை சந்தித்து  நேர்காணல் கண்டுள்ளீர்கள். நான் எவ்வாறு பணியாற்றுகின்றேனோ அது போல தங்கள் பணியும் சிறப்பானதுதான் பாராட்டுக்குரியது.
மன்னாரின் பெருமையை வெளிக்கொணர்வதில் பெரும்பங்காற்றுகின்றீர்கள் உங்களது சேவை மன்னார் மண்ணுக்கு தேவை...உங்களுக்கும் உங்களுடை நியூமன்னார் நிறுவனருக்கும் குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நியூமன்னார் இணையத்திற்காக
சந்திப்பு- வை-கஜேந்திரன்-





















எமது பாரம்பரியத்தினை இளையதலைமுறைக்கு கையளிக்க வேண்டும்....இ.யக்கோவு சேரம் Reviewed by Author on May 26, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.