அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு


கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள சுரபி நகரில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்பட்ட 25 வீடுகளும் அதன் பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சிக்கு இன்று விஜயம் செய்த அமைச்சர் சஜித் பிரேமதாச, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்பட்டுள்ள 69வது மாதிரிக்கிராமமான கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி சுரபி நகர் கிராமத்தை திறந்து வைத்துள்ளார்.


அத்துடன், அங்கு அமைக்கப்பட்ட 25 வீடுகளையும் அதன் பயனாளிகளிடம் கையளித்துள்ளார்.
இந்நிகழ்வில் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இன்றைய நிகழ்வில் “கிராமத்திற்கு கிராமம், வீட்டிற்கு வீடு” என்ற சமட்ட செவன கடன் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காசோலைகளும், கண்பார்வை குறைந்தவர்களுக்கான மூக்குக்கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு Reviewed by Author on May 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.