அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் மின்பட்டியல் பார்த்து மயங்கி விழும் மக்கள்.......


மன்னார் மாவட்டத்தில் மின்பட்டியல் பார்த்து மயங்கி விழும் மக்கள் காரணம் புரியவில்லையா.....அங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் தொகையின் பெறுமதியினைப்பார்த்து....இரண்டு மாதத்திற்கு ஒரு தடவை....

கடந்த பல மாதங்களாக இவ்வாறான நிலைமைதான் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றார்கள்......

மின்சார சபையினரிடம் கேட்டால் இரண்டு மாதங்களை சேர்த்துதான் அப்படி வருகின்றது அடுத்த மாதம் சரியாகி விடும் என்று சொல்வதும்.
இல்லாவிடில்.....
  • கடைசியாக கட்டிய மின்பட்டியல் போட்டோக்கொப்பியும் ஒரு கடிதமும் எழுதிக்கொண்டு வாருங்கள் என்பார்கள் அப்படியும் எழுதிக்கொண்டு போனால் வாங்கிப்பார்த்துவிட்டு மேலதிக விளக்கம் சொல்லி திரும்பி அந்தபோட்டோக்கொப்பியையும் எம்மிடமே தந்து விடுவார்கள்.
இல்லையானால் வாங்கி வைத்துவிட்டு போங்கள் எங்களிட ஆக்கள் உங்களின் வீட்ட வந்து பார்ப்பார்கள் என்று சொல்வதும்.
  • சில நேரங்களில் சம்மந்தப்பட்ட அதிகாரி கதைக்கமாட்டார் அங்கு பணிபுரியும் சிற்றூழியர் வேறுஅலுவலர்தான் பதில் சொல்வார் போகும் மக்களும் அவர் சொல்வதைக்கேட்டுக்கொண்டும் அப்படியே செய்துகொண்டும் போனால் திரும்பி இப்படிச்செய்யச்சொன்னது யார்.....என்று கேட்பார்கள் அப்போது அந்த சிற்றூழியர் இருக்கமாட்டார் இருந்தாலும் தெரியாது போல் தான் இருப்பார் அப்போது ஏமாற்றம் அடைவது மக்களே.... அதுவும் தூரஇடங்களில் இருந்து வருபவர்களும் விபரம் தெரியாதவர்களும் தான்
வாயிற்காவலர் உள்ளே போக வேண்டாம் நிறைய பேர் நிற்கினம் இஞ்சால நில்லுங்க என்று உரக்க பேசுவதும் எரிந்து விழுவதும் ஒருபக்கம்
 அதே சிலருக்கு......
விண்ணப்ப படிவம் நிரப்பவோ.......கடிதம் எழுதும் முறையோ.....தெரியாது அவர்களுக்கான வழிவகைகளை செய்து கொடுக்காமல் பிறகு வாருங்கள் என தவனை சொல்லி அனுப்புவது.
பொறுப்பற்ற பதில்கள்........இரண்டு கிழமைகளில் சரிவரும்

மின்வாசிப்பாளர் தொலைவில் நின்று கொண்டே குத்துமதிப்பாக ஒரு தொகையினை போட்டுக்கொடுத்துவிட்டு போகின்றார்.
சிலர் மின்பட்டியலை பார்ப்பார்கள் பலர் பாரப்பதே இல்லை அப்படிப்பார்க்கின்றார்கள் என்றால் சிவப்பு அறிக்கை இருந்தால் மட்டுமே... இங்கும் பாதிக்கப்படுவது பாமர விபரம் விளங்காதவர்களே....
  •  விபரம் தெரிந்தவர்கள் தேடிவந்து கதைத்து சரிப்படுத்திக்கொள்கின்றனர்.
ஏனையோர் தொழில் நிமித்தம் வரமுடியாதவர்கள் உடல்சார்பிரச்சினைகளின் நிமித்தம் வரஇயலாதவர்கள் 
தூர இடங்களில் இருந்து வரமுடியாதவர்கள் நிலைமையை எண்ணிப்பாருங்கள்.

  • மின்வாசிப்பாளர் காலையில் வீட்டுமின்மானியைப்பார்வையிடுதலும் மின்பட்டியலை கதவுகளில் வேலிகளில் சொருகி விடுதலும்  
  • வளவினில் போட்டு விட்டு போதலும் 
  • அயல்வீடுகளில் கொடுத்துவிட்டு போவதாலும் உரியவர்களுக்கு உரிய நேரத்தில் மின்பட்டியல் கிடைப்பதில்லை அதனால் இரண்டு மூன்று மாதங்கள் கட்டமால் தொகை அதிகமாகின்றது.
இதுயாருடைய தவறு ….
மின்பாவனையாளர் ஒரு நாளைக்கு எத்தனை வீடுகள் பார்வையிடுகின்றார் என்று கணக்கில்லை எத்தனை மின்பட்டியலை கிழிக்கின்றார் என்பதுதான் கணக்கு…இது சரியா…

சில மின்வாசிப்பாளர்கள் குத்தகை அடிப்படையில் பகுதிநேரமாக கடமைபுரிகின்றவர்களாக இருக்கின்றார்களா.....
அப்படிப்பொறுப்பில்லாமல் செயலாற்றுகின்ற அலுவலர்களை நிறுத்திவிட்டு புதிய நல்ல தரமான மக்களின் வயிற்றில் அடிக்காத பணியாளர்களை வேலைக்கு எடுங்கள்….

தன்னுடைய விருப்பத்திற்கு தொகையினை போடாமல் மின்மாணியை சரியாக பார்தது  சரியான தொகையினை போடுங்கள் ஒரு ருபா என்றாலும் மக்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.....
  • மின்பட்டியல் யுனிற் விலைகளை மக்களுக்கு தெளிவாக விளங்கப்படுத்துங்கள்
  • அதிகம் மின்சாரம் செலவாகும் பொருட்களை அடையாளப்படுத்துங்கள்.
என்ன பாவிக்கின்றாய்...? என்ற கேள்வி தேவையில்லை
என்ன பாவித்தால் மின்சாரத்தொகை அதிகமாகும் என்பதைதான் தெளிவு படுத்த வேண்டும்….


அதுமட்டுமா மின்சாரம் தடைப்பட்டாலோ....  மின்கசிவு ஏற்பட்டாலோ.... எமது மன்னார் மின்சார சபைக்கு தொடர்பினை ஏற்படுத்தினால் உடனே கிடைக்கும் பதில் யாழ்ப்பாணத்துக்கு அடிச்சு சொல்லுங்க…
யாழ்ப்பாணத்திற்கு அடிச்சா அவர் முதலில் இருந்து ஆரம்பிப்பார்.....
  • எங்க.....
  • எந்த இடம்......
  •  வீட்டு இலக்கம்
  • விலாசம்..... 
  • மின்பட்டியல்  இலக்கம்......
எழுதி எடுத்துக்கொண்டு இன்னும் 30 நிமிடத்தில் உங்கள் இல்லத்திற்கு எங்கட ஆக்கள் வருவாங்க….

இது என்ன நடைமுறை…சற்று சிந்தியுங்கள் மின்கசிவு ஏற்பட்டு வீடோ..... கடையோ..... ஏனைய இடங்களோ...... எரிந்து பாதிப்புக்குள்ளாகின்றபோது மன்னார் மின்சாரக்கிளைக்கும் மாறி யாழ்ப்பாண மின்சார சபைக்கும் அழைப்புகளை ஏற்படுத்தி தகவலை தெரிவித்து மின்சார சபை ஊழியர்கள் வரும் வரை சேதம் அந்த பிரச்சினை பெரும் பிரச்சினையாக விபரிதமாகவல்லவா முடியும். 
(இரண்டு முறை அழைப்பினை ஏற்படுத்தி தகவலை தெரிவிப்பதற்கு தொலைபேசியில் பணம் இருக்குமா..... சிந்தியுங்கள் 1- நிமிடம் 2.50ருபா)
 ஏன் மன்னாரில் முறைப்பாட்டு அலுவலகம் ஒன்றை உருவாக்கி மக்களின் பிரச்சினையை தீர்க்க முடியாதா… 

ஒருவரின் மனக்குமுறல் இதோ….
நம் வீட்டு மின்சு ற்று மின் பாவனைப் பட்டியல்
இலங்கை மின்சார சபை மதிப்பீட்டாளர் இதை கடைப்பிடிக்கின்றாரா மற்றும் மாதாந்த மானியளவை அடுத்த மாதாத்துடன் சேர்து மதிப்பிடுகின்றாரா அவதானியுங்கள்.
  • 1 - 39 Units. =7.75 Cts
  • 40-78 Units. = 7.75 Cts
  • 79-117 Units. = 10.00 Rs
  • 118-156 Units = 27.75 Cts
  • 157-180Units. = 32.00 Rs
  • Over 181Units = 45.00 Rs
உதாரணமாக.
ஒருவர் அறுபது அலகுகளுக்கு உள் பாவிக்கப்பட்டிருந்தால்
1-30அலகுகளுக்கு 2.50Cts
31-60 அலகுகளுக்கு 4.85Cts
இவருக்கு அறுபது அலகுகளுக்கான கட்டணமாக ரூபா 220.50வே பில் தொகையாக வரும்.
அதேவேளை அறுபது அலகுகளுக்கு மேல் பாவிக்கப்பட்டிருந்தால்
  • முதல் 78 அலகுகளுக்கு 612.30ம்
  • 79-117 அலகுகளுக்கு 390.00ம்
  • 118-156 அலகுகளுக்கு 1,082.25ம்
  • 156-180அலகுகளுக்கு 768.00ம்
  • 180இற்கு மேற்பட்ட ஒவ்வொரு அலகிற்கும் ரூபா 45வீதமும் அறவிடப்படும்.
ஆனால் சாதாரணமாக வீடுகளில் மாதாந்தம் 117அலகுகளுக்கு குறைவாகவே பாவிக்கப்படுவது வழக்கம்.
ஒரு வீட்டில் 117அலகு பாவிக்கப்பட்டிருந்தால் அவருக்கான கட்டணமாக
முதல் 78அலகுகளுக்கு 7.85ப்படி ரூபா 612.30 உம் 39அலகுகளுக்காக 10.00ரூபாய் படி 390.00 ரூபாவுமாக மொத்தம் 1002.30 ரூபாவே மின் கட்டணமாக காணப்படும்.
ஒரு வீட்டில் 156 அலகு பாவிக்கப்பட்டிருந்தால் அவருக்கான கட்டணமாக
முதல் 78அலகுகளுக்கு 7.85ப்படி ரூபா 612.30 உம் 39அலகுகளுக்காக 10.00ரூபாய் படி 390.00 ரூபாவுமாக
39 அலகுகளுக்கு 27.75 ப்படி ரூபா 1082.85 உம்
மொத்தம் 2084.55 ரூபாவே மின் கட்டணமாக காணப்படும்.

180 அலகு பாவித்திருந்தால் 24 மேலதிகமான அலகுகளுக்கான கட்டணமான 768.00ரூபா உடன் சேர்த்து மொத்த மின் கட்டணமாக ரூபா 2852.55 காணப்படும்.
ஆனால் இங்கு ஒருவர் தொடர்ச்சியாக ஆறு மாதங்களிற்கு மொத்தமாக 702 அலகுகள் பாவித்துள்ளார் எனில் சராசரியாக மாதம் ஒன்றிற்கு 117 அலகுகளே பாவித்துள்ளார். ஆகவே இவருக்கான மாதாந்த கட்டணமாக ஒரு மாதத்திற்கு ரூபா 1002.30 வே அறவிடப்பட வேண்டும். ஆகவே ஆறு மாதங்களிற்கான கட்டணமாக 702 அலகுகளுக்கும் மாதாந்த சராசரிப்படி 6013.80 ரூபா வே அறவிடப்படல் வேண்டும்.

ஆனால் தற்போதைய மின்பட்டியல் படி ஆறு மாதங்களிற்கான மின் கட்டணமாக 702 அலகுகளுக்கு 26342.55 ரூபா விதிக்கப்படுகின்றது.
ஏனெனில் நீங்கள் ஆறு மாதங்களாக பாவித்த மின் கூறுகளை ஒரு மாதத்தில் பாவித்ததாக கணித்து மின் கட்டணம் தயாரிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு மாதமும் மின்மானி வாசிப்பு எடுக்காமை பாவனையாளரது பிழை அல்ல.......

குறை காண்பது எமது நோக்கமல்ல...

மக்களின் குறைகள் தீர்க்கப்படுவதே எண்ணம்.... 

சிந்திப்போம் சிறப்பாக செயலாற்றுவோம்…

-மன்னார்விழி-



மன்னார் மாவட்டத்தில் மின்பட்டியல் பார்த்து மயங்கி விழும் மக்கள்....... Reviewed by Author on May 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.