அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பாடசாலைகளுக்கிடையிலான விவாதப்போட்டியில்....புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரி....முதலிடம்




தேசிய சமாதான பேரவையின் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் அதன் 'மன்னார்  ஊடக உப குழு அணியினர்' ஏற்பாடு செய்த பாடசாலை மட்டத்திலான விவாதப்போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வு நேற்று 19-05-2018 சனிக்கிழமை காலை -09 மணியில் இருந்து மாலை வரை நடைபெற்ற விவாதப்போட்டியில்  இறுதி  நிகழ்வாக மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் இடம் பெற்றது.
இதே வேளை பெண்களை மையப்படுத்தி 'தந்தையுமானாள்' எனும் ஆவணப்படமும் வெளியீடு செய்யப்பட்டது.

குறித்த நிகழ்வுக்கு விருந்தினர்களாக 
மன்னார் பிரதேசச் செயலாளர் M.பரமதாசன்
மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன்,
மன்னார் நகர சபை உறுப்பினர் யோசப் தர்மன், 
சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையின் அதிபர் T.தனேஸ்வரன், 
பேசாலை முருகன் கோவில் குருக்கள் மஹாஸ்ரீ தர்மகுமார குருக்கள் மற்றும் தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட இணைப்பாளர்.A.மெடோசன்,
OPNEE-ஓபன் நிறுவனத்தின் இணைப்பாளர் A.சுதாகரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் விவாதப்போட்டிகள் இடம் பெற்றது.

வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு வெற்றி கேடையம்,சான்றிதழ் மற்றும் பதக்கம் என்பன விருந்தினர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 முதல் மூன்று இடங்களை பெற்றுக்கொண்ட பாடசாலைகள்


  1. மன்.புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை-முதலாமிடம்
  2. மன்.சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை-இரண்டாமிடம்
  3. மன்.அடம்பம் மத்திய மாகாவித்தியாலயம்.மூன்றாமிடம்
சிறந்த பேச்சாளர்கள்
  • சிறந்த ஆண் பேச்சாளர்- S.Vijay- மன்.அடம்பன் மத்திய மாகாவித்தியாலயம்.
  • சிறந்த பெண் பேச்சாள்ர்- R.K.M.Juliet மன்.புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை

கலந்து கொண்ட 08 பாடசாலைகள்
  1. மன்.புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை
  2. மன்.அடம்பன் மத்திய மாகாவித்தியாலயம்.
  3.  மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை
  4. மன்.சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை
  5. மன்.நானாட்டான் மகா வித்தியாலயம்
  6. மன்.ஆண்டான்குளம் றோ.க.த.க.பாடசாலை
  7. மன்.பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலயம்
  8. மன்.அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை 

பங்குபற்றிய நடுவர்கள்
  • திரு.R.செபஸ்ரியன்
  • திரு.P..செல்வேந்திரன்
  • திருமதி A.பௌலா வாஸ்
  • திருமதி  I.N.J.சிறிதரன் குருஸ்
  • திரு.J.கமல் ராஜ்
  • திரு.V.கஜேந்திரன்
 இவ்வாறான போட்டிகள் மூலம் எமது மன்னார் மாவட்டத்தின் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் ஒரு களமாக இது அமைந்திருந்ததுடன் ஏனைய மாவட்ட மாணவர்களுடன் போட்டி போடுகின்ற அளவுக்கு ஒரு முன்னாயத்தமாகவும் அமைந்தது.

இருப்பினும் மாணவ மாணவிகளிடையே இன்னும் தேடிக்கற்றல் வாசிப்புத்தன்மை  ஆராய்ந்து அறிதல் பரந்துபட்ட பொதுஅறிவு இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும்.
அதற்கு மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்றிணையவேண்டும் மாணவர்களுக்கு பாராட்டுக்கள்.
நிகழ்ச்சித்தொகுப்பினை ஜே.நயன் வழங்கியிருந்தார்.

-வை.கஜேந்திரன்-

 





















மன்னார் பாடசாலைகளுக்கிடையிலான விவாதப்போட்டியில்....புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரி....முதலிடம் Reviewed by Author on May 21, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.