அண்மைய செய்திகள்

recent
-

தமிழின அழிப்புக்கு நீதி கோரி டென்மார்கில் கவனயீர்ப்பு பேரணி -


ஈழத்தமிழினம் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்டு இன்றுடன் 9 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் டென்மார்கின் தலைநகரில் தமிழின அழிப்புக்கு நீதி கோரி கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றுள்ளது.
இறுதி யுத்த நினைவுகளை சுமந்தவண்ணம் டென்மார்க் வாழ் தமிழ்மக்கள் டென்மார்க் Kongens Nytorvஇல் ஒன்றுகூடி அங்கிருந்து பேரணியாக சென்று படுகொலை செய்யப்பட்ட மக்களையும், மாவீரர்களையும் நினைவுகூர்ந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, Bertal Thorvaldsens Plads எனும் இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நினைவிடத்தில் ஈகைச்சுடரேற்றி மலர் வணக்கம், அகவணக்கம் செலுத்தியுள்ளனர்.
இதன்போது, படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக டெனிஸ் மொழியில் கவிதைகள், பேச்சுக்கள் மற்றும் டென்மார்க் பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுகளும் நடைபெற்றுள்ளன.

டென்மார்க் அரசின் 179 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்று அமைச்சர்களிடமும் மொத்தம் 192 பேர்களின் கைகளில் சேரும் வண்ணம் அறிக்கை ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் மௌனமாக இருக்க சில நாடுகளின் ஆதரவுடன் எமது ஆயுதப்போராட்டத்தை நசுக்குவதற்கு சிங்கள பேரினவாதிகள் உறவுகளை கொன்று குவித்தனர்.

எத்தனையோ எமது தமிழ் பெண்களை மானபங்கப்படுத்தி படுகொலை செய்ததுடன், பச்சிளம் குழந்தை முதல் எமது உறவுகளின் உடல்கள் அங்கும் இங்குமாக சிதறிக்கிடந்தன அந்த முள்ளிவாய்க்கால் மண்ணில்.

பாதுகாப்பு வலயம் என அறிவித்து அப் பகுதிகளில் உலக நாடுகளினால் தடை செய்யப்பட்ட கொத்துகுண்டுகளை எம் மக்கள் மீது வீசி எறிந்தனர். எங்கே ஓடுவது என தெரியாமல் எமது உறவுகள் அதே மண்ணில்தான் பல ஆயிரக்கணக்கில் உயிர்நீத்தனர்.

இன்றும் மாறாத வடுக்களாக எத்தனையோ ஆயிரம் பேர் அங்கவீனர்களாக்கப்பட்டு இன்றும் முள்ளிவாய்க்காலின் வடுக்களை சுமந்தவண்ணம் உள்ளனர். இந்நாள் தமிழர்களின் இன அழிப்பு நாளாக உணர்த்தி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழின அழிப்புக்கு நீதி கோரி டென்மார்கில் கவனயீர்ப்பு பேரணி - Reviewed by Author on May 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.